22 Oct 2009

அன்புடன் எச்சரிக்கை....

19-10-09 அன்று மாலை சுமார் 6.00 மணியளவில் முத்துப்பேட்டையை சேர்ந்த இரு இளைஞர்கள் அதிரை- முத்துப்பேட்டை ரோட்டில் பல்சர் என்னும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இரு இளைஞர்களும் இறந்தார்கள்.

முத்துப்பேட்டை குண்டான் குளத்தெரு புரோஸ்கான் (28), ஆஸாத்நகர் மரைக்கான் (22). இரு சக்கர வாகனத்தில் சென்றால் இளைஞர்கள் அதிவேகமாக செல்கின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

அன்பான நண்பர்களே.. நமது குடும்பத்தில் உள்ள சகோதரர்கள், பிள்ளைகள், நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தயவுசெய்து மெதுவாக செல்ல சொல்லி அன்புடன் எச்சரிக்கை செய்யுங்கள். ஏனென்றால் இன்றைய விபத்தில் ஒரு சகோதரரின் உடல் ஊறுப்புகள் தனித்தனியாக அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்தது.

http://saharatamil.blogspot.com/2009/10/blog-post_20.html

உலகின் இளம் தலைமையாசிரியர்!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவருக்கு "உலகின் இளம் தலைமையாசிரியர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறது பி.பி.சி.

பி.பி.சி. செய்தி நிறுவனம் "கற்றுக்கொள்ளும் வேட்கை' என்ற பெயரில் புதிய செய்தித் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளது. உலகெங்கும் மிக மோசமான சூழல்களுக்கு இடையிலேயும் கற்றுக்கொள்ளும் வேட்கையோடு செயல்படுபவர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் நோக்கோடு இத்தொடரை பி.பி.சி. வெளியிடுகிறது.

இத் தொடரின் முதல் செய்தியாக மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பள்ளிக்கூடத்தைப் பற்றி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. உலகெங்கும் இன்னமும் கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வி ஒரு பெருங்கனவாகத்தான் இருக்கிறது.

பள்ளிக்கூடங்கள், மதிய உணவு, சீருடைகள், கல்வி உதவித்தொகை என்று பல்வேறு சலுகைகளை அரசுகள் அளித்தாலும்கூட மோசமான வறுமை கோடிக்கணக்கான குழந்தைகளை இன்னமும் இளம் தொழிலாளர்களாகவே வைத்திருக்கிறது.

இப்படிப்பட்ட மோசமான ஒரு சூழலிலிருந்து வெளிவந்திருப்பவர்தான் பாபர் அலி (16). குடும்பத்தின் முதல் மாணவரான பாபர் அலி தன்னுடைய வீட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள ராஜ் கோவிந்தா பள்ளியில் படித்துவருகிறார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதால், பாபர் அலிக்குப் பெரிய அளவில் செலவுகள் ஏதுமில்லை.

ஆனால், பிறரைப்போல குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ளாததோடு, குடும்பத்தினருக்கு மேலும் ஒரு சுமையைத் தரும் வகையில், தான் படிக்க வந்திருப்பதே ஒரு பெரிய காரியம்தான் என்கிறார் பாபர் அலி. அவர் சொல்வது உண்மைதான்.

பாபர் அலி பகுதியைச் சேர்ந்த - அவர் வயதை ஒத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கிடைக்கும் வேலையைச் செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கும் துர்பாக்கியமான நிலையிலேயே இருக்கின்றனர்.

ஆகையால், தனக்கு தன் குடும்பம் அளித்த மிகப் பெரிய கொடையாக பள்ளிக்கூட வாய்ப்பைக் கருதிய பாபர் அலி கல்வியில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்கிறார்.

ஆனால், பாபர் அலிக்கு பி.பி.சி. புகழாரம் சூட்ட காரணம் ராஜ் கோவிந்தா பள்ளியின் சிறந்த மாணவராக அவர் திகழ்வதற்காக அல்ல. பாபர் அலி விளையாட்டாகத் தொடங்கிய இன்னொரு காரியத்துக்காக.

அதாவது, அவர் விளையாட்டாகத் தொடங்கிய பள்ளிக்கூடத்துக்காக. அப்போது பாபர் அலிக்கு வயது 9. நம் வீட்டுப் பிள்ளைகள் விடுமுறை நாள்களில் "டீச்சர் விளையாட்டு' விளையாடுவதுபோல தன் வீட்டில் ஒரு நாள் "டீச்சர் விளையா'ட்டைத் தொடங்கினார் பாபர் அலி.

டீச்சர் - பாபர் அலி. மாணவர்கள் யார் என்றால், அங்குள்ள பிள்ளைகள். அதாவது, முன்னெப்போதும் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத ஏழைப் பிள்ளைகள். விளையாட்டு எல்லோருக்கும் பிடித்துப்போனது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளையாடத் தொடங்கினார்கள்.

விளையாட்டு ஒரு கட்டத்தைத் தாண்டியபோதுதான் தெரிந்தது பாபர் அலிக்கு, தன் சக நண்பர்களின் ஆர்வம் விளையாட்டின் மீதானது மட்டுமல்ல, கல்வியின் மீதானதும் என்று. பாபர் அலி தன்னுடைய விளையாட்டுப் பள்ளிக்கூடத்தை உண்மையான பள்ளிக்கூடமாக மாற்றினார்.

ஒரு புதிய வரலாறு அங்கு உருவாகத் தொடங்கியது. சொன்னால், பிரமித்துப்போவீர்கள். இப்போது பாபர் அலியின் பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் தெரியுமா? 800 பேர்! பாபர் அலி நடத்தும் இந்தப் பள்ளிக்கூடம் முற்றிலும் வித்தியாசமானது.

பாபர் அலியின் வீட்டு முற்றம், வீட்டைச் சுற்றியுள்ள கொட்டகைகள், மரத்தடிகளே இந்தப் பள்ளிக்கூடம். களிமண்ணில், கட்டாந்தரையில் என்று கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பாடம் கற்கிறார்கள் மாணவர்கள்.

ஆசிரியர்கள் பாபர் அலியும் அவருடன் படிக்கும் சில நண்பர்களும்தான். ஒவ்வொரு நாளும் தான் பள்ளிக்கூடம் சென்று வந்த பின்னர், இந்தப் பள்ளிக்கூடத்துக்கு மணியடிக்கிறார் பாபர் அலி. மணியோசை கேட்டதும் ஓடி வருகின்றனர் பிள்ளைகள்.

பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையிலுள்ள மூர்ஷிதாபாத் பகுதியில் மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது பாபர் அலியின் இந்தப் பள்ளிக்கூடம். மாற்றங்களுக்கு ஓர் உதாரணம் சம்கி ஹஜ்ரா (14). இந்தச் சிறுமி தன் தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார்.

சம்கியின் தந்தை ஊனமுற்றவர். எந்த வேலைக்கும் செல்ல இயலாத நிலையில் இருக்கிறார். பாட்டியும் அப்படியே. சம்கி அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து ஈட்டும் சொற்பத் தொகையிலேயே இந்தக் குடும்பம் வாழ்கிறது. பள்ளிக்கூடத்தை ஒருபோதும் அறிந்திராத சம்கி ஒரு நாள் விளையாட்டாக பாபர் அலியின் பள்ளிக்கூடத்துக்குச் சென்றார்.

இன்றோ முறையான பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கே சவால் விடும் வகையில் இவர் படித்து வருகிறார். பாபர் அலி தனக்கு கல்வி கொடுத்த கடவுள் என்று குறிப்பிடுகிறார் சம்கி. சரி. பாபர் அலி அப்படி என்னதான் பாடம் நடத்துகிறார்?

""நான் என் ஆசிரியர்களிடம் கேட்பதை இவர்களுக்கு அப்படியே சொல்கிறேன்; அவ்வளவுதான்'' என்கிறார் பாபர் அலி. தான் விரும்பும் சமூக மாற்றத்தை தன்னிலிருந்து தொடங்கிய பாபர் அலி மகத்தான மனிதன் என்று கொண்டாடுகிறது பி.பி.சி. உலகின் இளம் தலைமையாசிரியர் இவரே என்றும் பிரகடனப்படுத்துகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மூர்ஷிதாபாத்தின் இந்த இளம் தலைமையாசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பொருத்தமானதுதானே!

19 Oct 2009

பணம் சுரன்டும் செல்போன் கம்பேனிகள்

பணம் சுரண்டும் 'ப்ரீபெய்டு சிம்' ...உஷார்

மொபைல் போன் நிறுவனங்கள் பல, எப்படி எல்லாம் வருவாய் ஈட்ட முடியுமோ, அத்தனை வழிகளையும் கடைபிடிக்கின்றன. "வேல்யூ ஆடேட் சர்வீஸ்' எனக் கூறி, அதற்கும் கட்டணத்தை பிடுங்கி விடுகின்றன. இதிலும், "சபலிஸ்ட்'டுகளாக இருந்து விட்டால், மொபைல் போனில் நொடிக்கணக்கில் பணம் போவதே தெரியாது.

நாடு முழுவதும் பல மொபைல் நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மொபைல் நிறுவனங்கள், அழைப்புக்கான கட்டணங்களை குறைக்கவும் கட்டணம் வசூலிக்கின்றன.

சீரற்ற கட்டண முறையால் மக்கள் எந்த நெட்வொர்க்கை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். உண்மையான கட்டணத்திற்கும், சலுகை கட்டணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

பிறர் அழைக்கும்போது, அவர்களுக்கு "ரிங்' ஒலிக்கு பதிலாக, ஒரு பாட்டு கேட்கும். அதே போன்று, பிறர் அழைக்கும்போது, "ரிங்' டோனுக்கு பதிலாக, பாட்டு பாட வைத்துக் கொள்ளலாம்.

இப்படி தேவையான திரைப்பட பாடல்களை "ரிங்டோனாக' பயன்படுத்திக் கொள்ள தனிக் கட்டணம். வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள கட்டணம் இருந்தாலும், சில மொபைல் போன்களில் பல யுக்திகளை பயன்படுத்தி பணத்தை கறந்து விடுகின்றனர்.

குறிப்பாக, இது, "ப்ரீ பெய்ட்' சிம்கார்டுகளை பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பற்ற நிலையே உள்ளது."ப்ரீ பேய்ட்' வாடிக்கையாளர்களின் போனுக்கு, "சர்வீஸ் மெசேஜ்' என அனுப்புகின்றனர். இந்த தகவலை படிக்க, முறையான பொத்தனை அழுத்தாமல், எப்போதும் பயன்படுத்தும் பட்டனை அழுத்திவிட்டால்போதும்.

அவ்வளவு தான்... உடனடியாக பணம் "ஸ்வாக' ஆகிவிடும். 30, 40, 50 ரூபாய் எவ்வளவாக இருந்தாலும், 'நீங்கள் சிறப்பு சேவையை பெற்றுள்ளீர்கள், அதற்கான மாதாந்திர கட்டணம் இது' என தகவல் வரும்.

ஜோதிடம், தினப்பலன், விட், "ஏ ஜோக்' சினிமா பாடல், வெப் பிரவுசிங், என எவ்வளவோ "எக்ஸ்ட்ரா' விஷயங்களை மொபைல் போன்கள் அளிக்கின்றன. இவற்றிற்கு தனி கட்டணம் வசூலித்து விடுகின்றனர்.

பெண் "சபலிஸ்ட்' ஆகவோ, விளையாட்டில் ஆர்வம் உள்ளவராகவோ, இருந்து விட்டால், அவ்வளவு தான் காசு போவதே தெரியாது. உங்களுக்கு பெண் நண்பர்கள் வேண்டுமா?...இந்த எண்ணை தொடர்பு கொண்டு எங்களிடம் "சப்ஸ்கிரைப்' செய்யுங்கள்.

உங்கள் நகரிலேயே, உங்களுடன்பேச சிநேகிதிகள் கிடைப்பர்' என்ற "நட்பு' விஷயத்தையும் ஏற்படுத்தி கொடுக்கின்றன மொபைல் போன் நெட்வொர்க்குகள்.

உண்மையிலேயே, அப்படி எந்த நட்பும் கிடைப்பதில்லை. பெண்களின் நட்பிற்காக வேண்டி, அனுப்பப்படும் மெசேஜ் ஒவ்வொன்றிற்கும் இரண்டு ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். சாதாரண எஸ்.எம்.எஸ்.,சிற்கு 25 பைசாவாக இருந்தால், இந்த எஸ்.எம்.எஸ்., சிற்கு பல மடங்கு அதிக கட்டணம்.

இதேபோன்று, மறைக்கப்பட்ட எண் கொடுக்கப்பட்டு, பெண்ணுடன் பேச நினைத்தால், குறைந்தபட்சம் நிமிடத்திற்கு மூன்று ரூபாய் முதல் கட்டணம் துவங்கி, ஆறு ரூபாய் வரை இருக்கும்.

ஐந்து நிமிடம் பேசி முடிப்பதற்குள்,"ப்ரீ பெய்டு' சிம்மில் போடப்பட்ட பணம் கரைந்து விடும். பெண்ணோடு பேச ஆசைப்பட்டால், நிச்சயம் அது நட்பாக இருக்காது. எதிர்முனையில் ஏதோ கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட குரலாக வந்து விழும். இந்த குரல் பதிவு முடிவதற்கு முன் பணம் காணாமல் போய்விடும்.

இது, இப்படி இருக்க, இன்னும் சில நிறுவனங்கள், யாகூ, ரீடிப் போன்ற நிறுவனங்களின் மெசஞ்சர் சர்வீஸ் உடன் இணைக்கப்பட்ட "சாட்' வசதியும் உள்ளன. இந்த சாட் வசதியிலும், அனுப்பப்படும் ஒவ்வொரு தகவலுக்கும் 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.

நவீன வசதியுடன், "வெப்' வசதியுள்ள மொபைல் போனாக இருந்தால், அதில், "சூடான போஸ்டர்' வேண்டுமா? "ஸ்க்ரீன் சேவர்' வேண்டுமா...எனக் கேட்டு நச்சரித்து எஸ்.எம்.எஸ்., வந்து சேரும்.

இப்படி தொல்லை தரும் எஸ்.எம்.எஸ்.,எதையாவது தவறாக அழுத்தி விட்டால், ரீசார்ஜ் செய்த பணத்தில் கட்டணம் பழுத்து விடும். ஆபாசமாக படம் வந்து விழும். அப்பட்டமாக, இப்படியெல்லாம் பல மொபைல் போன் நிறுவனங்கள், தேவையற்ற சேவையை ஏற்படுத்தி, வர்த்தகத்தை மேற்கொள்கின்றன."

வேல்யூ ஆடேட் சர்வீஸ்' எனக் கூறி, கட்டணத்தை வசூலித்தும் விடுகின்றன. எனவே, மொபைல் போன் பயன்படுத்தும்போது, தேவையான விஷயங்களை மட்டும் தேடுங்கள். குப்பைகளை கிளறினால், பழுத்து விடும் பர்ஸ்...!"இந்த சர்வீஸ் மெசேஜ் வசதி வேண்டாம், நிறுத்துங்கள்' என,கூறினாலும் நிறுத்தப்படுவதில்லை.

தொல்லை தொடர்ந்து கொண்டேஇருக்கும்.இதே போன்று மொபைல் எஸ்.எம்.எஸ்.,களில் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள், பொருட்களை விளம்பர படுத்த தொல்லை எஸ்.எம்.எஸ்.களை அனுப்புவதுண்டு. இவற்றையும் தடுக்க முடியாது.

இவையெல்லாம் தவிர, பண்டிகை காலங்களில் எஸ்.எம்.எஸ்., கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி விடுகின்றன. வாழ்த்து இல்லாமல், அவசரத்திற்காக அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.,கூட இந்த நாளில் அதிகம் தான்.

தகவல் : தினமலர்

8 Oct 2009

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது.

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

-Dr.M.Sathick