31 Dec 2007

Happy New Year

Happy New Year 2008

2008-ல் கணினி பாதுகாப்பு விவகாரங்கள்

2007-ம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் நாம் இருக்கிறோம். வைரஸ் மற்றும் பிற அச்சுறுத்தல்களிலிருந்து கணினிகளையும், நெட்வொர்க்குகளையும் பாதுகாக்க 2008-ல் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சைமன்டெக் உள்ளிட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.2008-ல் நிலவக்கூடிய பாதுகாப்பு போக்குகள் குறித்து சைமன்டெக் ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதலில் இருப்பது "தேர்தல் பிரச்சாரங்கள்". அரசியல்வாதிகள் இணையதளத்தை பிரச்சார எந்திரமாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது என்பதால், அதனால் ஏற்படும் கணினி பாதுகாப்பு விவகாரமும் முக்கியம் என்று சைமன்டெக் கூறுகிறது. அதாவது இதன் மூலம் ஆன்லைன் நன்கொடைக்கான பிரச்சாரங்கள், தவறான தகவல்கள் பரவுவது, மோசடி ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ளது.
இரண்டாவதாக தொழில் முறையில் வைரஸ்களை பரப்புதல், மற்றும் கணினி தொடர்பான மோசடிகளில் இறங்கும் "பாட்" (BOT) கும்பலின் வளர்ச்சியை சைமன்டெக் குறிப்பிடுகிறது. வைரஸ் பரவிய ஒரு கணினியை மோசடிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மர்மமான வேலைகளில் இறங்க அவர்களுக்கு `பாட்' கும்பல் உதவலாம்.
உதாரணமாக `பாட்' கும்பல் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கணினிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக விளம்பரம் செய்தார்களேயானால், இதனை பயன்படுத்திக் கொள்ள `பாட்' கும்பலுக்கு பணம் செலுத்தி மோசடிகளில் இறங்கலாம்.
மேலும் முக்கியமாக பயனாளர் அல்லது வாசகர் உருவாக்கும் இடுகைகளை (User Generated Content) வெளியிடும் ஒரு இணையதளம் மென்பொருள் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது என்று சைமன்டெக் எச்சரித்துள்ளது.
அதாவது குறிப்பிட்ட இணையதளம் உயர் தொழில்நுட்ப வைரஸ் ஸ்கேனிங் முறையை வைத்திருந்தாலும் அதனை ஏமாற்றி உள்ளே நுழைய முடியும் என்று அது கூறுகிறது. இந்த பட்டியலில் செல்பேசி மூலம் பயன்படுத்தும் பயன்பாடுகள், தொல்லை மற்றும் மோசடி மின்னஞ்சல்களின் பெருக்கம் ஆகியவை இறுதியாக இடம்பெற்றுள்ளன.ஆனால் செல்பேசி பாதுகாப்பு குறித்து சைமன்டெக் அதிக முன்னுரிமை அளிக்கவில்லை. ஏனெனில், செல்பேசிகள் தற்போது சிக்கல் நிறைந்த ஒரு தொழில்நுட்பமாக மாறி வருகிறது.
செல்பேசி வங்கி நடவடிக்கைகள் மற்றும் பிற நிதி தொடர்பான நடவடிக்கைகள் அதில் மேற்கொள்ளும்போது மட்டுமே ஹேக்கர்கள் அதில் மோசடி செய்யமுடியும்.அதேபோல் மோசடி மின்னஞ்சல் அல்லது தொல்லை மின்னஞ்சல்களை க்ளிக் செய்ய வைக்க புதிய உத்திகளை பயன்படுத்தலாம். உதாரணமாக எம்பி.3 அல்லது ஃபிளாஷ் கோப்புகள் சேர்க்கப்படலாம்.இணையதளத்தில் மேலும் மேலும் அதிக விஷயங்கள் சேர்க்கப்பட சேர்க்கப்பட பாதுகாப்பு விஷயங்கள் மேலும் சிக்கலாகவே போய் முடியும் என்று சைமன்டெக் எச்சரிக்கை செய்துள்ளது.

25 Dec 2007

IIT நுழைவுத் தேர்வு குறித்த விபரம்

IIT நுட்பக்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த நுழைவுத்தேர்வுக்கு ஜனவரி 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் சென்னை, மும்பை, தில்லி, கவுஹாத்தி, கான்பூர், கரக்பூர், ரூர்கீ ஆகிய 7 இடங்களில் IIT நுட்பக்கல்வி நிறுவனங்கள் உள்ளன. Indian Institute of Technology என்று அழைக்கப்படும் இந்த கல்வி நிலையங்களில் கல்விபயில மாணவரிடையே கடும் போட்டி இருக்கும்.
இதற்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு(Joint Entrance Exam-JEE) இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான மாணவ- மாணவியர் எழுதுவர். IIT கல்வி நிறுவனங்களில் B.Tech, B.Arch படிப்புகளில் சேருவதற்கும், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் IT படிப்பு படிப்பதற்கும், தன்பாத்தில் அமைந்துள்ள இந்திய சுரங்கவியல் கல்லூரி(Indian School of Mines)யில் சுரங்கத் தொழில்நுட்பம் படிக்கவும் இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
IITக்களில் 2008-2009-ம் கல்வி ஆண்டில் சேருவதற்கு வருகிற ஏப்ரல் 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) JEE நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவர்களும், தற்போது பிளஸ்-2 படித்துக்கொண்டிருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சத் தகுதியாக 60 விழுக்காடு மதிப்பெண் தேவை. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள், உடல் ஊனமுற்றோர் போன்றோருக்கு 55 சதவீத மதிப்பெண் போதுமானது. 2 தாள்களை கொண்ட இந்த நுழைவுத்தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தாளுக்கும் 3 மணிநேரம் வீதம் தேர்வு நடைபெறும். நுழைவுத்தேர்வில் மாணவர்களின் ஆராயும் திறன், சிந்தனை ஆற்றல், புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றைச் சோதிக்கும் வகையில் கேள்விகள் இடம்பெற்றிருக்கும். நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை உள்பட அனைத்து IIT கல்வி நிறுவனங்களில் கிடைக்கும். குறிப்பிட்ட அரசு வங்கிகளின் கிளைகளிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ.1000 ஆகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 மட்டுமே. கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கனரா வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னையில் அண்ணா நகர் கிழக்கு, அபிபுல்லா ரோடு மற்றும் பாரிமுனை தம்புசெட்டி தெரு, கோவையில் ஒப்பனைக்காரர் தெரு, மதுரையில் மேலப்பெருமாள் மேஸ்திரி தெரு, (ரயில் நிலையம் எதிரில்), சேலத்தில் அழகாபுரம், திருநெல்வேலியில் புறநகர்ச்சாலை, திருச்சியில் நந்தி கோயில் தெரு, வேலூரில் நகர மண்டபச் சாலை ஆகிய இடங்களில் இருக்கும் கனரா வங்கியின் கிளைகளில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்ப படிவங்களைத் தபால் மூலம் பெற விரும்புவோர் உரிய கட்டணத்தை "Chairman, JEE'' என்ற பெயரில் ஏதேனும் அரசு வங்கியில் பெறப்பட்ட கேட்புக் காசோலையுடன் சுயமுகவரி எழுதிய பெரிய அஞ்சல் உறைகளை, "Chairman, JEE, IIT, Chennai 600 036'' என்ற முகவரிக்கு அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சல் மூலம் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளக் கடைசி நாள் டிசம்பர் 21-ந் தேதி ஆகும். விண்ணப்பங்களை வங்கிக்கிளைகளில் ஜனவரி மாதம் 4-ந் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் ஜனவரி 4-ந் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும் என்று JEE நுழைவுத்தேர்வுக் குழு அறிவித்து உள்ளது.

23 Dec 2007

அம்பலம் ஏறும் அந்தரங்கங்கள்

டிஜிட்டல் உலகில் எல்லாமே செம ஸ்பீடு. டிஜிட்டலைஸ்ட் ஆகிய நடிகையின் கவர்ச்சி படமாகட்டும் அல்லது ரகசிய கசமுசா வீடியோவாகட்டும் அல்லது டிஜிட்டலைஸ்ட் ஆகிய ஒரு மென்புத்தகமாகட்டும் நொடிப்பொழுதில் உலகெங்கும் விஷ காய்ச்சல் போல் இணையம் வழி பரவிவிடும். என்னத்தான் பாதுகாப்பு முறைகள் கடைபிடித்தாலும் கலிபோர்னிய காட்டு தீ போல் இவை பரவுகின்றன. உருவாக்குதல் தான் கடினம், காப்பி செய்ய சில நொடிப்பொழுதுகள் போதும். மில்லியன் டாலர்கள் செலவு செய்து ஆயிரக்கணக்கானோரின் உழைப்பில் வெளியாகும் வீடியோ கேம்கள், விலைமிக்க மின் பொருள்களின் கதையும் அதுதான். ஏதோ ஒரு விபரீத ஆசையில் யாருக்கும் தெரியாமல் சிட்டி ஹாலின் மதிப்புமிக்க மேயர் ஆசனத்தில் தன் மனைவியை துளி கூட துணியின்றி அவரை அமரவைத்து படம் எடுத்து தன் வீட்டு கணிணியில் வைத்திருந்தார் ஒரு பிரிட்டன் நகர மேயர். தன் வீட்டு பசங்க வீட்டில் ஒரு பார்ட்டி வைக்க வெளியூர் சென்றிருந்தார் மேயர். அவர் பிள்ளைகளின் நண்பர்கள் மேயர் வீட்டு கணிணியில் விளையாட தவறுதலாய் சிக்கியது அந்த படம். எவ்வளவு நேரமாகும்? ஒரே கிளிக்கில் உலகெங்கும் பறந்தது அந்த ஜோடியின் அந்தரங்கம். இப்படி படமாயும், வீடியோவாயும் மாட்டி நோந்து போனோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதில் புதிது இப்போது ஒலிவடிவம். நண்பரிடம், நன்கு தெரிந்தவரிடம், காதலரிடம் தானே பேசுகிறேன் என்ற நினைப்பில் அந்தரங்கமாய் ஏதேதோ கிளுகிளுப்பாய் பேச அப்பேச்சுக்கள் முழுவதும் எதிர்முனை நபரால் பதிவு செய்யப்பட்டு MP3 ஒலி வடிவில் எடுக்கப்பட்டு இணையத்தில் உலவ விடப்பட்டால் எப்படி இருக்கும்?. டிஜிட்டல் உலகில் இது போன்றவை எளிதாய் சாத்தியம். வெளிவரும் செல்போன்கள் அனைத்துமே இது போன்ற வாய்ஸ் ரெக்கார்டிங் கொண்டிருப்பது ஒரு பயமுறுத்தும் செய்தி. "நேரில் காதுள் பேசு. போனில் அதுவும் பேசாதே" என புதுசாய் சொற்றொடர் உருவாக்கவேண்டியுள்ளது. அப்படியே எசகு பிசகாய் எதாவது ஆர்வக்கோளாரில் பேசினாலும் பேசும்போது கவனமாய் போனில் பேசவும். முக்கியமாய் "அது" போன்ற பேச்சுகளிடையே உங்கள் விலாசம், பெயர், மொபைல்நம்பர் போன்ற தகவல்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
Thanks PKP

இதுதான் உலகமா? இவ்வளவுதான் உலகமா?

இந்த படங்கள் உங்களுக்கு என்ன படிப்பினையை தருகின்றன.
அந்த படிப்பினையை உலகுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.







17 Dec 2007

EID MUBARAK

16 Dec 2007

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கம் (MIWA )

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கம் ( MIWA ) துபாய். UNITED ARAB EMIRATES

25ம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பு கூட்டம்

நாள் : 19.12.2007 புதன்கிழமை (ஹஜ்பெருநாள் அன்று) மாலை 5.30 மணிக்கு ( இன்ஷாஅல்லா )

இடம் : EAT & DRINK RESTAURANT PARTY HALL, GARHOUD - DUBAI ( Near to Dubai International Airport )

தலைமை: T. E. ஷாஹூல் ஹமீது அவர்கள்.
முன்னிலை: M. அப்துல் காதர் அவர்கள்.
M. முகம்மது ஹிலால் அவர்கள்.

கிரா அத்: S. ஜஹபர் உசேன் அவர்கள்.
வரவேற்ப்புரை: P.M. ஜாஹிர் உசேன் அவர்கள்.

சிறப்புரை :

P.M. ஜாஹிர் உசேன் அவர்கள். ( என்னை கவர்ந்த மிவா )
S.L.M. சாஹிப் மரைக்காயர் அவர்கள். ( சங்கம் கடந்து வந்த பாதை )

சிறப்பு விருந்தினர்கள் :

Haji Dr. Rtn. L. கமால் பாட்சா அவர்கள்.
Prop. National Pharma - Tanjavur.

Haji A. ஜாபர் அலி அவர்கள்.
Assistant Vice President Dubai Islamic Bank

Haji M. இமாம்தின் அவர்கள்.
Prop. Royal Furniture Muthupettai

K.M. ஹாருன் ரசீது அவர்கள்.
Assistant Manager Commercial Bank of Dubai.

மேலும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நன்றியுரை: H. ஷேக் தாவூது .

நிகழ்ச்சி தொகுப்பு: Z. அஹமது குரைஷி .

சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நமதூர்வாசிகள் அனைவரும் குடும்பத்துடன் தவறாது கலந்து கொண்டு நமது சங்கத்தின் நற்ச்சேவைகள் தொடர துஆ செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பெண்களுக்கு தனி இடவசதி உண்டு

துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வாகன வசதி ஏற்ப்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தேரா துபாய் அப்பா கடை.

சார்ஜா பனாமா ரெஸ்டாரண்ட்.

பஸ் புறப்படும் நேரம் மாலை 4.30 மணிக்கு

மேலும் விபரங்களுக்கு
S. ஜஹபர் உசேன 050 4614636
T. ஜாஹிர் 050 4945445
P.M. ஜாஹிர் உசேன் 050 5956737
Z. அஹமது குரைஷி 050 3557100


இங்ஙனம்.
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கம் ( MIWA )
Post Box No. 5184 Dubai U.A.E.
E Mail : miwauae@yahoo.co.in
Web Site : http://www.miwa.20m.com/

3 Dec 2007

2007 ஆம் ஆண்டு புதிய வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்டது.

2007 ஆம் ஆண்டு புதிய வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்டது. உங்கள் மற்றும் உங்களின் உறவினர்களின் பெயர் அதில் இடம்பெற்றுள்ளதா என இப்பொழுதே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதில் உங்கள் மற்றும் உங்கள் உறவினர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தால் உடன் பதிவு செய்துக் கொள்ளுங்கள். டிசம்பர் மாதம் 8 தேதி 2007 க்குள் பதிவு செய்திருக்க வேண்டும். இது சம்பந்தமாக மேலும் விபரங்களை அறிந்துக் கொள்ள கீழ்கண்ட வலைதளத்திற்குச் சென்று உங்களின் வாக்காளர் பட்டியலை அறிந்துக்கொள்ளலாம். அப்படி ஏதேனும் உங்களின் தகவல் விடுபட்டிருந்தால் ஆன்லைனிலேயே உங்களின் தகவல்களைப் பதிவுசெய்துக் கொள்ளலாம்.

http://www.elections.tn.nic.in/

http://www.eroll.tn.nic.in/pdf/acwise_pdf.asp