ஊழியர்களின் சம்பளம் வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்ஐக்கியஅரபு எமிரேட்ஸ் நடவடிக்கை
துபாய், அக்.22-
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, வருகிற ஜனவரி மாதம் முதல் ஊழியர்களின் சம்பளங்களை வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யப்படவேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. அதோடு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளது.
சட்டத்துக்கு புறம்பான ஊழியர்களை கம்பெனிகள் வேலைக்கு வைத்துக்கொள்ளக்கூடாது. அப்படி வைத்துக்கொணடால் அந்த கம்பெனிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். மற்றும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டத்துக்கு புறம்பான ஊழியர்களை கண்டுபிடித்து வெளியேற்றுவதற்காக அதிகாரிகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்க இருக்கிறோம். வருகிற 2-ந்தேதி முதல் சட்டத்துக்கு புறம்பான ஊழியர்களின் வேட்டை அதிக அளவில் நடத்தப்படும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
22 Oct 2007
ஊழியர்களின் சம்பளம் வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்
Posted by Abdul Malik at 10:40 am
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment