31 Oct 2007

01.11.2007 முதல் அறிமுகம்: இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை பி.எஸ்.என்.எல். செல்போனில் பேச பாதி கட்டணம்

சென்னை, அக். 31-
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சலுகைகள் வழங்க தவறியதில்லை. இந்த ஆண்டு தீபாவளி பண் டிகையை யொட்டி ஒரு அதிரடி சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
செல்போன் சந்தாரர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அளிக்கிறது. செல்போனில் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை பேச பாதிக் கட்டணம் நிர்ணயித்துள்ளது.
பி.எஸ்.என்.எல். ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு சந்தாதாரர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடையலாம். `அனந்த்' திட் டத்தில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. ஒரு வருடம் இன்கம்மிங் கால் வசதி கொண்ட `சுமோ' திட்டத்தில் உள்ளவர்களுக்கு இந்த சலுகை வழங்குவது குறித்து பரிசீலிக் கப்படுகிறது.
இந்த இரு திட்டங்களில் உள்ள சந்தாதாரர்கள் தவிர ஏனைய பி.எஸ்.என்.எல். சந்தா ரர்களுக்கு பாதி கட்டணம் திட்டம் பொருந்தும் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.
`நைட் காலிங்' என்று அழைக்க கூடிய இந்த சலுகை நாளை 1-ந் தேதி (நவம்பர்) முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இரவு 11 மணிக்கு மேல் செல் போனில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பேசினால் பாதிக்கட்டணம் மட்டுமே கணக்கிடப்படும்.

No comments: