4 Oct 2007

ஹஜ்-சவூதிக்கு சொந்த வாகனங்களில் வர தடை!

ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தின்போது வெளிநாட்டினர் தங்களது சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.இதுதொடர்பாக சவூதி அரசுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டினர், ஹஜ் மற்றும் உம்ராவின்போது தங்களது சொந்த வாகனங்களுடன் சவூதிக்கு வர முடியாது.இதுகுறித்து ஹஜ் மற்றும் உம்ரா துறையின் இயக்குநர் ஹமாத் அல் முவால்லா கூறுகையில், ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணத்தின்போது, யாத்ரீகர்கள் தங்களது சொந்த வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. இதை ஹஜ், உம்ரா பயணத்திற்கு ஏற்பாடு செய்வோரும், டூரிஸ்ட் ஆபரேட்டர்களும் உறுதி செய்ய வேண்டும்.சொந்த வாகனங்களுடன் யாத்ரீகர்களை சவூதிக்கு அனுப்புவோர் மீது கடும் தண்டனை விதிக்கப்படும். யாத்ரீகர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.யாத்ரீகர்கள் டிரான்சிட் விசா அல்லது விசிட் விசா வைத்திருந்தால் மட்டுமே சொந்த வாகனங்களைப் பயன்படுத்தி சவூதிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.அதேசமயம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியுரிமை பெற்றவர்கள், சவூதிக்கு எந்த நேரத்திலும் சொந்த வாகனங்களில் செல்லலாம். அதற்குத் தடை இல்லை என்றார்.
நன்றி:thatstamil

No comments: