29 Aug 2007

நினைவுகள் வாசிக்கும் செய்திகள்.

1999 ஜூன் மாதத்தின் கடைசி வாரமாகவோ அல்லது ஜூலை மாதத்தின் முதல் வாரமாக அது இருந்திருக்க வேண்டும்.

பக்கத்து ஊரில் ஒரு விழிப்புணர்வு பொதுக்கூட்டம். ஐந்து அல்லது ஆறு வேன்களில் எங்கள் ஊரிலிருந்து ஆண்களும், பெண்களுமாக சென்று கலந்து கொண்டனர். முதல் நாள் இரவு சென்னை விமான நிலையம் வரை சவாரிக்கு சென்று அடுத்த நாள் பகல் முழுதும் வேனை ஓட்டி வந்து இரவு ஊர் வந்து சேர்ந்த ஒரு வேன் ஓட்டுனரும் இந்த விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்காக சவாரி வந்தார்.

மிகுந்த தூக்க கலக்கத்தில் அவர் இருந்த போதும், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் ஊரிலிருந்து 15 அல்லது 20 நிமிடங்கள் பயணிக்கும் தூரம் என்பதால் சமாளித்து வேனை ஓட்டி வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் அவர் அந்த வேனை வாடகைக்காக ஓட்டி வந்தார்.

இரவு 10.30 மணிக்கு பொதுக்கூட்டத்திற்கு போய் சேர்ந்தவர்கள் சுமார் இரவு 1.30 மணிக்கு கூட்டம் முடிந்து அனைவரும் வேனுக்கு திரும்பினர். மூன்று அல்லது நான்கு வண்டிகள் முன்னே புறப்பட்டுச் செல்ல சென்னை சென்று திரும்பி வந்த அந்த ஓட்டுனரின் வண்டி அதனை பின் தொடர்ந்து புறப்பட்டது.

தூக்க கலக்கத்தோடு இருந்த அந்த ஓட்டுனர் புறப்பட்ட இடத்திலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் வண்டியில் வேகமாக சென்று மோதி விட்டார். மோதிய வேகத்தில் வேனின் முகப்பு நசுங்கி அந்த ஓட்டுனரின் பக்கம் சாய்ந்து விட்டது. அவருடைய முகம் கடுமையாக சிதைந்தும் விட்டிருந்தது. அவருடைய மூக்கு சரி பாதியாக கிழிந்து தொங்கியது. வேனின் ( Steering) ஸ்டேரிங் அவருடைய வயிற்றில் இறங்கி அவரை அதிலிருந்தும் விடுவிக்க முடியாமல் பிடித்திருந்தது, இத்தனைக்கும் வண்டி ஆஃப் ஆகாமல் கடுமையான சத்தத்துடன் ரேஸ் ஆகிக் கொண்டே இருந்தது.

கூடியிருந்த மக்களின் கடுமையான முயற்சிக்குப் பிறகு அந்த வேனிலிருந்து மீட்க்கப்பட அந்த ஓட்டுனர் உடனடியாக அடுத்த 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எங்கள் ஊர் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு முதலுதவி செய்த மருத்துவர் உடனே அவரை தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லச் சொல்லி அறிவுறுத்தினார். கூடியிருந்த மக்களில் சிலர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொன்னார்கள். சிலர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொன்னார்கள்.

ஒருவழியாக அவருடைய தாயாருக்கு தகவல் சொல்லப்பட்டு அவரும், அவரோடு மற்ற இரண்டு நண்பர்களும் துணைக்கு சேர்ந்து அந்த ஓட்டுனரை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். போகும் வழியெல்லாம் தனது மகனை மடியில் போட்டுக் கொண்ட அந்த தாய் என் செல்லமே, என் தங்கமே, என்று சப்தமே இல்லாமல் கண்ணீர் சிந்தி அழுதபடியே வந்தார். நீங்கள் இப்படி அழுதீர்கள் என்றால் ஓட்டுனர் பயந்து விடுவார், அதனால் தைரியமாக இருங்கள், தைரியமான வார்த்தைகளை சொல்லுங்கள் என்று துணைக்கு வந்த அந்த இரண்டு சகோதரர்களும் சொல்லியபடி வந்தனர். அந்த தாய் அந்த ஓட்டுனரை ஈன்றெடுத்த போது கூட இப்படியொரு வேதனையை அனுபவித்திருக்க மாட்டார் என்றே சொல்ல வேண்டும்.

அதிகாலை நான்கு மணிக்கு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு போய் சேர்ந்தது கார். விபத்திற்குட்பட்ட அந்த ஓட்டுனரை காரிலிருந்து ஸ்ரக்ட்சருக்கு மாற்றி மருத்துவமனையின் உள்ளே எடுத்துச் சென்றனர். முறையற்ற மருத்துவத்திற்கான அனைத்து அடையாளங்களும் அங்கே தெரிந்தது. அந்த ஓட்டுனர் இருக்கின்ற நிலை கண்டு அதற்காக எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்காமல் மிகச் சாதாரணமாக அங்கிருந்த மருத்துவர்கள் அவரை கையான்டனர். மயக்க மருந்து போன்ற எதுவும் கொடுக்காமல் கிழிந்திருந்த மூக்கை தைத்தனர். அவருடைய இரண்டு கால்களும் வழக்கத்திற்கு மாற்றமாக வேறு திசை நோக்கி திரும்பியிருந்தது. ஸ்கேன் போன்ற எந்த ஒன்றையும் எடுக்காமல் அவர் வலிக்கிறது, வலிக்கிறது என்று கதறக் கதற அவருடைய கால்களை நேராக ஆக்கி இருபக்கமும் பலகை போன்ற ஒன்றை கொடுத்து கட்டினார்கள்.

இத்தனையையும், அந்த கண்களால் கண்டு கொண்டு, மகன் பயந்து விடுவானே என்று சப்தமே இல்லாமல் வாயை மூடிக் கொண்டு குமுறிக் குமுறி கண்ணீரை மட்டும் வெளியாக்கிக் கொண்டு நின்றார் அந்த தாய். அவருடைய அந்த நிலை வேறு யாருக்கும் வந்து விடாமல் அந்த இறைவன் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். பெரியளவில் எதுவுமே நடக்காதது போல் காட்டி மனதளவில் அந்த ஓட்டுனரை தைரியமாக்க வேண்டும் என்ற நோக்கில் துணைக்குச் சென்ற அந்த இரண்டு நபர்களும் அந்த ஒட்டுனரோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

என்னப்பா நடந்துச்சு? வண்டில பிரேக் பிடிக்கலையா? என்று ஒருவர் கேட்க, இல்லண்ணே! மெட்ராஸ் போயிட்டு வந்ததுல சரியான டையடுண்ணே.. அதான் கொஞ்சம் கண் அசந்துட்டேன் என்றார் அந்த ஓட்டுனர். வாயெல்லாம் ஒரு மாதிரியா இருக்குண்ணே, ஒரு சுவிங்கம் வாங்கித் தர்றிங்களா? என்றும் கேட்டார். அதெல்லாம் இப்ப சாப்பிடக்கூடாது தம்பி, இந்தா கொஞ்சம் பால் சாப்பிடு என்று அந்த ஓட்டுனரின் தலையை மடியில் வைத்துக் கொண்டு ஒரு ஸ்பூன் வழியாக கொஞ்சம், கொஞ்சமாக அந்த தாய் அந்த மகனுக்கு பால் ஊட்டினார்.

பொழுது விடிந்து அந்த ஓட்டுனரின் உறவுக்காரர்களும், ஊர்க்காரர்களும் வரிசையாக வரத் தொடங்கினர். துணைக்கு வந்த அந்த இரண்டு சகோதரர்களும் அந்த ஓட்டுனரிடமும், அவரின் தாயிடமும் விடை பெற்று ஊர் வந்து சேர்ந்தனர்.

அந்த இருவரில் ஒருவர் ஊரில் தனது வீட்டில் சிறிது நேரம் உறங்கி விட்டு சில நண்பர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் தஞ்சை மருத்துவமனைக்கு சென்று விட்டார். அங்கு சென்று நிலைமையை பார்த்த அவர் அந்த ஓட்டுனரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றச் சொல்லி அங்கு கேட்டிருக்கிறார். அதற்கெல்லாம் நிறைய பார்மாலிட்டீஸ் இருக்கு என்பதை அங்கிருந்தவர்களால் உணர்ந்தப்பட்டார். பிறகு அவரோடு முதல் நாள் இரவு வந்திருந்த மற்ற நண்பரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை இந்த மருத்துவமனையிலிருந்து மாற்றுவதற்குன்டான ஏற்பாட்டை செய்யுங்கள் என்று சொன்னார். அவரும் அவருக்கு தஞ்சையில் தெரிந்த சில நல்ல பெரிய மனிதர்களின் வழியாக முயற்சி செய்து அவரை அந்த மருத்துவமனையிலிருந்து மாற்றுவதற்குன்டான ஏற்பாட்டை செய்தார். ஒரு அரை மணி நேர இடைவெளியில் மீண்டும் அவர் வீட்டு தொலைபேசி அலறியது. தஞ்சையிலிருந்து அதே நண்பர் மறுமுனையில் பேசினார். அழுது கொண்டே அந்த ஓட்டுனர் இறந்து விட்டதாக சொன்னார் அந்த நண்பர். (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஹூன்)

அந்த ஓட்டுனரின் இரண்டு கிட்னியும் விபத்தில் பழுதடைந்திருந்தது என்று அவருடைய போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொன்னது. ஒரு மனிதன் இறந்து விடுவான் என்று தெரிந்தாலும் கூட முதற்கட்டம் தொடர்ந்து, இறுதி வரை முறையான மருத்துவ முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏன் அந்த மருத்துவ(மனித)ர்களுக்கு தெரியவில்லை? 10 மாதம் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, உருண்டு, பிறண்டு படுக்க முடியாமல் அந்த ஓட்டுனரை வயிற்றில் சுமந்து, பார்த்து, பார்த்து பாதுகாத்து பிரசவித்த அந்த தாயின் கண்ணீர் துளிகளுக்கு நிச்சயமாக ஒரு அர்த்தம் இருக்கவே செய்யும்.
மருத்துவ படிப்பு முடிந்து பட்டம் பெற்றவர்கள் சில காலம் கிராமங்களில் பனியாற்ற வேண்டும் என்ற புதிய சட்டம் வந்திருப்பதாக சொல்கிறார்கள்.

மருத்துவ படிப்பிற்கு மாணவர்களை சேர்ப்பதற்கு முன்பு அவர்களுடைய சேவை உணர்வையும், தியாக உணர்வையும் ஆதாரங்களின் அடிப்படையில் தெரிந்து கொண்ட பிறகே அவர்களை மருத்துவ படிப்பு படிக்க அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால் அது சரியாக வருமா?

அல்லது சேவை உணர்வு மற்றும் தியாக உணர்வு கொண்ட நபர்களை கண்டறிந்து அவர்களுடைய கல்வியறிவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவர்களுக்கு மருத்துவ பயிற்சி அளித்து அவர்களை நல்ல மருத்துவர்களாக செய்தால் அது தவறாகுமா?

விபத்து போன்ற செய்திகளை பார்க்கும் போதும், கேள்விப்படும் போதும் என் நினைவில் வந்து போகும் அந்த ஓட்டுனரின் மரணம் இந்த கட்டுரை எழுதும் அளவிற்கு என்னை உந்தித் தள்ளியதும் ஒரு செய்தி கண்டுதான். ஓரிரு நாட்களுக்கு முன்னால் வின் டி.வி.யின் செய்தியில், தஞ்சை மருத்துவமனையில் நோயாளியாக சேர்க்கப்பட்ட ஒருவர் மரணமடைந்ததை தொடர்ந்து அவரின் உறவினர்கள் அங்கிருந்த மருத்துவர்கள் மீது தாக்குதல் தொடுத்தார்களாம். அதை கண்டித்து அந்த மருத்துவர்கள் பாதுகாப்புக் கோரி வேலை நிறுத்தம் செய்தார்களாம்.

இதில் இறந்தவர்களின் உறவினர்கள் செய்தது சரியா?

அல்லது பாதுகாப்புக் கோரி மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்தது சரியா?

மனிதர்கள் மருத்துவனாக, விஞ்ஞானியாக, பெரிய மேதையாக, கோடீஸ்வரனாக இருந்தாலும் அவன் முதலாவதாக கடவுளை நம்பும் விதத்தில் நம்ப வேண்டும். நாம் என்ன செய்தாலும் அதை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை நம்ப வேண்டும். நாம் செய்யும் நன்மைகளுக்கு பரிசும், தீமைகளுக்கு தண்டனையையும் தருபவர் கடவுள் என்றும் நம்ப வேண்டும். இப்படி நம்பி அதை செயல் வடிவிலும் காட்டினால் மட்டுமே மனிதர்கள் குறைந்த பட்சம் பிற மனிதர்களை மதித்து செயல்படுவான்.

அன்புடன்,அபிவிருத்தி.

27 Aug 2007

துபாயா.. அபிதாபியா.. சார்ஜாவா


வெற்றிக்கொடி கட்டு படத்துல வடிவேலுவை வைத்து சேரன் துபாய் காமெடி பண்ணியிருப்பாரு பார்த்தீங்களா॥? அவர் எந்த அனுபவத்துல அப்படி காமெடி வச்சாருன்னு தெரியல? ஆனா நிஜமாகவே இதுபோன்ற அலட்டல்கள் முன்பு எங்கள் ஊரில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் செய்வதுண்டு।
சிறுவயதில் எனக்குத் தெரிந்து வெளிநாடு சென்றுவிட்டு எளிமையாக வந்தவர் எனது நண்பரின் தந்தை ஒருவர் । அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டு ஒவ்வொரு 3 அல்லது 4 வருட இடைவெளியிலும் வருவார். அவர் வந்துவிட்டால் புது டேப் - வெளியில் அலரும் ஸ்பீக்கர் - செண்ட் வாசனை என்று கமகமக்கும். ஆனால் சென்று விட்டு வந்த எனது நண்பனின் தந்தையை விடவும் அவர்கள் வீட்டில் உள்ளவர்களின் அலட்டல் சில சமயம் தாங்க முடியாது. புதிய டேப்பில் சத்தம் அதிகம் வைப்பது – டிவி டெக் வாடகைக்கு எடுத்து தெருவில் வைத்து படம் போடுவது என்று அலட்டல்கள் ஆரம்பித்துவிடும்.


நம்ம துபாய்காரங்க என்ன அவுகளுக்கு குறைச்சலா என்ன॥? எனது ஊரில் உள்ள பல இளைஞர்கள் துபாய் சென்றுவிட்ட வந்தவர்களின் அலட்டலுக்காகவே துபாய் செல்ல விரும்புவார்கள்। அந்த அளவுக்கு அலட்டல்ங்க.


துபாயிலிருந்து அந்த இளைஞர் இந்த தேதிக்கு வருகிறேன் என்று தொலைபேசி வந்தவுடனையே இவர்கள் குடும்பத்தோடு விமான நிலையம் செல்ல தீர்மானித்துவிடுவார்கள்। இதில் சொந்தக்காரர்களில் , அவர்களை கூப்பிடவில்லை , இவர்களைக் கூப்பிடவில்லை என்று குறைவேறு.


துபாயிலிருந்து வருகிறவர்களுக்கே இடம் இல்லாதபடிக்கு ஆட்களை அதிகமாக வேனில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.


அட அந்த சென்னை & திருச்சி செல்லும் சாலை மிக மோசமான சாலை। அடிக்கடி விபத்து நேரிடும் பகுதி॥அதில இப்படி அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு போகணுமா..? யாராவது ரெண்டு பேர் மட்டும் போனா பத்தாதா..? சொன்னா கேக்குறாங்களா..? சரி விமான நிலையத்தை பார்க்கிற ஆசையில இருக்கலாம்.


துபாயிலிருந்து வருகிறவர் விமானநிலையத்தில் கொண்டு வந்த தங்க நகைகளை காப்பாற்றி எலெக்ட்ரானிக் அயிட்டங்ளை சுற்றி சாக்லேட் ,சோப்பு, துணிமணிகள் வைத்து சுற்றி பெட்டிக் கட்டிக்கொண்டு வருவார்.
துணியை வைத்து சுத்துனா ஸ்கேன்ல தெரியாமலா போகும்…? என்ன ஆளுங்கய்யா॥?


கஸ்டம்ஸில் கஷ்டப்பட்டு எதுவுமே இல்லைங்க வெறும் சாக்லேட் துணிமணிகள்தான் என்று பொய் ஒன்றைச் சொல்லி ,பெட்டியை இழுத்து வருவதற்குள் அவருக்கு போதும் போதும் ஆகிவிடும்।


ஆனால் வெளியில் உள்ளவங்களுக்கு இது தெரியுமா..? "விமானம் வந்து எவ்வளவு நேரமாச்சு.? இன்னும் வரக்காணோம்..முதல் ஆளா வரவேண்டடியதுதானே..?" என்று எரிச்சல்படுவார்கள்.
அட இதென்ன பேருந்து நிலையமா? விட்டவுடன் நேரா வெளியே வர்றதுக்கு॥விமான நிலையம்பா....


அவர் வெளியே வந்தவுடன் நேராக ஓடிப்போய்….........
கட்டித்தழுவுவாங்கன்னு பார்த்தீங்களா.? இல்லைங்க அவரு கொண்டு வர்ற பெட்டியை வாங்கிக்குவாங்க..
செண்டிமெண்ட் பேத்தல்கள் கொஞ்சநேரம் நடக்கும்। அப்புறம் வேனில் வரும்பொழுதே அவர் இல்லாமல் இருக்கும்பொழுது, ஊரில் நடந்தவைகள் அனைத்து தேதிவாரியாக உறவினர்கள் சொல்லிவிடுவார்கள்.


அவர் ஊரில் வந்து இறங்கியவுடனையே அலட்டல்களின் காட்சிகள் அரங்கேறிவிடும்। அவரு கொண்டு வந்த பெட்டியை அவரு சீக்கிரம் திறந்து விடக்கூடாது. அட அவரு கஷ்டப்பட்டு சம்பாதிச்சுட்டு வர்றாரு அவரு திறக்க கூடாதாங்க? சரி அவங்க அம்மா, அப்பா யாராச்சும் திறக்கலாம். ஆனா திறக்க கூடாதாம். சொந்தக்காரர்களில் அவங்க வரலை,இவங்க வரலை,எல்லாரும் வந்தவுடன்தான் பெட்டியை திறக்கணுங்கிற கூத்து நடக்கும் பாருங்க எங்க ஊர்ல॥வேடிக்கைதான்..


அவரு என்ன பெட்டிக்கடையா திறக்கப்போறாரு॥? பெட்டியைத்தானே திறக்க போறாரு.. அதுக்கு ஏங்க சொந்தக்காரங்க எல்லாரும் வரணும்..? யாராச்சும் சொந்தக்காரங்கல விட்டுட்டு திறந்திட்டார்னு அந்த சொந்தக்காரர் கோவப்பட்டுட்டு வீட்டுக்கு வரமாட்டாராம்। "அவன் என்ன மதிக்கலை..நான் அவனுக்கு எவ்வளவு செஞ்சிருப்பேன்னு " சண்டை போட ஆரம்பிச்சுறுவாங்க.. ஆமாங்க இது உண்மைதான் எங்க ஊர்ல இதனால் மனக்கசப்பானவங்க நிறைய பேர் இருக்காங்க தெரியுமா..?


சரி எப்படியோ பெட்டிக்கு திறப்பு விழா பண்ணியாச்சா॥? அப்புறம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு துணிமணிகள் - நறுமணப்பொருட்கள் - எலக்ட்ரானிக் சாதனங்கள் - குழந்தைகளுக்கு பொம்மைகள் - சாக்லேட் - சொர்ணம் - சோப்புகள் - சப்பு சவரு என்று எடுத்து பிரித்து வைத்துவிடுவார்கள்।


எல்லா நண்பர்களுக்கும் வாங்கி வர முடியாவிட்டாலும் உயிர் நண்பர்களுக்காகவாவது ஏதாச்சும் வாங்கி வரணுமே? துபாய்ல ஈரானிய மார்க்கெட்டில் இரண்டு திர்ஹமுக்கு அள்ளி வரலாம் பொருட்களை । பார்ப்பதற்கு விலை உயர்ந்த பொருள் போலவே இருக்கும். ஆனா விலை கம்மி தரமும்தான். அங்கபோய் உயிர் நண்பர்களுக்கெல்லாம் ஒவ்வொரு பொருள் வாங்கிப் போட்டிருப்பாங்க॥அதை எடுத்து கொடுத்திருவாங்க....


அந்த ஆளு துபாய்ல இருந்து வந்துட்டாருங்கிறதை மறுநாள் காலையில் அவர்கள் வீட்டில் இருந்து அலருகிற சத்தத்தில் வருகிற இந்திப் பாடலை வைத்து புரிந்து கொள்ளலாம்।

அப்புறம் இவரு ஊர்ல இருக்கிற நாள் வரையிலும் நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றால் இவர்தான் டிக்கெட் எடுப்பாராம்…மத்தவங்க பணம் கொடுக்குறேன்னு சொன்னாலும்॥


"டேய் டிக்கெட் 30 ரூ தானே..அங்க எனக்கு வெறும் 3 திர்ஹம்தாண்டா.. என்று திர்ஹம் - ரூ கதையளப்பார்கள்."
(அங்க அவனுங்க 1 திர்ஹமுக்கு அழுவாங்க)
எனது நண்பன் ஒருவன் ஊரில் பிச்சைகாரியிடம் 5 ரூ போட்டுவிட்டு பெருமையாகச் சொன்னான்। "துபாய்ல வெறும் ½ பில்ஸ்தானடா" என்று.


ஆனா இவனுங்க விடுமுறை முடியும் பொழுது தான் தெரியும் உண்மையான நிலைமை॥முதலில் தாம் தூம்னு செலவழிக்கிறவனுங்க..திரும்பவும் துபாய்க்கு செல்கிற நாட்கள் வரும்பொழுது அப்படியே கமுக்கமா அடக்கி வாசிப்பாங்க..பின்னே கொண்டு வந்த காசெல்லாம் செலவழிச்சிடுவாங்க.. யார்கிட்ட காசு கேட்டாலும் கவுரவம் போயிடும்.. அதனால வீட்டை விட்டு வெளியே வர மாட்டாங்க..


வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஆற்றில் குளிக்கப்போகிற பொழுது சைக்கிளின் பின்புறம் துபாய்ல இருந்து கொண்டு வந்த பூப்போட்ட துண்டுக்கு (ஈரானி மார்க்கெட்ல 2 திர்ஹம் துண்டுதான்) நடுவுல அரபு எழுத்துக்கள் வெளியே தெரிகிறது போல உள்ள சோப்பினை வைத்துகொண்டு செல்வார்கள்। அந்த அரபு எழுத்து பதிந்த சோப்பினை காண்கிறவர்கள் தலைவரை துபாய் பார்ட்டின்னு நினைப்பாங்களே… அதுக்குத்தான்॥


அப்புறம் துபாய் தமிழ் பஜார்ல மொலினா என்கிற சிங்கப்பூர் கடையில் வாங்கிய சிங்கப்பூர் வேஷ்டியை உடுத்துட்டுதான் வலம் வருவாங்க॥அதுதான் தலைவரு துபாய் பார்ட்டின்னு பளிச்சினு காட்டிக்கொடுக்கும்..


செண்ட் அடிக்காம வெளியே வந்திறமாட்டாறு தலைவரு॥ அப்படி அடிச்ச செண்ட்ல மயங்குன கூட்டம்தான்ங்க, இதுபோல நாமும் செண்ட் அடிக்கணும்னு பறந்து இப்போ துபாய்ல சுத்திகிட்டு இருக்காங்க..


துபாய் பற்றியோ, அரபு நாடுகள் பற்றியோ, வெளிநாடு அனுபவம் சற்றும் இல்லாத நண்பர்களை கூட்டி வச்சிட்டு அடிக்கிற அரட்டைதாங்க தாங்க முடியாது। "இங்க இருக்கிற எல் ஐ சி எல்லாம் என்ன கட்டிடம்॥அங்க வந்து பாருங்க ஒரு தெருவுல போனோம்னா தலையை உயர்த்திக்கிட்டேதான் போகணும்॥ அந்த அளவுக்கு உயரமான கட்டிடங்களை பார்க்கலாம்..அது மாதிரி ஒரு கட்டிடத்திலதான் நான் தங்கியிருக்கேன்.."
"அங்கல்லாம் லிப்ட் நாமாத்தான் பட்டனை அழுத்தணும்..போத்தீஸ்ல மாதிரி ஆட்கள் எல்லாம் இருக்கமாட்டாங்க.. நான் தினமும் லிப்ட்ல நானாக ஏறி நானாக இறங்கிவேன் தெரியுமா?"
"நைட்ல எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் சுத்தலாம் தெரியுமா..? வியாழக்கிழமை இரவுல நண்பர்கள் எல்லாம் ஒன்று கூடி பீச்சுக்கு போய்ட்டு வருவோம்..கிரிக்கெட் விளையாடுவோம்.."
"ஒரு கார்டு கொடுப்பாங்க அந்த கார்டை வச்சிக்கிட்டுதான் நாம எங்கே வேண்டுமானாலும் போகணும். கார்டை தொலைச்சோம்னா அவ்வளவுதான் ஜெயில்ல போட்டுறுவாங்க.."
"வெள்ளிக்கிழமையானா போதும் தமிழர்கள் எல்லாம் ஒண்ணா ஒரு இடத்துல கூடுவோம். "
(உண்மையில வெள்ளிக்கிழமைதான் நல்லா தூங்குவாங்க)..
"டேய் இந்திலாம் தெரியுமாடா உனக்கு? " என்று எந்த அப்பாவியாவது கேட்டுவிட்டால் போதும்
"தெரியுமாவா..? கான காயா..? ஆப் கா நாம் கியா ஹே? தும் பாகல்..? "என்று தமக்குத் தெரிந்த லோக்கல் இந்தியை நண்பர்களுக்கு மத்தியில் அவிழ்த்து விடுவார்கள்..
"அங்க இந்தி தெரியலைன்னா அவ்வளவுதான்.. நாங்க ஆபிஸ்ல இந்திதான் பேசுவோம் தெரியமா.. சும்மா சரளமா பேசுவோம்.."
( ஆனா அங்க போனாதான் தெரியும் இவங்க பேசுற இந்தியோட லட்சணம்… இந்தி தெரிஞ்சவன் எவனாவது கேட்டான்னா காறித் துப்பிடுவான்..அந்த அளவுக்கு இந்தி மோசமாக இருக்கும்)
"ஒரு டிவி 150 திர்ஹம்தான்…
1 திர்ஹம் கொடுத்தா 1 பெப்சி டின் வாங்கிடலாம்…
நான் தினமும் பெப்ஸிதான் குடிப்பேன்.."
( ஆமா சாப்பாட்டுக் காசை மிச்சப்படுத்தி பெப்ஸி மட்டும்தான் குடிப்பாரு இவரு :)


இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நிறைய இளைஞர்களை துபாய் கொண்டு தள்ளிய புண்ணியம் இதுபோன்ற எங்களின் முன்னோடி இளைஞர்கள் பலரைச் சாரும்। அவர்கள் மட்டும் அலட்டல் காட்டாமல் இருந்தாங்கன்னா நிறைய பேருக்கு வெளிநாடு மோகமே இருந்திருக்காது॥


நானும் துபாய் அப்படி இப்படி என்று நண்பர்களிடம் கதையளக்கலாம் என்று வந்தால் எல்லாப் பயலுவலுமே துபாய்க்கு வந்துட்டானுங்க॥என்ன பண்றது..? பார்க்கலாம் யாராவது ஒரு அப்பாவியாவது துபாய் பற்றி கேக்காமலா போகப்போறான் ? அவன்கிட்ட வச்சுக்கறேன் என்னுடைய பீலாவை.. இதைப் படிக்கிற யாராச்சும் கேப்பீங்களாங்க..?


இப்படி நிறைய பேர் இருக்காங்க அலட்டல்வாதிகள்। வெளிநாடு சென்றுவிட்டு அதனைப் பற்றிய நன்மை/தீமைகளை மற்றவர்களுக்கு விளக்கி சொல்வதை விட்டுவிட்டு, இப்படி அலட்டியதனால்தான் நிறைய இளைஞர்கள் நாமளும் போய்ட்டு வந்தா இப்படி ஆடம்பரமா இருக்கலாம்னு வீட்டை விற்று ,நகையை விற்று, வட்டிக்கு வாங்கி, வெளிநாடு போய்ட்டு கடைசியில இங்கே இருக்கிற ஆடம்பரத்தையும் இழந்து, ஏழைகளாக திரும்பிவருகின்றார்கள்.


நான் நகைச்சுவையாக அவர்களைப் பற்றி எழுதினாலும் நிஜமாகவே அவர்களைப் பற்றி நினைக்கும்பொழுது மனம் கனத்துப் போகிறது என்பதுதான் உண்மை।

- ரசிகவ் ஞானியார்

சில தத்துவம்

Butter'fly fly ஆகும் ........ Catter'pillar பில்லர் ஆகுமா?
என்னதான் கருணாநிதி DMK ல இருந்தாலும் அவர் வீட்டு மாடு "அம்மா"னுதான் கத்தும்.

வாழை மரம்தான் தார் போடும்। ஆனா அந்த தார் வெச்சு ரோடு போட முடியுமா?

என்னதான் ஏரோப்ளேன் மேல பறந்தாலும் பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகனும்.

Hand wash'ன்னா கை கழுவறது, 'Face wash'ன்னா முகம் கழுவறது, அப்ப 'brain wash'ன்னா, brainஅ கழுவறதா?

டீ கப்புல டீ இருக்கும், அப்ப world cupல world இருக்குமா?

செல் மூலம sms அனுப்பலாம்। ஆனா sms மூலமா செல் அனுப்ப முடியுமா?

அடையார் ஆனந்தபவனின் கிளைகள் எங்கே வேணுமின்னாலும் இருக்கலாம். ஆனா அடையார் ஆலமரத்தோட கிளைகள் அடையார்ல மட்டும்தான் இருக்கும்

பாம்பு எத்தனை எத்தனை முறை படம் எடுத்தாலும் அதை வெச்சு எந்த தியேட்டர்லயும் ரிலீஸ் பண்ண முடியாது
ரேஷன் கார்டு வெச்சு சிம் கார்டு வாங்கலாம்। சிம் கார்டு வெச்சு ரேஷன் கார்ட வாங்க முடியாது.

நீங்க என்னதான் தீனி போட்டு கோழி வளர்த்தாலும், அடுத்த முறையும் முட்டைதான் போடும். 100/100 எல்லாம் போடாது.

சைக்கிள் ஓட்டினா சைக்கிளிங், ட்ரெயின் ஒட்டினா ட்ரெயினிங்கா?

மெக்கானிக்கல் என்ஜினியர் மெக்கானிக் ஆகலாம், சாப்ட்வேர் என்ஜினியரால எந்த காலத்திலேயும் சாஃப்ட்வேர் ஆக முடியாது।

பட்டைய கிளப்புனது ILA(a)இளா

22 Aug 2007

மூட(ர்) நம்பிக்கைகள்

இந்த முறை நான் சென்னையில் இருந்த போது திடீரென்று புளியந்தோப்பே கோலாகலமாகக் காட்சியளித்தது. போன வாரம் பார்த்த புளியந்தோப்பு போல் இல்லையே! என்ன ஊர்வலம் என்ற ஆர்வமாக நோட்டமிட்டேன். திருவிழாவா? திருமணமா? அரசியல் கூட்டமா என்று யூகிக்க முடியாத கோலாகலம். கவனிக்க ஆரம்பித்தேன் - பல குதிரைகள் பவனிவருகிறது, எங்கு திரும்பினாலும் விவசாயிகள் கண்டால் வயிறெரியும் அளவிற்கு ஆடம்பர பிரகாச வண்ண விளக்குகள். மல்லிகைப்பூவே கிடைக்காத அந்தத் தருணத்தில் மல்லி மணக்க ஊரில் உள்ள எல்லா பூக்களையும் வைத்து அலங்கரித்து வைத்திருந்தது ஏதோ ஒன்றை. 'போக்கிரி பொங்கல்' பாடலும் சத்தமாக ஒலிபெருக்கியில் ஒலித்து காதுக்கு கேடுவிளைவித்துக் கொண்டிருந்தது. ஒன்றுமே புரியவில்லை. காங்கிரஸ் கட்சி விழா என்று ஒருகணம் நினைத்து விட்டேன் காரணம் கை சின்னம் ஆங்காங்கே காணப்பட்டது. கடைசியில் ஏதோ இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்டது என்று புரிந்தது. ஏனென்றால் ஒரு சிறுவன் குரான் படிப்பது போல் பிரம்மாண்ட உருவம் வண்ண விளக்கால் அலங்கரிக்கப்பட்டிருந்தது."இன்று முஹர்ரம் ஏழுல அதான் 'பஞ்சா' ஊர்வலம் போகுது" என்றார் என் கணவர். 'பஞ்சா' என்ற வார்த்தையே எனக்குப் புதிதாக இருந்தது. வீட்டிற்கு வந்து என் மாமியாரிடம் கேட்க. அது 'நக்கோபா' கூட்டம் செய்யும் சாங்கியம் என்றார்கள். 'நக்கோபா' என்றால் 'வேண்டாம்' என்பதற்கு உருது பேசுபவர்கள் பேச்சு வழக்கில் உபயோகிக்கும் வார்த்தை. அடிக்கடி உபயோகிப்பதால் அவர்களை நாங்கள் அன்புடன் 'நக்கோபா' கூட்டம் என்று அழைப்போம். "முஹர்ரம் பத்துக்கு இன்னும் விசேசமா கெடக்கும், அப்ப பார்க்க போலாம்" என்றார்கள் மாமி.'பஞ்சா' பற்றி விசாரித்தலில், அதன் சாங்கியம் சம்பிரதாயம் எல்லாமே இஸ்லாத்திற்கு மாறானது என்று புலப்பட்டது. 'முஹர்ரம் 10'ஆம் தேதியும் வந்தது, எல்லோருக்கும் விடுமுறையாகவும் இருந்தது. அமீரகத்தில் கூட முஹ்ரம் 10 அன்று விடுமுறையில்லை. இஸ்லாமிய வருடப் பிறப்பான 'முஹர்ரம் 1' அன்றுதான் விடுமுறை தருவார்கள். இந்த வழக்கம் சவுதியிலும் கூட இல்லை. ஆனால் நம்ம சென்னையில் சிறுவயதில் இராயப்பேட்டையில் இருந்த வரை இந்த விடுமுறை நாளை மார் அடிப்பவர்களை வேடிக்கை பார்க்க அளித்த விடுமுறை என்று தவறாமல் அந்தக் கொடுமையைப் பார்த்து. இது 'பொய் இரத்தம்', 'சாயம்' என்றெல்லாம் தோழிகளுடன் நின்று கேலி செய்தாலும் அக்கம் பக்கத்தில் 'ஷியா'க்கள் இல்லையே என்று ஒருமுறை பார்த்துக் கொள்வேன். 'ஷியா'களின் நம்பிக்கையே வேடிக்கையானது. இறைவன் ஒருவனே அவனுக்கு இணையும் வைக்கக் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் இந்த ஐந்து தெய்வக் கொள்கை வேடிக்கைதானே? 'பஞ்சா' என்ற சொல் பாஞ்ச் (ஐந்து) என்ற சொல்லிலிருந்து வந்ததாம். அதாவது ஐந்து புனிதர்களை வணங்குவதுதான் ஷியாக்களின் நம்பிக்கை. முஹர்ரம் 10-ஆம் நாளில் தீமிதிப்பிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அங்கு சிறிய பந்தல் போட்டு சின்ன மேடையமைத்து அதில் நிறைய வாள், கேடயம் போன்ற ஆயுதம் போல் ஜோடிக்கப்பட்டு அதன் மத்தியில் காங்கிரஸ் சின்னமும் இருந்தது. அதாங்க கைச்சின்னம். முதல் முறையாகப் பார்ப்பதால் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தீமிதிக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்ததால் ஒரே புகை மண்டலமாக இருந்தது. சுற்றுபுறச் சூழலை மாசுபடுத்தும் மற்றொரு ஏற்பாடாகவே தெரிந்தது எனக்கு. இருமிக் கொண்டே அந்த பந்தல் பக்கம் சென்று பார்த்தேன். அங்கு சாம்பிராணி புகை போட்டு வருபவர்கள் தலையில் ஒருவர் மயிலிறகை அந்தச் சாம்பிராணியில் காட்டி அவர்கள் தலையில் வைத்தார். பயபக்தியாக குடும்பமே அந்த மயிலிறகில் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தது. வைத்திருக்கும் சந்தனத்தையும் கழுத்தில் தேய்த்துக் கொண்டார்கள். மடச் சாம்பிராணிகள் என்று நினைத்துக் கொண்டேன்.சிலர் மெனக்கெட்டு தீமிதிக்க ஆயத்தமாகும் தீக்கணலில் உப்பு, மிளகு என்று பொட்டலத்தில் எடுத்து வந்து அந்தத் தீயில் போட்டார்கள். இப்படி போடுவதன் மூலம் முகத்தில், உடலில் வரும் கொறுகொறுப்பு, திருஷ்டியால் வரும் பருக்கள் எல்லாம் மறைந்து விடுமாம், இதுவும் ஒருவகையான முட்டாள்தனமான நம்பிக்கை. நகைப்பாக இருந்தது. இதில் பூமிதி வேறு, வெயிலில் செருப்பில்லாமல் இருந்தவர்களையே நபிகள் கண்டித்ததாக ஆதாரங்கள் இருக்கும் போது தீமிதிப்பு இஸ்லாத்திற்கு எதிரானதுதானே? ஊர்வலம் போவது, கந்தூரி, கொடியேற்றம், சந்தனக்கூடு, தர்கா எல்லாமே இஸ்லாத்திற்கு ஏற்றது அல்ல என்பதை எப்போது உணர்வார்களோ? இதெல்லாம் அறியாமை செயல்களாகத் தெரியவில்லை யாருடனோ போட்டி போடும் அறிவின்மையாகவே தெரிகிறது எனக்கு'ஷியா' முஸ்லிம்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்று நினைத்திருந்த வேளையில். அவர்கள் கறுப்பாடை அணியாதிருப்பதை கவனித்தேன். ஷியாக்கள் நபிகள் நாயகத்தின் பேரனான ஹுசைன் (ரலி) இழப்பை துக்க நாளாகச் சித்தரித்து கறுப்பாடையை முஹ்ரம் நாட்களில் அணிந்து கொள்வது வழக்கம். இஸ்லாமிய வரலாற்றில் புனிதப் போர்கள் எத்தனையோ, அதில் இறந்தவர்கள் எத்தனையோ பேர். ஆனாலும் ஹுசைன் (ரலி) மறைவுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம்? ஏன் துக்க நாளாக அனுசரிக்கிறார்கள்? எதிரிகள் ஹுஸைன் (ரலி) அவர்களின் தலை, கைகள், கால்கள், விரல்களை வெட்டி, பழி வாங்குவதற்காக ஆட்டம் போட்ட செயலை போல் இவர்களும் கை விரல்களை ஏந்தி ஊர்வலம் போவது பெரிய முரண்பாடு தானே? ஊர்வலம் சென்று போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் இவர்கள், மற்றவர்கள் எள்ளி நகையாடும் வகையில் பக்தி பரவசமாக மார் அடித்து, தங்களையே குத்தி வதைப்படுத்திக் கொள்ளும் விஷயத்தையும் இன்னும் செய்து வருகிறார்கள். 'அமைதி' என்று பொருட்படும் இஸ்லாத்தில் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனத்திற்கு இடமில்லை என்று அறியாமலா இருப்பார்கள் இவர்கள்? கறுப்பாடைகள் தென்படாததால் மெதுவாக சென்று விசாரித்தேன். "நாங்க 'ஷியா' இல்லீங்க' 'சன்னி' முஸ்லிம்தான். நம்பதான் பஞ்சாலாம் வைக்கிறது" என்றதும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. "அந்த பூப்போட்டு ஏதோ வச்சிருக்காங்களே அதற்குள் என்ன இருக்கிறது" என்று ஆர்வமாக கேட்டேன். "அதுங்களா, அது ஒரு ஸ்டீல் பாத்திரம் கணக்கா இருக்கும். அத முஹர்ரம் பொறக்கும் போது எடுத்து ஓதி, பந்தல் கட்டி, பூப்போட்டு இப்படி வச்சிருவோம். .ஏழாம் நாள் குதிரையில் ஊர்வலம் போய் கொண்டு வந்து மறுபடியும் பந்தலில் வச்சிருவோம்। அப்புறம் எல்லாம் முடிச்சிட்டு அதுக்குன்னு ஒரு பெட்டியிருக்கு அதுக்குள்ள வச்சிருவோம்" என்றாள் குதூகலத்தோடு. நான் வியப்பாக "ஒரு பாத்திரத்திற்கு பூப்போட்டு அலங்காரம் செய்து, அதுக்கிட்ட வேற மக்கள் போய் ஆசிர்வாதம் வாங்குறாங்க, இஸ்லாத்தில் இதெல்லாம் கூடாதுதானே" என்றேன். அவள் ஒரு முறை முறைத்து விட்டு விலகிச் சென்றாள். பக்கத்தில் இருந்த மற்ற பெண் "நாங்க கால காலமா செய்றது மாத்திக்க முடியாது" என்று என் காதில் கேட்க முணுமுணுத்தாள். 'இவர்களுக்காவது ஏதோ வெறும் சம்பிரதாயம் மற்றப்படி நம்பிக்கையில்லை' என்று என்னை நானே திருப்திப்படுத்திக் கொண்டேன். கால காலமாகச் செய்கிறார்கள் என்றால் இவர்கள் 'ஷியா'விலிருந்து பிரிந்த புதிய 'சன்னி'களா? ஏனெனில் 'சன்னி' முஸ்லிம்கள் வழக்கப்படி பஞ்சாவெல்லாம் கிடையாது. 'சன்னி'யோ' 'ஷியா'வோ யாராக இருந்தாலும் சரி, முட்டாள்தனமான இவர்களின் செயல்களுக்கு உடந்தையாக அரசாங்கமும் சிறுபான்மையினருக்கு உதவுவதாக எண்ணி ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு, மின்சார உதவி, முஹ்ரம் பத்தில் விடுமுறை என்ற சலுகைகளை தருகிறது. இதையெல்லாம் நிறுத்தினால் இப்படி தேவையற்ற ஊர்வலமும், அன்றாட வாழ்க்கைக்கு இடையூறும், வீண் விரயங்களும் தானாக நின்றுவிடும்.
நன்றி :http://jazeela.blogspot.com

21 Aug 2007

விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படும் ஈராக்கியப் பெண்கள். கல்நெஞ்சையும் உருக்கும்.....

அமெரிக்கப் படையெடுப்பும் ஆயிரக்கணக்கான ஈராக் விதவைகளும்!
விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படும் ஈராக்கியப் பெண்கள்।



அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து ஈராக்கில் நாள்தோறும் நடக்கும் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் தொடர்கதையாய் இருக்க அதனால் ஆண்கள் கூட்டம் கூட்டமாய் செத்துமடிய, உயிருக்குப் போராடும் பிள்ளைகளைக் காக்க விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படும் ஈராக்கியப் பெண்களின் நிலை கல்நெஞ்சையும் உருக்கும் வகையில் இருக்கிறது. இச்செய்தியை நமக்கு அளித்த கட்டுரையாசிரியர் இதனை எழுதும் போது தன் கண்ணீரைப் பலமுறை அடக்க முயன்று தோற்று நெஞ்சடைக்க எழுதியதாகத் தெரிவித்திருந்தார். - சத்தியமார்க்கம்.காம்
கடந்த வருடம் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஆயுதத்தாக்குதலில் தன் கணவரைப் பறிகொடுத்த ராணா ஜலீல் என்ற 38 வயது பெண், தன் குழந்தைகளைக் காப்பாற்ற தான் விபசாரியாக்கப்படுவோம் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. நான்கு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண் தன் குடும்பத்தின் உயிர் பிழைக்க ஒரு வேலை தேடி, கடந்த ஒருவருடமாக கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பின் நடைப்பிணங்கள் நடமாடும் சுடுகாடாய் காட்சியளிக்கும் ஈராக்கில் நிர்க்கதியான பெண்கள் அதிகரித்து வருவதால் வேலை வாய்ப்புக்கள் பெருமளவு குறைந்து விட்டது.
பசியால் துடிக்கும் தன் பிள்ளைகளைக் காப்பாற்ற எத்தகைய கடுமையானதொரு வேலையையும் செய்ய, தான் தயாரான போதிலும் வேலை கிடைக்காத ஒரே காரணத்தினால் பிச்சை எடுக்கும் கேவல நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் இவருக்குப் பிச்சையிட்டவர்கள் கூட இவரை நடத்திய விதம் மோசமானதாகவே இருந்தது. இவருக்கு வேலை தருவதாகவும் உதவி செய்வதாகவும், போலிவேஷம் போட்டு முன்வந்தவர்கள் மனதில் கீழ்த்தர எண்ணங்களே மிகைத்திருந்தன என்கிறார் இவர்.
சம்பாதித்துக் கொண்டிருந்த கணவர் இறந்த சில வாரங்களிலிலேயே இவரது குழந்தைகளின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதற்கு ஒரே காரணம் - பசியும் பட்டினியும் என்பதால் செய்வதறியாது மருத்துவர்கள் திருப்பியனுப்பி விட்டனர்.
நம்பிக்கையை முற்றிலும் இழந்த நிலையில் செய்வதறியாது விக்கித்து நின்ற நிலையில் தான் மிக மோசமான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த நாட்களை நினைவு கூர்ந்து கண்களில் நீர் பனிக்க அவர் கூறுகிறார்: ஆரம்பத்தில் இவை என் வாழ்க்கையின் மிகப் பயங்கரமான நாட்களாக இருந்தது. என்... என்... குழந்தைகள் பசியின் காரணத்தால் உயிருக்குப் போராடுவதைக் கண்டும் என்னால் இதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை"
இறை விசுவாசத்தையும், துடிக்கும் தன்மான உணர்வுகளையும் மீறி மனதில் ஏற்படுத்திய இரணத்தின் காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறினேன். அருகிலுள்ள சந்தைப் பகுதிக்கு சென்றேன். நான் இயற்கையாகவே அழகிய உருவம் கொண்டுள்ளதால் எனக்கு சிரமம் ஏதும் ஏற்படவில்லை. என்னுடன் ஒப்புக்கொண்ட நபருடன் நான் தனியறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது திடும் என்று அடி மனதில் எழுந்த அச்சத்தினால் அலறி ஓட முயன்றேன். ஆனால், அந்த நபர் என்னை விடவில்லை. பலவந்தப்படுத்தி என் கற்பை சூறையாடிவிட்டார். அவர் வீசி எறிந்த காசைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு நேராக கடைக்கு ஓடினேன்.
அவசரமாக உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினேன்। என் கையில் உணவைப் பார்த்த போது என் குழந்தைகள் சந்தோஷத்தில் கத்திய குரல் என் காதில் இன்னும் ஒலிக்கிறது. பசிக்கொடுமையின் காரணத்தால் நான் கேட்டிருந்த என் குழந்தைகளின் மரண ஓலத்தை விட எனது மானம் எனக்குப் பெரிதாக தெரியவில்லை.
ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பிற்குப் பிறகு பெருமளவில் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தில் பொதுமக்கள் அழிந்து கொண்டு வருகின்றனர். கடைவீதியில், பொதுவிடங்களில், பொதுமக்கள் குழுமியிருக்கும் இடங்களில் குண்டு வெடித்துக் கொண்டு இருப்பதனால் தினசரி எழுபது, எண்பது பேர் இறந்தனர் என்ற செய்தி எல்லாம் இப்போது வெகு இயல்பாக, கேட்டுக்கேட்டுப் பழகிப்போன சர்வ சாதாரண செய்தியாய் மாறிவருவதை எவரும் மறுக்க இயலாது.

அமெரிக்கப்படை ஈராக்கினுள் கால் வைப்பதற்கு முன்னர் வரை ஈராக்கில் விதவைப் பெண்களுக்கு, குறிப்பாக ஈரான் - ஈராக் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு அப்போதைய ஈராக்கிய அரசு வீடு, இலவசக் கல்வி, மற்றும் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை முறையாகவும் கொடுத்து வந்திருந்தது.

அத்தகைய எவ்வித உதவியும் தற்போதைய பொம்மை அரசு வழங்குவதில்லை என்பதும் கொடுத்து வந்த உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஓரளவு வசதி வாய்ந்த விதவைகள் இதில் விதிவிலக்காக தப்பித்துக்கொள்கிறார்கள்.
பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் அரசு சாரா அமைப்பான OWFI சமர்ப்பித்துள்ள புள்ளி விபரப்படி, அமெரிக்க அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட ஈராக்கிய விதவைகளில் 15 % பெண்கள் தங்களின் குடும்பத்தினருக்காக வேலை தேடிப் போராடி வருவதாகவும், தற்காலிக திருமணமோ, விபச்சாரமோ செய்யும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் என்ற பெண்மணி அல்ஜஸீராவிற்கு அளித்த பேட்டியில், "ஈராக்கிய விதவைகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தே இதற்கான தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். ஆனால் குறுகிய காலகட்டத்திலேயே இப்பெண்களின் பரிதாப நிலைமையின் பயங்கரம் முகத்தில் அறைய ஆரம்பித்து விட்டது. எங்களால் விவரிக்க இயலாத அளவிற்கு இப்பிரச்னை பூதாகரமாக உருவாகியிருக்கிறது. ஈராக்கிய தெருக்களில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான விதவைகள் வேலை தேடியும், பிச்சை கேட்டும் அலைகின்றனர்.
கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நுழைந்த பிறகு, அங்கே நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும் அதில் 20% பெண்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல்கள் என்றும், NGO நிறுவனம் இத்தகவலை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்.

பெரும்பாலான பெண்கள் ஈராக்கிற்கு வெளியில் கடத்திச் செல்லப்பட்டும் விபச்சார விடுதிகளில் விற்கப்பட்டும் இருக்கலாம் என்று OWFI நம்புவதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற தாக்குதலில் கணவர்களை இழந்து பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள் (ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மட்டும்) 350,000 விதவைப் பெண்கள் என்றும், நாட்டில் மொத்த விதவைகள் மட்டும் எட்டு மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர் என்றும் ஈராக்கின் பெண்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தெரிவிக்கிறது.
துயரமான வியாபாரம்
விதவைகளாக உள்ள இளம் வயது ஈராக்கிய பெண்கள் நிலை இப்படி எனில் அமெரிக்க அராஜகத்தில் உடல் உறுப்புக்களை இழந்து நடைப்பிணமாக வாழ்ந்து வரும் ஏழைக்குடும்பங்கள் தங்களுக்கான வாழ்வாதாரம் ஏதுமற்று தங்களது மகள்களையே விபச்சாரத்திற்காக சந்தையில் விற்கும் மிகக் கொடூரமான இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கொடுமை எத்தனை பேர் அறிவர்? ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அபூ அஹ்மத் என்பவர் குண்டுவீச்சில் தன் மனைவியை இழந்து தானும் ஊனமுடைந்தவர். தன்னுடைய குழந்தைகளுக்கு உணவளிக்கத் திறனற்று, கடும் அவதியுற்று, வெளிநாடுகளிலிருந்து விபச்சாரத்திற்காக பெண்களை விலைக்கு வாங்க வந்திருந்த நபர்களிடம், லினா என்ற தன் சொந்த மகளையே விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

என் மகள் லினாவிற்காக விபச்சார விடுதியினர் கொடுத்த தொகையைக் கொண்டு என் மற்ற மூன்று மகள்களையும் ஒரு மகனையும் ஒரு வேளை உணவாவது சிரமமின்றி உண்ண வைக்க முடியும் என்று அல்ஜஸீரா நிரூபர்களுக்கு கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.
அபூ அஹ்மத்தின் சூழலைக் கண்டு பரிதாபப்பட்டு(?) தாமே அவரை வற்புறுத்தி அணுகி உதவியதாக ஷாதா என்கின்ற விபச்சார விடுதியைச் சேர்ந்த தரகுப்பெண் அல்ஜஸீராவிற்கு பேட்டியளித்துள்ளார். இளம் விதவைகளை இனம் கண்டு அவர்களது ஏழ்மையை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி வருவதாகக் கூறும் இவர் இளம் பெண்கள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு மிக அதிக விலைக்கு சந்தையில் விற்கப்படும் பெரும் வியாபாரம் பற்றி விளக்கினார்.
"ஒருவேளை கூட சாப்பிட முடியாத நிலையில் உள்ள இவர்களுக்கு குறைந்தது பத்து அமெரிக்க டாலர் பெற்றுத்தருகிறோம். அதற்காக அப்பெண் குறைந்த பட்சமாக ஒருநாளைக்கு இரண்டு வாடிக்கையாளர்களுடன் 'இருந்தால்' போதும்" என்கிறார் சர்வ சாதாரணமாக.
வெளிநாடுகளுக்கு பலவந்தமாகக் கடத்தபடும் ஈராக்கிய பெண்கள்
OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் மேலும் கூறுகையில் லினாவைப் போன்ற அபலைப் பெண்கள் வறுமையின் காரணமாக ஐநூறு அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறார்கள்.
தந்தையை இழந்ததினால் தன் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகிப் போன சுஹா எனும் 17 வயது இளம்பெண், தன்னுடைய பெற்ற தாயினாலேயே விபச்சார விடுதியில் விற்கப்பட்டார். சுஹாவிடம் பேட்டி கண்ட அல்ஜஸீராவிடம் அவர் கூறியது:

தான் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு ஏமாற்றி விற்கப்பட்டதாகவும் சிரியா மற்றும் ஜோர்டானின் தலைநகரான அம்மானில் உள்ள பெரும்புள்ளி விலங்குகளுக்கு தினசரி உணவாவதாகவும் கூறியது உருக்கமாக இருந்தது. விபச்சாரக் கொடுமை தாங்கமுடியாமல் ஒரு நாள் விடுதியிலிருந்து தப்பித்து ஓடி சிரியாவிலுள்ள ஈராக்கிய தூதரகத்தில் தஞ்சம் புகுந்ததாகவும் கூறினார். தற்போது தனது அத்தையின் வீட்டில் பாதுகாப்பாய் தங்கியிருக்கும் சுஹா, சிரியாவின் விபச்சார விடுதியில் இருந்து தான் தப்பித்து ஈராக் திரும்பும் வரை தனக்கு உதவிய ஒரு ஈராக்கிய குடும்பத்திற்கு தான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் நினைவுகூர்ந்தார். தன்னைப் போன்றே பலப்பல பெண்கள் இத்துயரத்தில் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாக்தாத்தின் பெண்ணுரிமைச் சங்கத்தின் (WRA) செய்தித் தொடர்பாளரான மயாதா ஜூஹைர் என்ற பெண் பேசுகையில் ஈராக்கிய அரசு மற்றும் அரசு சாரா (NGO) அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து இளம் பெண்களைக் கடத்துவதையும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதையும் தடுக்க முயன்று வருகிறோம். அமெரிக்கப் படையெடுப்பினால் நாசமாகிப் போய் இருக்கும் ஈராக்கில், வறுமையில் நிர்க்கதியாய் நிற்கும் விதவைகளும், இளம் பெண்களும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவிலான உதவியும் போதுமான அளவிற்கு நிதியுதவியும், மனித வளமும் இல்லாமல் இப்பிரச்னையை எளிதாக தீர்க்க முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம்.

தனது மார்க்கத்திற்கு முரணான காரியங்களை செய்து கொண்டிருப்பதை, தான் நன்கு உணர்வதாகக் கூறுகிறார், தன் கணவரை ஒரு வெடி விபத்தில் இழந்திருக்கும் நிர்மீன் லத்தீஃப் என்ற 27 வயதான விதவைப் பெண். தனது நிலையை எடுத்துக்கூறி பொருளாதார உதவி செய்யுமாறு தனது உறவினர்களை எவ்வளவு வேண்டிக் கொண்டும் பலனின்றிப் போகவே, வேறு வழியே இன்றி விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் கூறியவை:
"எனக்குத் தெரிவதெல்லாம் பசியினால் என் கண்முன்னே துடித்து இறந்து கொண்டிருக்கும் என் குழந்தைகள்; என் குழந்தைகள் மட்டுமே!" என்கிறார் வெறித்த பார்வையுடன்.

அகத்தில் இறைநம்பிக்கையின் விளிம்பில் நின்றுகொண்டு மனதோடு கடும் போர் நடத்திக்கொண்டும், புறத்தில் வாழ வழியின்றித் துடிக்கும் இவரைப் போன்ற இலட்சக்கணக்கான பெண்களின் இந்த இழிநிலைக்கு, சர்வதேச அளவில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் இஸ்லாமிய சமுதாயம் என்ன பதில் வைத்திருக்கிறது?
- அபூ ஸாலிஹா
இந்தச் செய்திக்கட்டுரையை நாம் பதிக்கும் வேளையில் நேற்று (15-08-2007) நடந்த ஒரு குண்டுவெடிப்பில் 175 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி இறந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.




20 Aug 2007

கல்யாணம் பண்ணி வைக்க நினைத்த முதலாளி!

கல்யாணம் பண்ணி வைக்க நினைத்த முதலாளி!மகனைக் கடத்திச் சென்ற டிரைவர்!அதிர்ச்சியில் கார் ஓனர்கள்!
சென்னை, சூளைமேடு, மேற்கு நமச்சிவாயபுரத்தில் இருப்பவர் சாதிக் ரிஸ்வி। பழைய கட்டிடக் கான்டிராக்டரான இவருக்கு, ரசாத் என்ற ஆறு வயது மகன் இருக்கிறான்। முதல் வகுப்பு படித்து வந்த ரசாத்தை அவனுக்கு காரோட்டியாக இருந்தவரே கடத்தினார் என்பதைக் கண்டு, கார் வைத்திருக்கும் ஓனர்கள் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்। நடந்தது என்ன?
வழக்கம்போல் டியூஷனுக்குச் செல்லும் ரசாத்தை திடீரென்று காணவில்லை. பெற்ற தாய் கதறி அழுது போலீஸில் புகார் செய்தார். இதன்பிறகு இரவு பத்து மணிக்கு மேல் ஒரு மர்ம ஃபோன் வந்தது.
எதிர்முனையில் இருந்தவன், "உன் பிள்ளையைக் கடத்தி வைத்துள்ளேன். போலீஸிடம் சொல்லாதே. கொண்டு வந்து விட்டு விடுகிறேன்' என்று கூறியிருக்கிறான். ஆனாலும் குழந்தை வரவில்லை.
இந்நிலையில் பதினொன்றரை மணிக்கு இன்னொரு டெலிபோன் கால் வந்தது. அதில் பேசிய கடத்தல்காரன், "நாலு லட்சம் ரூபாய் கொண்டு வா. குழந்தையை விட்டு விடுகிறேன்' என்று கூறி, எங்கு பணத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இடத்தையும் சொல்லியுள்ளான்.
உடனே போலீஸில் புகார் கொடுத்ததை வைத்து சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன், அதிரடி ஆபரேஷனுக்கு உத்திரவிட்டார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பரபரப்பாகக் களத்தில் இறங்கினார்கள்.
தொழிலதிபர் ராஜ்குமாரைக் கடத்தியபோது தனிப்படைக்குத் தகவல் சொல்லாமல் லோக்கல் போலீஸôரே முயற்சி செய்து வெள்ளை ரவியை கோட்டைவிட்டனர். அது மாதிரி நடந்துவிடக் கூடாது என்பதால் போலீஸ் அதிகாரிகள் இந்த முறை மிகவும் உஷாராகச் செயல்பட்டார்கள்.
அதன்படி நுங்கம்பாக்கம் உதவிப்போலீஸ் கமிஷனர் முரளி, சூளைமேடு இன்ஸ்பெக்டர் அனைவரும் பக்குவமாக வலை விரித்திருந்தார்கள். அதில் சிக்கினான் கடத்தல்காரன். பல்லாவரம் வேல்ஸ் டெக்ஸ் கல்லூரி அருகே வைத்து இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. அங்குதான் சிறுவனைக் கடத்தியது சாதிக் வீட்டில் வேலை பார்த்த முருகன் என்பது தெரிய வந்தது. முதலாளி அவனது செயலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதன்பிறகு முருகன் சொன்ன அட்ரஸில் இருந்த சிறுவன் ரசாத்தை போலீஸ் பத்திரமாக மீட்டது. "பதினைந்து வருடம் என் உப்பைத் தின்னுவிட்டு இப்படித் துரோகம் செய்து விட்டாயே பாவி' என்று சாதிக் ரிஸ்வியின் குடும்பத்தினர் சாபம் விட்டதைப் பார்க்க முடிந்தது.
கடத்தலில் இறங்கிய முருகன், 15 வருடங்களாக சாதிக் வீட்டில் வளர்ந்து வந்தவன். டிரைவராக இருந்த அவன் மீது ஓனரும் அவ்வளவு பிரியம் வைத்திருந்தார். செப்டம்பர் 5ஆம் தேதி அவனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்கு திருமண மண்டபம் எல்லாம் புக் செய்துவிட்டான்.
அந்தத் திருமண மண்டபத்திற்கு அட்வான்ஸாக 15 ஆயிரம் ரூபாயை முருகனின் ஓனர் சாதிக்தான் கொடுத்துள்ளார். அது மட்டுமின்றி திருமணம் முடிந்த பிறகு தனியாக வீடு எடுத்து வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டானாம் முருகன். "மேத்தா நகரில் வீடு லீஸýக்கு எடுத்துக் கொள்கிறேன்' என்று ஓனரிடம் சொல்ல, "லீசுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?' என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு "2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது' என்று முருகன் சொல்ல, "அதையும் நானே தருகிறேன்' என்றும் கூறியிருந்தாராம் சாதிக் ரிஸ்வி. அது மட்டுமின்றி, "திருமணச் செலவிற்காகவும் 50,000 ரூபாய் வரை தருகிறேன்' என்று வாக்குறுதி கொடுத்திருந்தாராம். இப்படியெல்லாம் உதவிகளைச் செய்ய முன்வந்த சாதிக்கின் மகனையே டிரைவர் முருகன் கடத்திச் சென்றதைப் பார்த்து அந்தக் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது.
இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுவனை புகார் கொடுத்த ஆறு மணி நேரத்தில் மீட்ட போலீஸôரைப் பாராட்டி ரிவார்டுகளும் வழங்கினார். இதற்கு அடுத்த நாள் சனிக்கிழமையன்று ஐஸ் ஹவுஸ் "ஐ கேம்ப்' ஒன்றில் கலந்து கொண்ட போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன்.
இந் நிகழ்ச்சியிலிருந்து நிறைய படிப்பினைகள் உள்ளன. தெளிவு பெறுமா சமுதாயம்?

19 Aug 2007

தற்காப்புக்காக செய்யப்படும் கொலைகள்...(சட்டத்தின் பார்வையில்)

தற்காப்புக்காக செய்யப்படும் கொலைகள்...(சட்டத்தின் பார்வையில்)
இந்திய அரசியல் சாசன சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை நமது சமுதாய மக்கள் உணராததன் விளைவுகள்தான் ஒவ்வொரு முறையும் திட்டமிட்டகலவரங்களில் நமது சமுதாயத்தின் உடைமைகளும், சொத்துக்களும் குறிவைத்து தாக்கப்பட்டு நமது பொருளாதாரம் சீரழிவிற்கு உள்ளாக்கப்படுகின்றது அத்துடன் நமது உயிர்களும் உடமைகளும் சூரையாடப் படுகின்றன. நமது சொத்துக்களையம், உடமைகளயும், உயிரையம் பாதுகாக்க நமது சட்டம் எதிரியை கொல்லவும் அனுமதித்துள்ளது. அப்படி நடக்கும்கொலைகள் சட்டத்தின் பார்வையில் குற்றம் அல்ல. நாம் இனி நம்மை தற்காத்து கொள்ள தயாராக வேண்டும் அத்துடன் நமது சமுதாய அமைப்புகள் இந்திய அரசியல் சாசனத்திற்குட்பட்ட சட்டம் அனுமதித்துள்ள வழிமுறைகளின்படி நமது சமுதாய மக்களுக்கு தகுந்த தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும். இனியும் ஒரு கோவையோ அல்லது குஜராத்தோ நிகழாது நம்மை நாமே தற்காத்து கொள்ள வேண்டும்.நிஜமான என்கவுன்டர் – நீங்களும் நிகழ்த்தலாம்...??!!என்கவுன்டர் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது ரவுடிகளும், நக்ஸலைட்டுகளும் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடும்போது கொல்லப்பட்டதாக வரும் செய்திகள்தான். அனைத்து என்கவுன்டரிலும் சில துணை ஆய்வாளர்கள் கையில் கட்டுடன் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு பேட்டி அளிப்பதும், அது போலி என்கவுன்டர் என்று மனித உரிமை அமைப்புகள் புகார் அளிப்பதும் வாடிக்கையான நிகழ்ச்சிகள்.ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொலை செய்வதற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறதா? என்பது பலரின் மனதுக்குள் உள்ள கேள்விதான். இந்த கேள்விக்கு பதில் அளிக்குமுன்னர் வேறு சில சங்கதிகளைப் பார்ப்போம்.வாழ்வின் பல்வேறு காலக்கட்டங்களிலும் நாம் பல அனுபவங்களை பெறுகிறோம். நமது கண் முன்பே திருடர்கள் திருடுவதை பார்த்தும் பார்க்காததுபோல் நம்மில் பலர் இருப்பதுண்டு. அந்த திருடன் நம்மை என்ன செய்வானோ என்ற பயம் மனதில் தோன்றி, நம்மை வேறுபக்கம் பார்க்கச் செய்து விடுகிறது.ஆனால் பிரசினை நமக்கே வந்து விட்டால் என்ன செய்வது? நமக்கோ, நமது உறவினர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து என்றால் என்ன செய்வது? பயணத்தின் போது நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி கொள்ளை முயற்சி நடக்கலாம் அல்லது புறநகர்ப்பகுதியில் உள்ள வீட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் தாக்கலாம். அப்போது என்ன செய்யலாம்?சட்டம் வழங்கும் தற்காப்புரிமைஇது போன்ற சந்தர்ப்பங்களில் நம்மை தற்காத்துக்கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் சட்டம் வழங்குகிறது. நமது உயிர், உடைமை, உற்றார்-உறவினர்களின் உயிர் மற்றும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான இந்த உரிமையை, “தற்காப்புரிமை செயல்” (ACT OF PRIVATE DEFENCE) என்று சட்டம் அங்கிகரிக்கிறது.இந்த உரிமையை பயன்படுத்தும்போது விளையும் தீங்குகள் குற்றமாக கருதப்படுவதில்லை. உண்மையில் தற்காப்புரிமை செயல்களை சட்டம் அனுமதிப்பதோடு, ஊக்கமும் அளிக்கிறது.இந்திய குற்றவியல் சட்டத்தை தொகுத்த ஆங்கில சட்ட நிபுணர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டு நிலையை கூறியிருக்கின்றனர். திருடர்களிடமும், முறைகேடாக நடப்பவர்களிடமும் இந்திய மக்கள் பணிந்து போவதாகவும், இதைத்தடுத்து மக்களிடையே தைரியத்தையும், வீரத்தையும் பெருக்குவதற்கு தற்காப்புரிமையை சட்டப்பூர்வமாக அங்கிகரிப்பது அவசியமாவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.உடல் தற்காப்புரிமைஇந்திய தண்டனை சட்டத்தின் (INDIAN PENAL CODE) பிரிவுகள் 96 முதல் 106 வரை இந்த தற்காப்புரிமை குறித்த வரையறைகளை நிர்ணயம் செய்கின்றன.
பிரிவு 96: தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படும எச்செயலும் குற்றச்செயல் ஆகாது. பிரிவு 97: முதலாவதாக, தனது உடலையும், மற்ற உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ள உரிமை.இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச்செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.
இந்த பிரிவின்படி நமக்கோ, நமது சுற்றத்தினருக்கோ, நாம் முன்பின் அறியாதவருக்கோ – உடலுக்கோ, உடைமைக்கோ, பெண்களின் மானத்திற்கோ ஆபத்து ஏற்படும் காலத்தில் நாம் தாராளமாக எதிர்வினை ஆற்றலாம். அந்த எதிர்வினைகள் நமது எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் அது குற்றமாகாது.பிரிவு 98: இளமை, புரிந்து கொள்ளும் பக்குவமின்மை, சித்தசுவாதீனம் இல்லாமை அல்லது போதை இவற்றின் காரணமாக ஒருவர் செய்யும் செயல் குற்றச்செயல் அல்ல என்று கருதப்பட்டாலும், அந்த செயல்களுக்கு எதிரான காப்புரிமை செயல்படும்.அதாவது உரிய வயதடையாத மைனர் ஒருவரோ, மனநலம் குன்றியவரோ, போதைப்பொருளின் ஆக்கிரமிப்பில் உள்ள ஒருவரோ செய்யும் செயல் குற்றம் ஆவதில்லை என்பது சட்டத்தின் கருத்து. எனினும் இந்த செயல்களால் ஏற்படும் ஆபத்து குறைவானதல்ல. சிறுவன் ஒருவனோ, போதையால் பாதிக்கப்பட்டவரோ கொலை செய்யும்போது அது சட்டம் எவ்வாறு பார்த்தாலும் போன உயிர் திரும்ப வராது. எனவே இந்த சூழ்நிலைகளிலும் பாதுகாப்புரிமை செயல்படவே செய்யும்.பிரிவு 99: 1 மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படும் என்னும் அச்சத்தை நியாயமாக விளைவிக்காத ஒரு செய்கையானது,-(i) ஒரு பொது ஊழியரால் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால் அந்த செய்கையானது...(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவின்படி செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால், அந்த பொது ஊழியரின் செய்கையோ, அல்லது பொது ஊழியரின் உத்தரவோ சட்டப்படி நியாயமானதாக இல்லையென்றாலுங்கூட அச்செயலைப் பொறுத்தமட்டில் தற்காப்பு உரிமையை பயன்படுத்த முடியாது.2. எச்சமயத்தில் ஒருவன் தனது தற்காப்புரிமையை மேற்கண்ட பிரிவை பொறுத்து இழப்பதில்லை என்றால்,-(i) ஒரு பொது ஊழியரால் அச்செயல் செய்யப்படுகிறது என்பதை அறியாமல் ஒருவன் தற்காப்பு உரிமையை பயன்படுத்தி இருந்தால் அது குற்றமாகாது.(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவுப்படி செயல் நடைபெறுகிறது என்பதை அறியாமல் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தியிருந்தால் அது குற்றமாகாது.3. காக்கும் நோக்கத்திற்கு அவசியமாக எந்த அளவிற்கு கேடு உண்டாக்கலாமோ அதைவிட அதிகமான கேட்டை உண்டாக்குமளவிற்கு தற்காப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் நீடிக்காது.காவல்துறை அதிகாரி, பொது ஊழியர் ஆவார். இவர் நம்மை கைது செய்தால் அது நமது சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் செயலாகும். ஆனால் அவர் பொது ஊழியர் என்பதால் அந்த செயல் குற்றச்செயல் ஆகாது. அந்த கைது நடவடிக்கைக்கு நாம் கட்டுப்பட வேண்டும்.ஆனால் அந்த கைது சட்டப்படி அமைய வேண்டும். அவர் காவல் அதிகாரி என்பதையும், அவர் சட்டரீதியான நடவடிக்கையே மேற்கொள்கிறார் என்பதையும் உணரும் சூழலும் வேண்டும்.அவ்வாறு அல்லாமல் அந்த நபர் யாரென்றே தெரியாமல், எதற்காக அழைக்கிறார் என்பதும் புரியாத நிலையில் நாம் உடன் செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த நிலையில் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். ஆனால் அதையும் தேவையான அளவிற்கே பயன்படுத்த வேண்டும்.வெறும் கையுடன் நம்மை மிரட்டும் நபருக்கு எதிராக கடப்பாரையையோ, துப்பாக்கியையோ நீட்டக்கூடாது. ஆபத்தின் தன்மைக்கேற்பவே தற்காப்புரிமையை செயல்படுத்தலாம்.மரணம் விளைவிக்கலாமா?பிரிவு 100: உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதை குற்றமாகக் கருத முடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.
1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்றஅச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்போது,2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்க தக்கதான ஒரு தாக்குதலின்போது,3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்பொழுது,4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்து கொள்ளும் கருத்துடன் தாக்கும்பொழுது,5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்போது,6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில், ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்பொழுது,மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதல்களில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்த சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயத்தை ஏற்படுத்துவதோ குற்றமாவதில்லை.பிரிவு 102: உடலுக்கு ஆபத்து ஏற்படப்போகிறது என்ற நியாயமான அச்சம் எழுந்த உடனேயே, உடலைப்பொறுத்து தற்காப்பு உரிமை தொடங்குகிறது. அந்த அச்சம் இருக்கும்வரை தற்காப்பு உரிமையும் நீடிக்கும்.
எதிரி நம்மை தாக்கும்வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் எதிரியின் முதலடியே மூர்க்கத்தனமாக விழுந்தால் அது நமது உயிரையே பறித்துவிடக்கூடும். எனவே நம்மைத் தாக்க முடிவெடுத்துவிட்டதும், அதன் மூலம் நமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றோ, கொடுங்காயங்கள் விளையும் என்றோ உறுதியாக நம்பும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன் படுத்தலாம். அதேபோல எதிரி வன்புணர்ச்சி செய்யவோ, இயற்கைக்கு மாறான வகையில் பாலுறவுக்கோ முற்படுகிறார் எனத்தெரியும் போதும் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.ஆளைக்கடத்தும் நோக்கத்துடனோ, அதன் மூலம் கடத்தப்படுபவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலையிலோ, இந்த அனைத்து நிகழ்வுகளின் போதும் பொது அதிகாரிகளான காவல்துறை அதிகாரிகளின் உதவியை நாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்னும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.பிரிவு 106: மரணம் ஏற்படும் என்னும் அச்சம் உண்டாக்கக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையைப் பயன்படுத்தும்போது, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிரபராதி ஒருவருக்கு தீங்கு விளைவித்துவிட்டால் அது குற்றமாகாது.தற்காப்புரிமையை பயன்படுத்தும்போது சில நேரங்களில் குற்றவாளி அல்லாத சிலருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.உதாரணமாக, ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று சுமார் 20 அல்லது 30 பேர் கொண்ட கூட்டம் ஒன்று முனைந்து நிற்கிறது. அந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டால்தான் அந்த நபர் தப்பமுடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால் அந்த கூட்டத்தில் சில குழந்தைகளும் தற்செயலாக நிற்கின்றனர். துப்பாக்கியால் சுட்டதால் ஒரு குழந்தை உயிரிழக்க நேரிடினும் அது குற்றம் அல்ல.இந்த தற்காப்புரிமைக்கு எல்லை உண்டு. நம்மை தாக்க வரும் நபர், நாம் பதில் தாக்குதல் நடத்த தயாராகிவிட்டதைக்கண்டு தப்பியோடும்போது அவரைப்பிடித்து தாக்கக்கூடாது.நம்மை பலவந்தமாக ஒருவர் அறையில் அடைக்க முடற்சித்தால் தற்காப்புரிமையாக அவரை நாம் தாக்கலாம். ஆனால், நம்மை அவர் அடைத்துவைத்துவிட்டு சென்றபின் தப்பியோடி அவரை தாக்கக்கூடாது. காவல்நிலையத்தில் புகார்தான் செய்யவேண்டும்.சொத்து தற்காப்புரிமைஇந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 97, 103, 104, 105 ஆகியவை சொத்து தற்காப்புரிமை குறித்த அம்சங்களை விளக்குகின்றன.பிரிவு 97 (2): தம்முடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செய்கையிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.
பிரிவு 103: கொள்ளை, இரவில் வீட்டை உடைத்து உள்ளே புகுதல், தீ வைத்து சொத்துகளை நாசம் செய்தல், வீட்டினுள் அத்துமீறி நுழைதல் போன்றவற்றில் விளைவு மரணமாகவோ, கொடுங்காயமாகவோ இருக்கும் என்ற அச்சத்தை உண்டாக்கக்கூடிய சூழ்நிலையில் சொத்தைப் பாதுகாக்க தற்காப்பு உரிமையை பயன்படுத்தினால் எதிராளிக்கு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் நிகழ்ந்தாலோ அது குற்றமாகாது. பிரிவு 104: பிரிவு 103ல் கூறப்பட்ட குற்றங்களை சேர்ந்திராத திருட்டு, சொத்தை அழித்தல் அல்லது அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களை செய்தாலும் செய்ய முயற்சி செய்தாலும், அப்பொருளை காக்கும் பொருட்டு தற்காப்புக்கென மரணத்தை தவிர வேறு எவ்வித காயத்தையும் விளைவிக்கலாம்.பிரிவு 105:சொத்துக்கு அபாயம் நேரிடுமென்ற ஓர் அச்சம் தொடங்குகிறபோது, சொத்தை பொறுத்த தற்காப்புரிமை தொடங்குகிறது.திருட்டிலிருந்து சொத்தை காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையானது, சொத்தை திருடனிடமிருந்து மீட்கும் வரையிலும் வரையிலும் அல்லது பொது அதிகாரிகளின் உதவி பெறப்படும் வரை தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும்.குற்றமிழைப்பவர் அத்துமீறல் அல்லது சொத்து அழித்தல் குற்றங்களை தொடர்ந்து செய்யும் வரையில் தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும்.இரவில் கன்னமிடுவதன் மூலம் ஆபத்து தொடர்ந்திருக்கும்வரை தற்காப்புரிமையும் தொடர்ந்து இருக்கும்.பொருளுக்கான தற்காப்புரிமைக்கும் எல்லை உண்டு. அப்பொருளை கயவர்கள் கவராவண்ணம் தடுப்பதற்காக தற்காப்புரிமையின் அடிப்படையில் அக்கயவனை தாக்கலாம். ஆனால் பொருளை மீட்டபின் அக்கயவனை தாக்கக்கூடாது.இவ்வாறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் நியாயமான தேவை உள்ள சந்தர்ப்பங்களில் தற்காப்புரிமையை பயன்படுத்துவதை சட்டம் பரிந்துரைக்கிறது. எனினும் மக்களிடம் சட்டம் குறித்து தேவையான விழிப்புணர்வு இல்லாத நிலையில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் முதலான குற்றங்களை தடுக்க வாய்ப்பிருந்தாலும் சட்டம் குறித்த தெளிவின்மையால் அக்குற்றங்களை அனுமதிக்கிறோம்.பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய இந்த தற்காப்புரிமையை பரவலாக (தவறாக) பயன்படுத்துபவர்கள் காவல்துறை அதிகாரிகள்தான்.
பொதுமக்கள் தற்காப்புரிமையை சரிவர பயன்படுத்தாததால், ரவுடிகள் உருவாகின்றனர். இவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் குறிப்பிட்டகாலத்திற்கு லாபம் பார்க்கின்றனர். இந்த ரவுடிகளின் தேவை முடிந்த பின்னரோ, ரவுடிகள் தங்கள் கட்டுப்பாட்டைமீறி நடக்கிறார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த ரவுடி காவல்துறையினரின் போலி என்கவுன்டரில் தீர்த்துக்கட்ட படுகின்றனர். அரசு அமைப்புகளும், நீதிமன்றங்களும் கொலைக்குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்கின்றன. இந்த அனைத்து அவலங்களுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமாகிறோம். நமது தற்காப்புரிமையை முழுமையாக செயல்படுத்தினால் ரவுடிகள் உருவாவதையும் தடுக்கமுடியும். அவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் சுயலாபம் அடைவதையும் தடுக்கமுடியும். பின் ரவுடிகளை கொலை செய்தவர்கள் வீரர்களாகவும், நாயகர்களாகவும் உருவாவதையும் தடுக்க முடியும்.-சுந்தரராஜன் M.Sc, MHR, LL Mநன்றி : மக்கள் சட்டம்

16 Aug 2007

ஒரு கோழியால் கோஷ்டிமோதல்

பெண்களைப் புரட்டியெடுத்த போலீசார். இன்னொரு கொடியன்குளமான கூமாப்பட்டு.
பஞ்சபட்சி சாஸ்திரத்தின்படி, ஒரு கோழியால் கூமாப்பட்டி கிராமமே அல்லோலகல்லோலப்படப்போகிறது’ என்பதை எந்த ஜோதிடருமே சொல்லவில்லை போலிருக்கிறது. அங்கே ஒரு கோழியால் கோஷ்டிமோதல் உருவாகி, போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்து, தடியடியில் ஒரு பெண்ணும் பலியாகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எழுபத்து மூன்று பேர் கைதாகி, ஏராளமான பெண்களும், குழந்தைகளும் போலீஸ் கையால் அடி, உதை வாங்கி... இத்தனைக்கும் காரணம் ஒரு கோழி.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் செல்லும் வழியில் கிருஷ்ணன் கோயில் என்ற ஊரிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் உள்வாங்கி இருக்கிறது கூமாப்பட்டி. தலித் மக்கள் கணிசமாக வாழும் கிராமம் இது. கடந்த 29_ம் தேதி இரவு ரமணி என்ற தலித் ஒருவர், மோட்டார் பைக்கில் அங்கு சென்றிருக்கிறார். அவரது பைக்கில் ஆனந்தம்மாள் என்பவரது கோழி அடிபட்டு இறந்து போனது. ஆனந்தம்மாளும், ரமணியும் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர் என்று தலித்துகளின் இருவேறு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் இடையே வாய்த்தகராறு வலுக்க, விரைவில் அது இரு தரப்பினருக்கும் இடையில் அடிதடி, சொத்து நாசம் என்ற அளவுக்குப் பரிணாம வளர்ச்சியடைந்தது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்திருக்கிறார்கள். அதன் பிறகும் இருதரப்பினரும் முட்டி மோதிக்கொள்ள முயன்றபோது, போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, கூட்டத்தைக் கலைத்திருக்கிறார்கள்.
இந்தச் சம்பவத்தில் எழுபத்து மூன்று பேரைக் கைது செய்தது போலீஸ். அந்தக் கிராமத்தில் உள்ள தலித் ஆண்கள் எல்லோரும் எஸ்கேப் ஆகிவிட, அதன்பிறகு ஒருவழியாக அமைதி ஏற்பட்டிருக்குமே என்றால், அதுதான் இல்லை. இந்தச் சம்பவத்துக்குப் பின் பலியான ஒரு பெண், போலீஸ் தடியடியால் பலியானதாகப் புகார்கள் எழும்ப, இரவோடிரவாக போலீஸார் இந்தக் கிராமத்துக்குள் புகுந்து, பெண்களையும், குழந்தைகளையும், போட்டுப் புரட்டி எடுத்ததாக மற்றொரு புகாரும் கிளம்பியுள்ளது.
போலீஸ் தடியடியில் பலியானதாகக் கூறப்படும் அறுபது வயது லட்சுமியை, கடந்த 4_ம் தேதி நாம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கெனவே சந்தித்துப் பேசியிருந்தோம். நாம் போயிருந்தபோது அவரால் பேசவே முடியவில்லை. ‘‘அவரை போலீஸார் அடித்து லத்தியால் நெஞ்சில் குத்தினாங்க!’’ என்றார் அருகில் இருந்தவர். அன்றிரவே லட்சுமி இறந்து போனார் என்று கேள்விப்பட்டதும் நமக்கே அதிர்ச்சி.
இதையடுத்து கூமாப்பட்டி, அதன் அருகே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அம்மச்சியாபுரம் கிராமங்களுக்கு நாம் சென்றோம். கிராமத்தின் நடுவே போலீஸ் வேன் நின்றது. ஆண்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே தென்பட்டது. லட்சுமியின் மரணத்தால் கிராமத்தில் ஒருவித பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தது. நம்மிடம் பேசவே கிராமத்தவர்கள் பயந்தார்கள். இறந்து போன லட்சுமியின் மகள் பொன்மாடத்தி, மகன் மாடசாமி ஆகியோரிடம் பேசினோம்.
‘‘எங்க தம்பி முத்து மாடனை போலீஸார் அடிச்சு இழுத்துக்கிட்டுப் போகும்போது, கம்பு ஊன்றி நடக்கும் எங்க அம்மா அதைத் தடுக்கப் பார்த்திருக்காங்க. போலீஸார் எங்க அம்மாவைக் கீழே தள்ளி அடிச்சிருக்காங்க. சம்பவத்தன்று நாங்க ஊரில் இல்லை. எங்க அம்மா இறந்த பிறகுதான், அவங்க ஆஸ்பத்திரியில் இறந்த விஷயமே எங்களுக்குத் தெரிய வந்தது!’’ என்றனர் அவர்கள் வேதனையுடன். அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த மகளிர் மன்றத் தலைவி செல்வி, நம்மிடம் பேச முன் வந்தார்.
‘‘பொங்கல் வைத்துச் சாமி கும்பிடுவது தொடர்பாக அன்றைக்கு ராத்திரி காலனியில் கூட்டம் போட்டிருந்தோம். அப்போது மடமடவென்று போலீஸார் வந்து எங்களை ரவுண்ட் கட்டினாங்க. ‘அரிவாளோடு போய் தகராறு பண்ணத்தானே கூட்டம் போடுறீங்க!’ என்று மிரட்டி எல்லோரையும் கைது செய்யப் போனாங்க.
பத்தாவது படிக்கும் என் மகன் பகத்சிங்கை போலீஸார் இழுத்துப் போன போது ‘அவன் படிக்கிற பிள்ளை,விட்டிருங்கய்யா’ என்று நான் கெஞ்சினேன். என்னை எட்டி இடுப்பில் உதைத்த போலீஸ் அதிகாரி ‘அடிங்கடா’ என்று உத்தரவிட்டார்.
போலீஸார் கம்பாலும், துப்பாக்கியைத் திருப்பியும் ஆம்பிளை, பொம்பிளை அத்தனை பேரையும் விரட்டி விரட்டி அடிச்சாங்க. ஆம்பிளைகள் எல்லாம் காட்டுக்குள் ஓடி விட்டதால், போலீஸாரின் கோபம் பெண்கள் மீது திரும்பியது. பெண்களின் இடுப்புக்குக் கீழே யாரிடமும் காட்ட முடியாத இடத்தில் அடித்தனர்.
போலீஸார் அடித்ததில் ஒரு பெண்ணுக்கு மூன்று மாத கர்ப்பம் கலைந்து விட்டது. அதோடு ராத்திரியிலும் வீடு வீடாகப் புகுந்து தொந்தரவு செய்தாங்க. இதெல்லாம் ராத்திரி இரண்டு மணி வரை நடந்திச்சு. உயிருக்குப் பயந்து இந்த ஊரில் இருக்கிறோம். காட்டுக்கு ஓடிப் போன எங்க வீட்டுக்காரங்க எப்போது திரும்பி வருவாங்கன்னு தெரியலை’’ என்றார் செல்வி. அப்போது அங்கு வந்த சித்திரவடிவு என்பவர், தனது தொடையில் ஏற்பட்ட காயத்தைக் காண்பித்தார். போலீஸ் வழக்குப் போட்டு விடுமோ என்ற பயத்தில், அடி வாங்கிய பெண்களில் பலர் சிகிச்சைக்கே செல்லவில்லை. பத்துக்கு மேற்பட்டோர் மட்டும் துணிந்து விருதுநகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். பல பெண்களை போலீஸார் மிரட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர விடாமல் செய்தது தனிக்கதை.
ஊருக்கு வெளியே நாம் சந்தித்த செல்வியின் கணவர் சடையன் ‘‘என் பையன் உள்பட ஒன்பது பையன்களை போலீஸார் பிடித்துப் போய் ஜெயிலில் அடைச்சிட்டாங்க’’ என்றார் கலக்கத்துடன். சமூகநீதி மாணவர் பேரவையின் மாநில அமைப்பாளரான சி. பாஸ்கரனிடம் பேசினோம்.
‘‘இது கொடியன்குளம் போல ஒரு மோசமான சம்பவம்!’’ என்று ஆரம்பித்தவர், ‘‘இரு தலித் பிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டது உண்மைதான். போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் அது ஓய்ந்து போய் விட்டது. இந்தப் பகுதி மக்கள் அரசு மற்றும் அதிகார வர்க்கத்துக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி வருபவர்கள். ஆகவே, அவர்களைப் பழிதீர்க்க இதை ஒரு நல்ல வாய்ப்பாக போலீஸார் பயன்படுத்தி, இரவில் வீடு புகுந்து தாக்கியிருக்கிறார்கள். மூடப்பட்டிருந்த வீட்டுக் கதவுகளை ஓங்கி உதைத்துத் திறந்து, அந்த இரவில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் அலறியடித்துக் கொண்டு ஓடியதைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள். ஒரு வயதுக் குழந்தை கர்ப்பிணிப்பெண் உள்பட பாரபட்சமில்லாமல் எல்லோருக்குமே அடி, உதை விழுந்திருக்கிறது. காயமடைந்த லட்சுமி இறந்துபோக, அவருடன் இருந்த அவரது மகனை சிறையில் போட்டிருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதலை நடத்திய போலீஸார் மீது அரசு நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார் பாஸ்கரன் சூடாக.
இந்தப் பிரச்னையில் கைதானவர்களை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜ்குமாரிடம் பேசினோம். ‘‘கூமாப்பட்டி தகராறு இரவு ஏழு மணிக்கே முடிந்து போன நிலையில், போலீஸார் பத்தரை மணிக்கு மேல் வந்து கிராமத்தைப் பந்தாடியிருக்கிறார்கள்.
கூமாப்பட்டி உள்பட மூன்று தலித் கிராமங்களில் முந்நூறு போலீஸார் புகுந்து பெண்களின் சேலைகளை உருவியும், மர்ம உறுப்புகளில் அடித்தும் காயப்படுத்தியுள்ளனர். ‘அப்பாவிகளான எங்களைக் கைது செய்தால் தீக்குளிப்பேன்’ என்று மிரட்டிய முத்துலட்சுமி என்ற பெண்ணை உடனடியாகக் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்திருக்கிறார்கள். தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, நடந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும்’’ என்றார் அவர்.
‘‘கூமாப்பட்டியில் நடந்த இருபிரிவினருக்கிடையேயான மோதலின்போது, அம்மச்சியாபுரத்தில் இருந்து சுமார் ஐம்பது பேர் பெட்ரோல் குண்டுகளுடன் வந்ததாகவும், அவர்கள் நடத்திய கல்வீச்சில் மூன்று போலீஸார் காயமடைந்ததாகவும், அதன்பிறகுதான் போலீஸார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி நான்கு ரவுண்ட் சுட்டதாகவும் திருவில்லிபுத்தூர் தாசில்தார் பாலு என்பவர் கூறியதாக நாம் கேள்விப்பட்டோம்.
மாவட்ட எஸ்.பி. செந்தில்குமாரிடம் பேசினோம். ‘‘நிலைமை இப்போது கட்டுக்குள் இருக்கிறது. ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். லட்சுமி என்ற மூதாட்டி எப்படி இறந்தார் என்பது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுக்குப் பிறகே தெரியவரும்!’’ என்றார் அவர். லட்சுமியின் உடலை வாங்க, அவரது உறவினர்கள் மறுத்து வரும் நிலையில், கடந்த 6_ம் தேதி அந்த உடல் இருந்த மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணக்கிடங்குக்குத் திடீரென வந்தார், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி.
‘‘தலித் பிரிவினருக்கிடையே ஏற்பட்ட லேசான தகராறு முடிந்து போன நிலையில், அன்றிரவு போலீஸார் வீடு வீடாகப் புகுந்து சுமார் நூறு பெண்களின் மார்பகம், மர்ம உறுப்பு போன்றவற்றைத் தாக்கியுள்ளனர். லட்சுமியின் மரணத்தை, கொலை வழக்காகப் பதிவு செய்யவேண்டும். இதில் தொடர்புடைய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். சம்பவம் நடந்து இத்தனை நாளாகியும் இன்னும் ஆர்.டி.ஓ. இந்தப் பக்கமே வரவில்லை. போராட்டம் வேண்டாம் என்று நாங்கள் நினைக்கிறோம். அந்தக் கட்டத்துக்கு அரசு எங்களைத் தள்ளிவிடக்கூடாது’’ என்றார் அவர்.
ஒரு கோழியால் ஏற்பட்ட தகராறில் மூன்று குக்கிராமங்கள் இப்படிக் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடப்பது பரிதாபம்தான்.
நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்.

சுதந்திரம்

அவன் சொன்னதே என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது। அவன் சொன்னதில் என் தூக்கத்தையும் தொலைத்து இப்படி விட்டத்தைப் பார்த்து படுக்க வைத்துவிட்டானே? 'நானும் அவனைப் போல் இருந்துவிட முடியுமென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்ற நினைப்பே பெரிய நிம்மதியையும் பிரமிப்பையும் தருகிறதே? இந்த எண்ணம் எனக்கு ஏன் தோன்றுகிறது? இப்போதுதான் தோன்றிய ஒன்றா அல்லது மனதில் ஒளிந்துக் கிடந்தது இப்போது அவன் சொன்னவுடன் விஸ்வரூபம் எடுக்கிறதா? எத்தனை ஆண்டுகள் கழித்துப் பேசுகிறேன் அவனுடன் அந்த சந்தோஷமெல்லாம் மறந்து ஒரு புள்ளியில் வந்து நிற்கிறதே மனது. அவன் மனைவி மக்களுடன் அமெரிக்காவில் சந்தோஷமாக இருக்கிறான் கொடுத்து வைத்தவன் என்றல்லவா நினைத்திருந்தேன். இப்ப மட்டும் என்னவாம் எது எப்படியிருந்தாலும் என்னைப் பொருத்தவரை அவன் கொடுத்து வைத்தவன் தான். அவன் எவ்வளவு சுலபமாகத் தன் மனைவிக்கு வேறு ஒருவன் பிடித்திருக்கிறது அதனால் அவளுக்கு அவனையே திருமணம் செய்து கொடுத்துவிட்டேன் என்கிறான். "எப்படிடா அப்படி முடியும்?" என்றால் 'சிவில்' என்கிறான். குழந்தையைப் பற்றி நான் தயக்கத்துடன் கேட்டால் அவனோ 'மாற்றி மாற்றி எங்கள் வசதிக்கேற்ப பார்த்துக் கொள்வோம், எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது' என்கிறான் சுலபமாக. புரிதல் இருந்தால் ஏன் பிரிய வேண்டுமாம்? இடம் மாறிவிட்டால் நம் கலாச்சாரம், பண்பாடு, சிந்தனை எல்லாமுமா மாறிப் போகும்? ...ஏன் மாறக்கூடாது? இருந்தால் அவனைப் போல் தான் இருக்க வேண்டும். இந்தத் திருமணம், கட்டமைப்பு, ஒழுங்கு, ஒருவனுக்கொருத்தி இதெல்லாம் எப்போது பிறந்தது? மதம் வந்து முளைத்த பிறகுதான் இந்த கருமாந்திரமெல்லாம் வந்திருக்கக் கூடும். பெரியாரை தீவிரமாக வாசிக்கும் போதெல்லாம் அவர் திருமணத்தைக் குறித்து சொல்லியிருப்பதைப் படிக்கும் போதெல்லாம் பெரியார் மீது பழியைப் போட்டு திருமணத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வதோடு சரி. திருமணம் என்ற ஒன்று வந்தே இருக்கக் கூடாது பிடித்திருந்தால் சேர்ந்து வாழ்ந்து, எந்தப் பொறுப்புகளும் சுமந்துக் கொள்ளாமல் வாழ்க்கையை அப்படியே நாம் விரும்பியபடி அமைத்துக் கொண்டு நேசித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும். இந்த சென்னையில் இருந்துக் கொண்டு நானே இப்படியெல்லாம் சிந்திக்கும் போது நான் நினைப்பது போன்ற வாழ்க்கை வாழும் அமெரிக்கர்களை சூழ வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவனுக்கு இதற்கு மேலேயும் தோன்றியிருக்குமாக இருக்கும். நான் ஒரு பயிற்சிக்காக சிறிது காலம் ஐரோப்பாவிற்குச் சென்றிருந்தபோது நான் சந்தித்த ஆங்கிலேயர் அதிசயமாகக் கேட்டது 'உங்க மனைவி நீங்க 1-2 வருடம் கழித்து உங்க நாட்டுக்குச் சென்றாலும் உங்களுக்காகவே காத்து இருப்பார்களா?' என்று மனைவியை இந்தியாவில் விட்டு அமீரகத்தில் வாழும் ஒரு தமிழரைப் பார்த்து பிரம்மிப்போடு கேட்டுக் கொண்டிருந்தாரே. அந்த ஆங்கிலேயர் இந்திய திருமண முறையைப் பற்றி எவ்வளவு இரசித்து கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் வாழுபவர்களுக்குத் தான் தெரியும் அதிலுள்ள கஷ்டம் என்பதை அவரிடம் சொல்லமலேயே வந்துவிட்டேன். ஐரோப்பாவிற்குச் சென்றேன் என்றுதான் பெயர். போனேன் வந்தேன் என்று இருந்துவிட்டேன் - எதற்கும் நேரமில்லாமல் போனது. அதற்கே சந்தேகச் சிக்கலில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள ஒரு மாதத்திற்கு மேலானது. இதற்கெல்லாம் பயந்தே என் மேலாளரிடம் நான் ஊரைவிட்டு எங்கும் எதற்காகவும் போவதாக இல்லை. அப்படியே போனால் குடும்பத்தோடுதான் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன். ச்சீ என்ன ஒரு கேவலம் அதையும் பெரிய பெருமிதமாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். குடும்பக் கட்டமைப்புக்குப் பயந்தே எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அல்லவா தகர்த்துவிட்டு வந்திருக்கிறேன். கையாலாகாத் தனத்தோடு எத்தனை நாட்கள் தான் நான் இப்படி குழந்தையாகவே தலையணையை நனைப்பது? எத்தனை பேர் என்னைக் காதலித்தார்கள், ஏன் தான் நான் தவறான துணையைத் தேர்ந்தெடுத்தேனோ? நானா தேர்ந்தெடுத்தேன்? இணையத்தில் தொடர்ந்து பேச்சாடல் (Chatting) செய்ததில் வந்து விழுந்தது இந்தக் கண்றாவி காதல். அப்போதே யோசித்திருக்க வேண்டும் இவளுக்கு என்னை எதற்காகப் பிடித்தது என்று. காதலை என்னைவிடத் தயக்கமின்றி தெரிவித்தது அவள்தானே? கடல் கடந்த வேலையில், கைநிறைய சம்பளத்தில், கணினியியல் படித்த இந்தத் திறமையான வீசிகரிக்கும் ஆணை யாருக்குத்தான் பிடிக்காது? வாழ்க்கையின் பாதுகாவலுக்கு ஒரு ஆளை தேடியிருக்கிறாள், பெண்களுக்கே உண்டான சுயநலமென்று நன்றாக யோசித்திருந்தால் என் மரமண்டைக்கு அதெல்லாம் புரிந்திருக்கும். அப்போதிருந்த தனிமையில் இவள் பேச்சாடலுக்கு அடிமையாகிப் போய் கைப்பிடிக்கவும் நேர்ந்துவிட்டது. ஆனாலும் அது ஒரு சுகமான வசந்த காலம் தான். நினைத்தால் இன்றும் இந்த நொடியும் இனிக்கிறதே! காதல் என்ற போதையில் மிதந்துக் கொண்டே கல்யாண நாளை வரவேற்றேன். பிரச்சனையில்லாத காதல் திருமணம் நம்முடையதாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். பேச்சாடலில் அவள் பேசியதற்கும் இப்போதிருக்கும் பிசாசிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அவளா இவள்? திருமணம் முடிந்து ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்று முடிந்துவிடாமல் குறைந்தது 4 வருடம் என் வாழ்நாளிலேயே சந்தோஷமானதாகத் தான் இருந்தது. எப்போது அவளுக்கு என் செயல்களில் நம்பிக்கையின்மை வந்ததோ சந்தேகம் என்ற நோய் வந்ததோ அப்போதே நான் செத்துவிட்டேன். எங்கள் காதல் பேச்சாடலில் நிகழ்ந்ததால் முதலில் நான் கணினியில் பேச்சாடல்களை நிறுத்த வேண்டுமென்று உத்தரவிட்டாள். 'முடியாதுடி சனியனே, நான் அலுவலகத்தில் பேசினால் உனக்கு தெரியவா போகிறது' என்று அந்த நொடியே பளாரென்று ஒன்று கொடுத்திருந்தால் இப்போது இந்த நிலைக்கு வந்திருக்காது. ஒவ்வொரு நாளும் என் ஒவ்வொரு செயலிலும் அவளுக்கு மட்டும் தானே ஏதேனும் தவறு கண்டுபிடிக்க முடிகிறது. ஏன் இப்படியாகிவிட்டாள்? எதற்காக என்னை வதைப்பதோடு அவளையும் வதைத்துக் கொள்கிறாள்? என் நண்பனின் மனைவி போல இவளுக்கும் யாராவது பிடித்திருந்தால் 'போய் தொலை' என்று அனுப்பிவிடலாமே, ஆனால் இவளோ அலாதியான பாசப் பிணைப்பு என்று பிதற்றிக் கொண்டு என்னை ஒரு நாய் குட்டிப் போல் கட்டி இழுத்து தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள அல்லவா ஆசைப்படுகிறாள்? நான் என்ன ஜடப் பொருளா அல்லது வீட்டில் இருக்கும் ஒரு மேஜையா அவளுக்காக உபயோகித்துக் கொண்டு உணர்வுகளே இல்லாமல் ஒரு மூளையில் முடங்கி கிடக்க? எனக்கென்ற நட்பு வட்டாரங்கள் கூட இவளால் சுருங்கிவிட்டது. சுருங்கிவிட்டதென்ன சுருங்கிவிட்டது இல்லாமல் போனதென்று சொன்னால் ரொம்பப் பொருத்தம். போதும் போதும் மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டு அழுவதைவிட ஒரு முடிவு எடுக்க வேண்டியதுதான். நான் விவாகரத்து பிரிவு என்று நினைத்தாலே குழந்தை தான் என் கண் முன்னால் வந்து நிற்கிறாள். என் ஒரே பிடிப்பான என் மகள் என் கைவிட்டுப் போய்விட்டால்? அப்படி ஒன்றும் நடந்துவிடாது என் குழந்தை என்னிடம் இருந்து வளரவே விரும்புவாள். வருங்காலத்திற்காக இனியும் என் நிகழ்கால சந்தோஷத்தை இழக்க முடியாது. என் குழந்தையின் சந்தோஷத்திற்காக நான் ஏன் திருமணம் என்ற சிறையில் சிக்கிக் கொண்டு சிறகடிக்க முடியாமல் சிலுவையில் அறைந்தாற் போல் திண்டாட வேண்டும்? யோசித்து யோசித்தே தலையில் உள்ள பாதி முடியும் கொட்டிவிட்டது, வாழ்க்கையில் விரக்திதான் மிஞ்சியிருக்கிறது. போதும் போதும் இதற்கு ஒரு முடிவுக் கட்டியாகியே தீர வேண்டும். முடிவெடுத்தவனாக "போடி உங்க வீட்டுக்கு போய்விடு, விவாகரத்து நோட்டிஸ் வந்து சேரும்". மகளைப் பார்த்து "கண்ணா, இனி அப்பாதாண்டா உனக்கு எல்லாம். வா செல்லம் நீ தான் என் வாழ்வின் பிடிப்பே". "செல்லம், இனி நீ தான் என் வாழ்க்கையே" என்று அவள் சொல்லும் போதே தலையணையால் யாரோ அடிப்பது போல் உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தான்."எவ அந்த செல்லம் உங்க வாழ்க்கையோட பிடிப்பு? இப்படி கன்னாபின்னான்னு தூக்கத்தில பேசுறது, கேட்டா நான் பிசாசாகி போறேன்ல? என்று 'உர்'ரென்ற முகத்தோடு அவனை உலுக்கிக் கொண்டே கேட்டாள். "உங்க கூட சண்டப் போட நேரமில்ல. இன்றைக்கு சுதந்திர தினம் எங்க பள்ளிக்கூடத்துல விழா, அதுக்கு ஆசிரியர்கள் சீக்கிரம் போகணும்னு சொன்னேன்ல? சரி நான் கிளம்புறேன், பாப்பாவும் என் கூட வரா... இட்லி வச்சிருக்கேன் அத சாப்பிட்டுட்டு, உங்களுக்கு கட்டி வச்சிருக்கிற டிபன் பாக்ஸை மறக்காம எடுத்துட்டு போங்க. அப்புறம் நீங்க போகும் போது எல்லா விளக்கும் விசிறியும் அணைச்சிருக்கான்னு பார்த்துட்டு, கதவெல்லாம் ஒழுங்கா மூடியிருக்கான்னு ஒருமுறைக்கு இரண்டு முறை செக் பண்ணிடுங்க. உங்க ஷர்ட் இஸ்திரி பண்ணி அங்க மாட்டியிருக்கேன்... சரி நேரமாச்சு நான் வரேன்..." என்று மூச்சு விடாமல் முழங்கிவிட்டு காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்துக் கொண்டிருந்தாள். 'ச்சே! எப்போ தூங்கிப் போனேன் நான்? அவளை வெளியே 'போ'ன்னு சொன்னது கனவா? அதானே எனக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வரும்? அவ்வளவு சீக்கிரம் எனக்கு விடுதலை கிடைத்துவிடுமா என்ன? ஆனா இவ இல்லாட்டி என் பாடு திண்டாட்டம்தான். இனி இப்படியெல்லாம் யோசிக்கக் கூட கூடாதுன்னு இந்த சுதந்திர நாளில் உறுதி மொழி எடுத்திட வேண்டியதுதான்'।
http://www.jazeela.blogspot.com/

12 Aug 2007

துபாயில் உணர்வாய் உன்னை பயிற்சி முகாம்

துபாயில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம்துபாயில் கோட்டாறு நண்பர்கள் குழுமத்தின் சார்பில் உணர்வாய் உன்னை எனும் தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 10, 2007) அன்று கராமா பகுதியில் உள்ள விஸ்டம் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்றது.வளைகுடாவிற்கு வந்து விட்ட அவசரத்தில் ஒவ்வொருவரும் சம்பாதிப்பதில் மட்டுமே குறிக்கோளாய் இருந்து வரும் மனிதர்கள் தாங்கள் யார், தங்களிடம் உள்ள திறமைகள் என்ன, தேவையற்ற சிந்தனைகளை மனதில் புதைத்து வைத்துக் கொண்டு வாழ்வைத் தொலைத்து திரிகின்றனர் சிலர்.இத்தகைய நிலையைப் போக்கிடும் முயற்சியாக கோட்டாறு நண்பர்கள் எடுத்த முயற்சியின் காரணமாய் பயிற்றுநர்கள் பொதக்குடி ஜலால் மற்றும் கள்ளக்குறிச்சி உசேன் பாஷா ஆகியோர் சிறப்பான முறையில் பயிற்சி அளித்தனர்.ஆங்கிலத்தில் பெங்களூரைச் சேர்ந்த இஸ்லாமிக் வாய்ஸ் ஆங்கில மாத இதழ் ஆசிரியர் துபாயில் இம்முகாமை நடத்திய பின்னர் தமிழில் இத்தகைய பயிற்சி வகுப்புகள் பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் சிறப்புற நடைபெற்று வருகிறது.
கோட்டாறு நண்பர்கள் குழுமம் பல்வேறு கல்வி, சமூக மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை துபாயில் உள்ள தங்களது ஊர் நண்பர்களை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.உணர்வாய் உன்னை பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை கோட்டாறு நண்பர்கள் குழுமத்தின் தலைவர் நசீர் உசேன் ( 050 655 24 91 ), செயலாளர் ஜகபர் சாதிக் ( 050 734 6756 ) , அசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.இது போன்ற பயிற்சி முகாம்களை தமிழகத்திலும், அமீரகத்திலும் நடத்த விரும்புவோர் ஜலால் ( 050 614 2633) மற்றும் உசேன் பாஷா ( 050 385 1929 ) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.தகவல் : முதுவை இதாயத்

8 Aug 2007

SMS - அன்புவழி ஆயுதம்

நமக்கு வருகிற SMS பெரும்பாலும் விளம்பரங்களாகவே இருப்பதால், அதைப் பார்ப்பதற்கே பல நேரங்களில் தொல்லையாய் இருக்கிறது. ஆனால் சீனாவில் நடந்த இந்நிகழ்ச்சியைப் பார்த்தால் SMS மூலம் எத்தகைய சாதனைகளும் செய்யலாம் என அறியலாம். 'சிறு துறும்பும் பல்குத்த உதவும்' அல்லது 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'.ஒரு சீன இளம்பெண் கடைவீதிக்குப் போயிருந்த போது, ஒரு திருடன் அவள் கைப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் பறந்து விட்டான். அந்த கைப்பையில் சுமார் 630 அமெரிக்க டாலர்கள் பெறுமதியுள்ள சீனப்பணமும், அத்துடன் அப்பெண்ணின் செல்போன், ஓட்டுனர் உரிமம் மற்றும் I.D. முதலிய முக்கிய ஆவணங்களும் இருந்தனவாம். அந்தப் பெண் தன் தோழியிடம் உள்ள செல்போன் மூலம் தனது எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது மணியடிக்கிறது ஆனால் திருடன் எடுக்கவில்லை. ஆனால் இணைப்பையும் துண்டிக்கவில்லை.அடுத்ததாக அப்பெண் செய்தது முதலில் ஒரு SMS: – 'உன் நிலைமையை என்னால் உணர முடிகிறது. அதனால் உன்னை என்னால் ஒரு திருடனாக எண்ண மனம் இடந்தரவில்லை. உனக்கு வேறு வழியில்லாததால்தான் இவ்வாறு எடுத்திருக்கிறாய் என நினைக்கிறேன்' என்பதாக அனுப்பினாள்.அடுத்த SMS: – 'உன்னைப் போன்றவர்கள் நினைத்தால், நல்ல வழிமுறைகளில் சிறந்த சாதனைகள் செய்ய இயலும். முயன்ற ஓரிரு இடங்களில் நீ பெற்ற தோல்விகள் உன்னை இவ்வாறு செய்யத் தூண்டியிருக்கும் என்றே நான் நினைக்கிறேன்' என்பதாக.அடுத்து, அதற்கடுத்து, அதற்கடுத்து என தொடர்ந்து வரிசையாக (21) இருபத்தியொரு SMS அனுப்பினாள். அதனூடாக 'அப்பணத்தை அவன் எடுத்துக் கொள்வதால் தனக்கேதும் வருத்தமில்லை. திறமைசாலியான இளைஞர்களில் ஒருவன் தவறான வழியில் சென்றுள்ள மன வேதனைதான்' எனவும், இன்னும் 'பணம் போனாலும் அதிலுள்ள (கை பேசியில் சேமிக்கப்பட்டுள்ள) தொலைபேசி எண்களும், மற்ற முக்கிய ஆவணங்களும் தொலைவதால் அவளுக்கேற்பட விருக்கிற மன அழுத்தத்தையும்' குறிப்பிடத் தவறவில்லை.அவள் வீட்டுக்கு திரும்பிய போது, ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக, அவளுடைய கைப்பை அழகாக பொதியப்பட்டு, அவள் வீட்டுக் கதவருகில் அவளுக்காக காத்திருந்தது. அதிலிருந்து எதுவும் எடுக்கப்படவில்லை. உள்ளது உள்ளபடியே. ஆனால் கூடவே ' அவள் அனுப்பிய SMSகளால் தன் மனம் திருந்தியதாகவும், தன் செயலுக்கு வருந்துவதாகவும், இனி இது போன்ற செய்கைகளில் ஈடுபடாமல், ஆக்கப்பூர்வமான வழிகளில் கவனத்தைத் திருப்பி,சிறந்த மனிதனாக வாழப்போகிறேன்' என்ற குறிப்போடு.(துபாய் 96.7 FM மலையாள வானொலியில் சொல்லக் கேட்டது. சிறிது மெருகேற்றப்பட்டுள்ளது.)
Posted by சுல்தான் at 1:31 PM

எச்சில்...... ஐயையே....!!!

என் சகோதரரிடம் பேசிக்கொண்டிக்கும்போது, பேச்சின் போக்கில் அவர் சொன்னது. அவர் எந்த புத்தகத்தில் படித்தாரென்பதோ, யார் சொன்னார்களென்றோ தெரியாது. ஆகவே, நீங்கள் கேட்டதாகக்கூட இருக்கலாம்.)கல்லூரி நண்பர்கள் நான்கு பேர். எப்போதும் லந்து, அரட்டை, அலம்பல்தான். அவர்கள் கண்ணில் மாட்டியவர்கள், வம்பில் மாட்டாமல் தப்பிப்பது அபூர்வம்.அவர்கள் வழமையாகச் செல்லும் ஒரு உணவகத்தில் (Restaurant), உணவு கொண்டு வரும் ஒரு குறிப்பிட்ட பரிமாறுபவரிடம் (supplier) எப்போதும் தகராறு செய்வார்கள். அந்த பணியாளர் எந்த மேசையில் பரிமாறுகிறாரோ அங்கேயேதான் போவார்கள். அவர்களை வேறு இடத்துக்கு மாறச் சொன்னாலும் மாற மாட்டார்கள. அந்தப் பணியாளரையும் மாற விட மாட்டார்கள்.உதாரணமாக: தோசை கொண்டுவரச் சொல்லி, அவர் கொண்டு வந்ததும், நாங்கள் சொன்னது பரோட்டாதான் என்று மாற்றச் சொல்லி அவரைத் தொந்தரவு செய்வார்கள். இவர்கள் வந்தாலே அவருக்குப் பிரச்னைகள் துவங்கி விடும். முதலாளியிடம் வசவுகளும் கிடைப்பதுண்டு. தொடர்ந்து இரண்டு வருடம், அவர்கள் வரும் போதெல்லாம், இந்த மாதிரி தொல்லை தருவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். அவர்களது கல்லூரி வாழ்க்கை முடிந்து விடை பெறுகிற நேரம். கடைசியாக அந்தப் பணியாளரை சந்தித்து மன்னிப்பு கேட்க முடிவு செய்தார்கள். ஐந்து அல்லது ஆறாயிரம் பெறுமானமுள்ள நல்லதொரு அன்பளிப்பை வாங்கிச் சென்று, அவரிடம் கொடுத்து, 'நாங்கள் இதுநாள் வரை செய்ததை மன்னித்து, எங்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மீது தவறே இல்லை. வேண்டுமென்றே, விளையாட்டுக்காக, நாங்கள்தான் அவ்வாறு நடந்து கொண்டோம்' என்று சொன்னார்கள். அன்பளிப்பை ஏற்றுக் கொண்ட அந்த நல்ல பணியாளர், 'ஓகோ அப்படியா! இதுநாள் வரை அது விளையாட்டுக்காகத்தான் எனப் புரியாமலிருந்து விட்டேன். இனிமேல் நீங்கள் எப்போது சாப்பிட வந்தாலும், உங்கள் உணவில் எச்சிலைத் துப்பித்துப்பிப் பரிமாறுவதை கண்டிப்பாக நிறுத்தி விடுவேன்' என்று சொன்னாராம்.(இதைக் கேட்டதிலிருந்து அலுவலக உதவியாளரை கோபமாக எதுவும் பேசக்கூட யோசனையாயிருக்கிறது. அவரிடம் கோபமாக ஏதும் பேசியிருந்தால், அன்றைய தேநீரை நானே தயாரித்துக் கொள்வேன். எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான்.....)
Posted by சுல்தான்

துபாய் சிரிப்புகள்......

Tuesday, 8August 2007

துபாய் சிரிப்புகள்
1. தமிழக கிராமத்திலிருந்து வயல் வேலைக்காக வந்து, துபையின் கிராமப் புறங்களிலேயே தங்கிவிட்டு, நகருக்கு வந்தவரிடம்நண்பர்: என்னப்பா வேலையெல்லாம் எப்படி போகுது?கிராமவாசி: ஒரே ச்சூடுண்ணா!. கெஷ்டந்தான்!நண்பர்: பேச்சுலாம் புரிஞ்சுகிச்சா?கிராமவாசி: ஒண்ணும் புரிய மாட்டேங்குது!. என்ன சொல்றான்னே தெரிய மாட்டேங்குது!ஆனால் நாய் தமிழ்ல கொலைக்குதுன்னா!!மசூதில வாங்கு தமிழ்ல சொல்றாங்கண்ணா!!நண்பர்:!?!!2.புதிதாக அரபி வீட்டில் வேலைக்கு சேர்நது விட்டு, நண்பர்களைப் பார்க்க வந்தவர்வந்தவர்: டேய்! என்னமோ தெரியல! எங்க அரபி காலைல எந்திரிச்சு என்னை பார்த்தான்னு 'சூ*த பார்! சூ*த பார் அப்டிங்கிறான். நான் பேண்ட் பின்னால எங்காயாச்சும் கிழிஞ்சிருக்கான்னு பார்த்தேன்.ஒன்னும் கிழிஞ்சு இல்ல. நேத்து காலைல அரபிக்காரி என்னைப் பார்த்தவுடன் அதே மாதிரி சொல்றாடா? என்னடா செய்யுறது!.நண்பர்: (சிரித்துக் கொண்டே) போடா லூஸ். அவுங்களுக்கு தமிழ் தெரியுமா? 'சூ தபஅ' என்றால் அரபியில் நல்லா இருக்கியா? உடம்பு எப்டி இருக்குண்ணு அர்த்தம்டா! வந்தவர்: அசடு வழிகிறார்.3.ஒரு மலையாளி தமிழ் நண்பரிடம் வழி கேட்கிறார்மலையாளி: அண்ணாச்சி. மச்சி மார்க்கெட் எவிட இண்டு? (மீன் அங்காடி எங்கே உள்ளது?)தமிழ் நண்பர்: மச்சி மார்க்கெட்டா? நேரா போயி... மனசிலாயா? சோத்துக்கை பக்கம் திரும்பு... மனசிலாயா? அங்க ஒரு ஈரானி கடை இருக்கும்... மனசிலாயா? அங்கேர்ந்து பீச்சாங்கை பக்கம் திரும்பு... மனசிலாயா? ஒரு பிரிட்ஜ் வரும்... மனசிலாயா? அந்த பிரிட்ஜ் தாண்டுணா மச்சி மார்க்கெட்தான்..! மனசிலாயா?மலையாளி: எல்லாம் மனசிலாயி. இந்த மனசிலாயியையும் தமிழ்லயே சொல்லி இருக்கலாம்.(மலையாளத்தில் மனசிலாயா என்பதற்கு தமிழில் புரிகிறதா என்பது பொருள்) 4.குறைந்த சம்பளத்தில் இருப்பவர்கள் உணவகங்களில் உணவருந்த கட்டுப்படியாவதில்லை. மற்றும் மலையாளிகளின் உணவகத்தில் உணவிலுள்ள கூடுதல் காரமும், மஞ்சளும் வேறு பிடிப்பதில்லை. அதனால் தனி மெஸ்தான் ஊரிலுள்ள சாப்பாடு போலவே கிடைக்கும்.சமைப்பவர்: (எதையோ தேடிக் கொண்டே) சட்டியில சாப்பாடு இருக்கு! அவங்கவங்க தேவையான அளவு வீணாக்கம வச்சுக்கங்கப்பா.சாப்பிட வந்தவர்கள்: சோறு வச்சுக்குறோம். தொட்டுக்க என்ன இருக்கு?சமைப்பவர்: கோழி வருத்திருக்கு. ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக்குங்கப்பா!சாப்பிட வந்தவர்கள்: அண்ணே! சாப்பாட்டுல பீடி ஒரு கட்டு கிடக்கு. ஆளுக்கு எத்தனை எடுத்துக்கனும்சமைப்பவர்: அட அதத்தாம்பா தேடிக்கிட்டிருக்கேன். சாப்பாடு செய்யும்போது உள்ளே விழுந்திருச்சு போலிருக்கு! (அசடு வழிகிறார்)5. முதல் நண்பர்: அரபி சையது இருக்கான்ல. அவனை உட்காருன்னு சொன்னா உட்கார மாட்டான். ஏன் தெரியுமா?2வது நண்பர்: அவனுக்கு பின்னால கட்டி வந்திருச்சோ?முதல் நண்பர்: அதெல்லாம் இல்ல3வது நண்பர்: அவனுக்கு வயிறு பெருசா இருக்குல்ல. உட்கார கஷ்டம்!.முதல் நண்பர்: அதெல்லாம் இல்ல4வது நண்பர்: அவன் பொண்டாட்டி வந்திருக்கிற பயத்தில இருக்கானோ என்னவோ? முதல் நண்பர்: அதெல்லாம் இல்லஎல்லோரும்: அப்புறம் என்னதான்னு சொல்லித்தொலை நாயே!முதல் நண்பர்: அவனுக்கு தமிழ் தெரியாதுப்பாஎல்லோரும் சேர்ந்து அடிக்க ஓடுகிறார்கள்.
Posted by சுல்தான் at 6:19 PM

7 Aug 2007

வெளிநாட்டுக்கு வரும் இந்தியர்களில் தமிழர்களை அடையாளம் காண்பது ரொம்ப சுலபம்! அதற்கான வழிமுறைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். நான் முதன்முதலில் வெளிநாடு வந்தபோது கண்டவற்றை சொல்றேன். சிலருக்கு எப்படிடா நம்மை இவன் கவனித்தான் என்று அதிர்ச்சியாக இருக்கலாம். இருந்தாலும் சொல்றேன்.

அ) விமான நிலையத்தில்:
Check In பண்ணும் முன், வழியனுப்ப வந்திருப்பவர்களில் ஓரிருவராவது தேம்பித் தேம்பி அழுது கொண்டே Departure Gate நோக்கிச் செல்வார்.
லக்கேஜ் வெயிட் போடும் இடத்திலிருந்து கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு பெரிய சூட்கேசையும் பிளாஸ்டிக் பையையும் பக்கதிலுள்ள தூணுக்கு பின்னாடி மறைத்து வைத்து விட்டு மற்றவற்றை லக்கேஜில் போடுவார்.
Allowed Baggage ஐ விட அதிகமாக இருக்கும் போது, ஏர்லைன்ஸ் முகவரிடம் கருணை காட்டச் சொல்லி கெஞ்சுவார்.
Boarding Pass கொடுக்கும் போது ஜன்னல் பக்கம் இருக்கை கேட்டுப் பார்ப்பார்.
இலவச தொலைபேசியில், தேவையில்லாமல் கண்ட கண்டவருக்கும் போன் போட்டு 'எந்தப்பிரச்சியையும் இல்லாமல் Boarding Pass வாங்கி விட்டதாகவும், ப்ளைட்டுக்கு காத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பி விடுவதாகவும் கத்துவார்.
விமானத்தில் நுழைவாயிலில் வரவேற்கும் அழகான விமானப் பணிப்பெண்ணிடம் கை குலுக்கி விட்டு உள்ளே நுழைவார்.
Hand Luggage ஐ தலைக்கு மேலுள்ள பகுதியில் வைத்ததுடன் கையில் கொண்டு சென்ற (லுங்கி, செருப்பு, ப்ரஸ்,பேஸ்ட், பழைய வார இதழ்கள் அடங்கிய) பிளாஸ்டிக் பையை தனது காலுக்கருகில் வைத்துக் கொள்வார்.
டாய்லெட்டில் சென்று, (கதவை மூடாமல் அல்லது மூடத் தெரியாமல்) வாஷ்பேசினில் வைக்கப்பட்ட (பேஸ்ட், சேவிங் கிட், சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட) ஒப்பனை சாதனங்களை பாண்ட் பாக்கெட்டில் எடுத்துப் போட்டுக் கொள்வார்.
விமானத்தில் சீட் பெல்ட் போடச் சொல்லி அறிவிப்பு வந்த பின்னரும், பக்கத்தில் இருப்பவருடன் அரட்டையடித்துக் கொண்டிருப்பார். விமானப் பணிப்பெண் அருகில் வந்து பெல்டைப் போடச் சொல்லி விட்டுச் செல்வார்.
விமானம் பறக்க ஆரம்பித்த சில நேரங்களில் கொடுக்கப்படும் Complimentary chocolate ஐ கொத்தாக அள்ளுவார்.
பரிமாறப்படும் (Inflight Catering) உணவுடன் வழங்கப் படும் அனைத்தையும் தேவைப்படா விட்டாலும் இலவசமாகக் கிடைத்தது என்பதற்காக பயன்படுத்துவார். உதாரணமாக ஆரஞ்ச் ஜூசையும் பால்கலந்த தேனீரையும் அடுத்தடுத்து அருந்துவார்.
குடிகாரப் பயணிகள் வழக்கமாக வழங்கப்படுவதை விட மேற்கொண்டு கேட்டு அசடு வழிவார்கள். கொறிக்க வழங்கப்படுவதையும் தாராளமாக அள்ளிக் கொள்வார்கள்.
நல்ல ஆரோக்கியமாக இருந்தாலும், ப்ளாங்கெட் வாங்கி போர்த்திக் கொள்வார்கள். மறக்காமல் அதை சுருட்டி கொண்டு சென்ற ப்ளாஸ்டிக் பையின் அடியில் மடித்து வைப்பார்கள்.
விமானம் நிலையத்தை அடைந்ததும் கடைசியில் இருப்பவர்கள் முந்திக் கொண்டு வாசலுக்கு வருவார்கள். ஹேண்ட் லக்கேஜை எடுக்கும் போது கீழே உட்கார்ந்திருப்பவரின் தலையில் இடித்து விட்டு பண்பாடு கருதி "சாரி" சொல்வார்கள்.
சுங்கப் பரிசோதனையில் முழு பெட்டியையும் தலை கீழாகக் கவிழ்த்து சோதிக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவார்கள்.
ஏர்போர்ட்டில் வரவேற்க காத்திருப்பவர்களிடம், ஊர்ல எல்லோரும் நல்லா இருக்காங்கன்னு சொல்லி பீலா விடுவார். மறுநாள் ஒவ்வொருத்தவரைப் பற்றியும் எடுத்து விட ஆரம்பிப்பார்.

கடை வீதியில் அல்லது சூப்பர் மார்க்கெட்டில்:
முதலில் பொருளின் விலையைத் தேடுவார்.
Buy One Get One செக்சனையே சுத்தி சுத்தி வருவார்.
Perfume களை ஒவ்வொன்றாக அடித்துப் பார்ப்பார். எல்லாவற்றையும் அடித்துப்பார்த்து ஒரு புதுவாசனையுடன் வலம் வருவார்.
உணவுப் பொருட்களின் சாம்பிளை மறக்காமல் எடுத்துச் சாப்பிட்டு விட்டு வாங்காமல் இடத்தைக் காலி பண்ணுவார்.

பணியிடத்தில்:
பெரும்பாலும் ஒவ்வொருநாளும் அரக்கப் பறக்க பணிக்கு வருவார்.
வேலை முடிந்து செல்லும் போது நியூஸ் பேப்பரை மறக்காமல் சுருட்டி எடுத்துச் செல்வார்.
ஹிந்தி தெரியுமா என்று யாராச்சும் கேட்டால், தெரியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்பார்.
மாங்கு மாங்கென்று உழைத்தாலும் கடைசியில் கெட்ட பெயர்தான் கிடைக்கும்.
எந்த நாட்டுக்காரனாவது வில்லனாக இருப்பார்கள்.
இவையெல்லாம் நம்மவர்களை இழிவு படுத்துவதற்காக சொல்லவில்லை. மேற்சொன்னவற்றில் சில எனக்கும் பொருந்தி இருக்கலாம். உலகம் முழுவது பணி செய்யும் இந்தியர்களில் தமிழர்களின் நிலை இதுவாகவே இருக்கிறது. மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக உழைத்தாலும் பெரும்பாலான தமிழர்கள் நிம்மதியின்றியே இருக்கின்றனர் என்பது என் கனிப்பு.
NRI தமிழர்களை அவமதிப்பதாக என் மீது கோபத்திலிருப்பவர்கள் கீழுள்ள ஒரு NRI யின் கடிதத்தைப் படிக்கவும்।சொற்ப சம்பளத்தில் குடும்பம் நடத்தும் NRI கணவன் தன் இயலாமையை வெளிக்காட்டாமல் சாதுர்யமாக மனைவிக்கு எழுதிய கடிதத்தையும் அதற்கான அவளின் பதில் கடிதமும் (பிறரின் கடித்தையோ டைரியையோ படிப்பதுதான் அநாகரிகம்; சுயசரிதம் என்று காசுக்கு எழுதி விற்றால் படிக்கலாமாம்.)--------------------------------------------------------------------------
அன்பே,இந்த மாதம் உனக்குச் செலவுக்கு பணம் அனுப்ப முடியவில்லை। அதனால் என்ன இருக்கவே இருக்கிறது என் அன்பான முத்தங்கள். ம்॥மா..இந்தா புடி.நூறு முத்தங்களுடன்....கணவன்.----------------------------------------------------------------------------கடிதத்தை பெற்றுக் கொண்ட மனைவி எழுதிய பதில்.
அன்பே ஆருயிரே...!இந்த மாத செலவாக அனுப்பி வைத்த நூறு முத்தங்களுக்கு நன்றிகள். அதை எப்படி செலவு செய்தேன் என்ற விபரத்தை அறிவீராக.1) பால்காரர் இரண்டு முத்தங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் பால் தர ஒப்புக் கொண்டுள்ளார்.2) மின்கட்டணம் வசூலிப்பவர் குறைந்த பட்சம ஏழு முத்தங்களுக்குப் பிறகே மின்கட்டனத்தை தள்ளுபடி செய்ய முடியும் என்று கறாராக சொல்லி விட்டார்.3) வீட்டு வாடகை கேட்டு வந்த வீட்டு உரிமையாளர் ஒவ்வொரு நாளும் 2-3 முத்தங்களே போதும்; வாடகை வேண்டாம் என்று சொல்லி விட்டார்.4) மளிகைக் கடைக்காரர் முத்தங்கள் மட்டும் போதாது என்றதால் வேறு சிலவும் கொடுத்து சமாளித்து விட்டேன்.5) மற்ற செலவுகளுக்கும் ஒன்றிரண்டு முத்தங்களாக நாற்பது முத்தங்கள் காலி.என்னைப் பற்றி கவலை பட வேண்டாம். நான் சந்தோசமாகவே இருக்கிறேன். கைவசம் முப்பதைந்து முத்தங்கள் உள்ளன. இதை வைத்து இந்த மாதமும் சமாளித்து விடலாம் என்று நம்புகிறேன். இதே முறையை அடுத்தடுத்த மாதத்துக்கும் செய்ய உள்ளேன். சரி வருமா? பதில் போடுங்கள். மற்றபடி உங்கள் உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். பாவம், அங்கு நீங்கள் தனியாக இருக்கிறீர்கள்.அன்புடனும் காதலுடனும்,மனைவி
எழுதியவர்: அதிரைக்காரன்



சிவாஜி - வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி!!!
வில்லன்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பைக்கில் விரட்டிச் செல்கிறார்........வில்லன்களும் விடுவதாக இல்லை; காற்றாய்ப் பறக்கிறார்கள்..........சூப்பர் ஸ்டாரின் பைக்கில் பெட்ரோல் குறைந்து கொண்டே வருகிறது.............பயங்கர ஷேசிங்............வில்லன்களைப் பிடிக்க முடியவில்லை.............சூப்பர் ஸ்டார் மனம் தளரவில்லை...பைக்கில் பெட்ரோலும் தீர்ந்து விட்டது!.......அதனாலென்ன? படத்தைப் பாருங்க!..............
சும்மா அதிருதுல...!

பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் துணிகரம்

பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் துணிகரம்பயணியை தாக்கி ரூ.10 ஆயிரம் பறிப்புஓட ஓட விரட்டிச் சென்று மர்ம கும்பல் அட்டகாசம்
பட்டுக்கோட்டை,ஜுலை.31-
பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் பயணியை ஓட, ஓட விரட்டி தாக்கி ரூ.10 ஆயிரம் பறித்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
பஸ்பயணி
பட்டுக்கோட்டையை அடுத்த புனல் வாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ஸ்டான்லி (வயது 32) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மயிலாடுதுறைக்கு சென்றுவிட்டு ரெயிலில் பட்டுக்கோட்டைக்கு வந்தார்.
தொடர்ந்து சொந்த ஊருக்கு போகவேண்டிய டவுன் பஸ்சுக்காக பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் தனியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது பஸ்நிலையத்தில் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று தனியாக நின்ற ஜோசப் ஸ்டான்லியிடம் ` நீ எந்த ஊர்... பெயர் என்ன?' மிரட்டினர். மேலும் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறிக்க முயன்றனர்.
ஓட, ஓட தாக்குதல்
நிலைமையை புரிந்துகொண்ட ஜோசப் ஸ்டான்லி மர்ம கும்பலிடம் இருந்த தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்ம கும்பல் விடாமல் ஜோசப்பை ஓட ஓட விரட்டி, உருட்டு கட்டை, செங்கல்லால் தாக்கினர். அத்துடன் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்துவிட்டு குற்றுயிராக விட்டனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவத்தை பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம கும்பல் சுவர்ஏறி குதித்து தப்பி சென்றனர். உடலில் பலத்த காயத்துடன் கிடந்த ஜோசப் ஸ்டான்லி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்.
பாதுகாப்பு வேண்டும்
பயணிகளின் நெஞ்சை பதற செய்யும் இந்த சம்பவம் பற்றி பட்டுகோட்டை பஸ் நிலையத்தில் கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
`பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இரவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கணவனுடன் வரும் பெண்களின் நகைகளை பறிப்பது, அதனை தட்டிகேட்கும் கணவனை தாக்குவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை தட்டிகேட்டால் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
பஸ் நிலையத்தின் அருகில் போலீஸ் நிலையம் இருந்தும், இரவில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, பஸ் நிலையத்தில் போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.'
இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் உப்பளத்தை கண்டித்து முத்துப்பேட்டையில் வரும் 3ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துகிறது.

தனியார் உப்பளத்தை கண்டித்து முத்துப்பேட்டையில் வரும் 3ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துகிறது.
முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகத்தில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக உப்பு உற்பத்தி செய்து விவசாயம், நிலத்தடிநீர், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தனியார் உப்பள கம்பெனியை தடை செய்ய கோரியும், இதுதொடர்பாக போராடும் விவசாயிகள் மீது தொடர்ந்து பொய்வழக்கு போடுவதை கண்டித்தும் முத்துப்பேட்டையில் வரும் 3ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் மேற்கொள்கின்றனர். எம்எல்ஏ உலநாதன் தொடங்கி வைக்கிறார்.
இதில் தமிழ்நாடு விவசாயி சங்க மாவட்ட தலைவர் பக்கிரிசாமி, முத்துப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கல்யாண சுந்தரம், வட்டார செயலாளர் முருகையன் உள்பட விவசாயிகள் பலர் கலந்துகொள்கின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் முருகையன் கூறினார்.

ரூ.3 லட்சம் மதிப்பு ஜவுளி பண்டல்கள் கொள்ளை

பட்டுக்கோட்டையில் பார்சல் ஆபீசை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஜவுளி பண்டல்களை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில்கூறியதாவது:
பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை சாலையில் பார்சல் சர்வீஸ் நிறுவத்ம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த நிறுவனத்தின் ஏஜெண்ட் பாண்டியன் ஆபீசை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். காலையில் வந்து பார்த்த போது ஆபீசின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது சேலைகள் அடங்கிய 19 ஜவுளி பண்டல்கள் கொள்ளளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பாண்டியன் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப்பதிந்து ஜவுளி பண்டல்களை திருடியவர்களை தேடி வருகிறார்

வருக நண்பரே...

இந்த வலைப்பூங்காவிற்க்கு நிங்கள் வருகை தந்தற்க்கு மிக்க நன்றி...