5 May 2010

மாணவர்களின் மனத்தில் கூடாத பழக்கங்கள்: மேன்மைக்கு 8 வழிகள்

மாணவர்களின் மனத்தில் கூடாத பழக்கங்கள் மறைவாக உள்ளன.
அவற்றி லிருந்து விடுவித்துக் கொள்ள சில டிப்ஸ்:

*
ஒரு மனிதனுக்குத் தேவை நல்ல ஒழுக்கம்தான். இதை முதலில் உங்கள் வாழ்வில் கடைப்பிடியுங்கள். மேன்மையடைவீர்கள்.

*
ஒரு மனிதன் எப்போது சிறந்த மனிதனாகிறான் என்றால் அவனை அவனே புரிந்து கொள்ளும்போது.

*
சோம்பேறித்தனமான எண்ணங்களை வேரோடு கிள்ளியெறி யுங்கள். இல்லையெனில் எந்தக் காரியத்தையும் முழு வீச்சில் செய்ய முடியாது. சோம்பேறிகள் காலத்தை மதிப்பதில்லை. `காலம்' சோம்பேறிகளை மதிப் பதில்லை.

*
அதிர்ஷ்டத்தை நம்பாதே! அது உங்களை சோம்பேறியாக்கிவிடும்.

*
எந்த வேலையும் இழிவல்ல. வேலையை மகிழ்ச்சியுடன் செய் யுங்கள். முன்னேற்றம் நிச்சயம்.

*
சந்தேகமும், பயமும் அறவே நீக்கப்படவேண்டும். அவை எதையும் சாதிப்ப தில்லை.

*
உங்கள் வாழ்க்கையை மாற்ற எப்போதும் இனிமை யாகவே பதில் சொல்லுங்கள். கோபத்துக்கு அடிமையாகாதீர்கள். வேகமாக முடிவு எடுக்காதீர்கள். அது விவேகமாக இருக்காது. சிந்தித்துச் செயல்படுங்கள்.


*
நினைவில் கொள்ளுங்கள் சோம் பேறிகளின் ஆசைகள் என்றும் நிறை வேறுவதில்லை. `இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

-
பி.நிஷாந்த், இ.சி.இ., முதலாமாண்டு பனிமலர் பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை