23 Dec 2007

அம்பலம் ஏறும் அந்தரங்கங்கள்

டிஜிட்டல் உலகில் எல்லாமே செம ஸ்பீடு. டிஜிட்டலைஸ்ட் ஆகிய நடிகையின் கவர்ச்சி படமாகட்டும் அல்லது ரகசிய கசமுசா வீடியோவாகட்டும் அல்லது டிஜிட்டலைஸ்ட் ஆகிய ஒரு மென்புத்தகமாகட்டும் நொடிப்பொழுதில் உலகெங்கும் விஷ காய்ச்சல் போல் இணையம் வழி பரவிவிடும். என்னத்தான் பாதுகாப்பு முறைகள் கடைபிடித்தாலும் கலிபோர்னிய காட்டு தீ போல் இவை பரவுகின்றன. உருவாக்குதல் தான் கடினம், காப்பி செய்ய சில நொடிப்பொழுதுகள் போதும். மில்லியன் டாலர்கள் செலவு செய்து ஆயிரக்கணக்கானோரின் உழைப்பில் வெளியாகும் வீடியோ கேம்கள், விலைமிக்க மின் பொருள்களின் கதையும் அதுதான். ஏதோ ஒரு விபரீத ஆசையில் யாருக்கும் தெரியாமல் சிட்டி ஹாலின் மதிப்புமிக்க மேயர் ஆசனத்தில் தன் மனைவியை துளி கூட துணியின்றி அவரை அமரவைத்து படம் எடுத்து தன் வீட்டு கணிணியில் வைத்திருந்தார் ஒரு பிரிட்டன் நகர மேயர். தன் வீட்டு பசங்க வீட்டில் ஒரு பார்ட்டி வைக்க வெளியூர் சென்றிருந்தார் மேயர். அவர் பிள்ளைகளின் நண்பர்கள் மேயர் வீட்டு கணிணியில் விளையாட தவறுதலாய் சிக்கியது அந்த படம். எவ்வளவு நேரமாகும்? ஒரே கிளிக்கில் உலகெங்கும் பறந்தது அந்த ஜோடியின் அந்தரங்கம். இப்படி படமாயும், வீடியோவாயும் மாட்டி நோந்து போனோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதில் புதிது இப்போது ஒலிவடிவம். நண்பரிடம், நன்கு தெரிந்தவரிடம், காதலரிடம் தானே பேசுகிறேன் என்ற நினைப்பில் அந்தரங்கமாய் ஏதேதோ கிளுகிளுப்பாய் பேச அப்பேச்சுக்கள் முழுவதும் எதிர்முனை நபரால் பதிவு செய்யப்பட்டு MP3 ஒலி வடிவில் எடுக்கப்பட்டு இணையத்தில் உலவ விடப்பட்டால் எப்படி இருக்கும்?. டிஜிட்டல் உலகில் இது போன்றவை எளிதாய் சாத்தியம். வெளிவரும் செல்போன்கள் அனைத்துமே இது போன்ற வாய்ஸ் ரெக்கார்டிங் கொண்டிருப்பது ஒரு பயமுறுத்தும் செய்தி. "நேரில் காதுள் பேசு. போனில் அதுவும் பேசாதே" என புதுசாய் சொற்றொடர் உருவாக்கவேண்டியுள்ளது. அப்படியே எசகு பிசகாய் எதாவது ஆர்வக்கோளாரில் பேசினாலும் பேசும்போது கவனமாய் போனில் பேசவும். முக்கியமாய் "அது" போன்ற பேச்சுகளிடையே உங்கள் விலாசம், பெயர், மொபைல்நம்பர் போன்ற தகவல்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
Thanks PKP

No comments: