16 Oct 2007

ஒரு சோக காதல் கதை

( மெயிலில் வந்தது... )
ஒரு பையனுக்கு கேன்சர் இருந்தது. எல்லோருக்கும் தெரிந்ததுதானே கேன்சரை குணப்படுத்த முடியாது என்று. அவனுக்கு 18 வயது , எந்த நேரத்திலும் சாகலாம். அவன் வாழ்க்கை முழுதும் அவன் வீட்டிலேயே முடங்கி கிடந்து அம்மாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டை விட்டு எங்கேயும் வெளியில் சென்றதில்லை.ஒரு நாள் அவன் வெளியில் சென்று சுத்திபார்க்க அவன் அம்மாவிடம் அனுமதி வாங்கினான். அவன் வீட்டை விட்டு வெளியில் இறங்கி நடக்கையில் பல கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தான். அப்படி ஒரு கடையை கடந்து விட்டு பின் திரும்பி இன்னொரு முறை அந்த கடையை பார்த்தான். அது ஒரு கேசட் கடை. அதைவிட முக்கியமாக அந்த கடையில் அவன் வயதை ஒட்டிய ஒரு தேவதை மாதிரி ஒரு பெண் இருந்தாள்.அவன் மெதுவாக அந்த கடை உள்ளே சென்றான். அவன் 'என்ன வேண்டும்' என்று கேட்டுவிட்டு ஒரு புன்னகையை உதிர்த்தாள்.. அவன் வாழ்நாளில் இப்படியொரு அனுபவம் கிடைத்தில்லை. முதல் பார்வையிலே காதல் என்பதை உணர்ந்தான். ஆனாலும் அவனுக்கு ஒருவித பயம்.. ஏதோ ஒரு கேசட்டை காட்டி இது வேண்டும் என்றான். அவளும் அதை எடுத்து இதை பார்சல் கட்டவா என்றாள். அவன் ஆமாம் என்பதாக தலையை ஆட்டினான். அவள் உள்ளே சென்று கேசட்டை அழகாக பார்சல் கட்டி வந்தாள்.நேராக அதை கொண்டு போய் அவன் அலமாரியில் வைத்து விடுகிறான். இது தினமும் நடக்கிறது. ஒருநாள் கூட அவளிடம் பேசுவதற்கு அவனுக்கு பயம். கேசட்டை பிரித்து பார்த்ததும் கிடையாது. இது அவன் அம்மாவுக்கு தெரிய வருகிறது. அவள் அவனுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைக்கிறாள்.அவன் அந்த கடைக்கு போய் ஒரு கேசட்டை வாங்கி அவள் பார்சல் கட்டும் சமயத்தில் ஒர் பேப்பரில் அவனது தொலைபேசி எண்ணை எழுதி வைத்துவிட்டு கேசட்டை வாங்கியவுடன் வீட்டிற்கு ஓடி வந்துவிடுகிறான்.அடுத்த நாள் அந்த வீட்டு தொலைபேசி மணி அடிக்கிறது. அவன் அம்மா எடுக்கிறார்கள்.. அவன் பெயரை சொல்லி 'இருக்கிறானா' என்று கேட்கிறாள்.. அம்மாவிற்கு அழுகையை அடக்க முடியவில்லை. அவன் நேற்றே இறந்துவிட்டான் என்று கூறுகிறாள். ஒரு பெரிய நிசப்தம். அவள் அம்மாவின் அழுகை தவிர எதுவும் கேட்கவில்லை.அடுத்த நாள் அம்மா அவன் நியாபமாக அவன் அறைக்கு செல்கிறாள்.. அங்கே அவன் அலமாரியில் நிறைய பிரிக்கப்படாத பார்சல்கள் இருந்தன.. அதை பிரித்து பார்க்கிறாள். அதன் உள்ளே ஒரு கேசட்டும் ஒரு துண்டுபேப்பரும் இருந்தது. அதில் 'நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். ஏன் என்னிடம் பேசவே மாட்டேங்குறே ' என்று எழுதியுருந்தது.. மற்ற பார்சல்களிலும் ஒரு கேசட்டும் அதே துண்டு பேப்பரும் இருந்தது.நெஞ்சை தொடும் இந்த குட்டிகதையில் ஒரு பெரிய நீதியே இருக்கிறது.உங்கள் துணையிடன் எப்பாவாவது சண்டை போட்டால், சிறிது நேரம் உங்கள் ஈகோவை கழட்டி வைத்துவிட்டு சில சமாதான வார்த்தை கூறுங்கள்.. இல்லாவிடில் அந்த பிரிக்கப்படாத பார்சல் போல பல வாய்ப்புகள் பறிபோகும்...

No comments: