பணம் சுரண்டும் 'ப்ரீபெய்டு சிம்' ...உஷார்
மொபைல் போன் நிறுவனங்கள் பல, எப்படி எல்லாம் வருவாய் ஈட்ட முடியுமோ, அத்தனை வழிகளையும் கடைபிடிக்கின்றன. "வேல்யூ ஆடேட் சர்வீஸ்' எனக் கூறி, அதற்கும் கட்டணத்தை பிடுங்கி விடுகின்றன. இதிலும், "சபலிஸ்ட்'டுகளாக இருந்து விட்டால், மொபைல் போனில் நொடிக்கணக்கில் பணம் போவதே தெரியாது.
நாடு முழுவதும் பல மொபைல் நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மொபைல் நிறுவனங்கள், அழைப்புக்கான கட்டணங்களை குறைக்கவும் கட்டணம் வசூலிக்கின்றன.
சீரற்ற கட்டண முறையால் மக்கள் எந்த நெட்வொர்க்கை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். உண்மையான கட்டணத்திற்கும், சலுகை கட்டணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
பிறர் அழைக்கும்போது, அவர்களுக்கு "ரிங்' ஒலிக்கு பதிலாக, ஒரு பாட்டு கேட்கும். அதே போன்று, பிறர் அழைக்கும்போது, "ரிங்' டோனுக்கு பதிலாக, பாட்டு பாட வைத்துக் கொள்ளலாம்.
இப்படி தேவையான திரைப்பட பாடல்களை "ரிங்டோனாக' பயன்படுத்திக் கொள்ள தனிக் கட்டணம். வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள கட்டணம் இருந்தாலும், சில மொபைல் போன்களில் பல யுக்திகளை பயன்படுத்தி பணத்தை கறந்து விடுகின்றனர்.
குறிப்பாக, இது, "ப்ரீ பெய்ட்' சிம்கார்டுகளை பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பற்ற நிலையே உள்ளது."ப்ரீ பேய்ட்' வாடிக்கையாளர்களின் போனுக்கு, "சர்வீஸ் மெசேஜ்' என அனுப்புகின்றனர். இந்த தகவலை படிக்க, முறையான பொத்தனை அழுத்தாமல், எப்போதும் பயன்படுத்தும் பட்டனை அழுத்திவிட்டால்போதும்.
அவ்வளவு தான்... உடனடியாக பணம் "ஸ்வாக' ஆகிவிடும். 30, 40, 50 ரூபாய் எவ்வளவாக இருந்தாலும், 'நீங்கள் சிறப்பு சேவையை பெற்றுள்ளீர்கள், அதற்கான மாதாந்திர கட்டணம் இது' என தகவல் வரும்.
ஜோதிடம், தினப்பலன், விட், "ஏ ஜோக்' சினிமா பாடல், வெப் பிரவுசிங், என எவ்வளவோ "எக்ஸ்ட்ரா' விஷயங்களை மொபைல் போன்கள் அளிக்கின்றன. இவற்றிற்கு தனி கட்டணம் வசூலித்து விடுகின்றனர்.
பெண் "சபலிஸ்ட்' ஆகவோ, விளையாட்டில் ஆர்வம் உள்ளவராகவோ, இருந்து விட்டால், அவ்வளவு தான் காசு போவதே தெரியாது. உங்களுக்கு பெண் நண்பர்கள் வேண்டுமா?...இந்த எண்ணை தொடர்பு கொண்டு எங்களிடம் "சப்ஸ்கிரைப்' செய்யுங்கள்.
உங்கள் நகரிலேயே, உங்களுடன்பேச சிநேகிதிகள் கிடைப்பர்' என்ற "நட்பு' விஷயத்தையும் ஏற்படுத்தி கொடுக்கின்றன மொபைல் போன் நெட்வொர்க்குகள்.
உண்மையிலேயே, அப்படி எந்த நட்பும் கிடைப்பதில்லை. பெண்களின் நட்பிற்காக வேண்டி, அனுப்பப்படும் மெசேஜ் ஒவ்வொன்றிற்கும் இரண்டு ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். சாதாரண எஸ்.எம்.எஸ்.,சிற்கு 25 பைசாவாக இருந்தால், இந்த எஸ்.எம்.எஸ்., சிற்கு பல மடங்கு அதிக கட்டணம்.
இதேபோன்று, மறைக்கப்பட்ட எண் கொடுக்கப்பட்டு, பெண்ணுடன் பேச நினைத்தால், குறைந்தபட்சம் நிமிடத்திற்கு மூன்று ரூபாய் முதல் கட்டணம் துவங்கி, ஆறு ரூபாய் வரை இருக்கும்.
ஐந்து நிமிடம் பேசி முடிப்பதற்குள்,"ப்ரீ பெய்டு' சிம்மில் போடப்பட்ட பணம் கரைந்து விடும். பெண்ணோடு பேச ஆசைப்பட்டால், நிச்சயம் அது நட்பாக இருக்காது. எதிர்முனையில் ஏதோ கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட குரலாக வந்து விழும். இந்த குரல் பதிவு முடிவதற்கு முன் பணம் காணாமல் போய்விடும்.
இது, இப்படி இருக்க, இன்னும் சில நிறுவனங்கள், யாகூ, ரீடிப் போன்ற நிறுவனங்களின் மெசஞ்சர் சர்வீஸ் உடன் இணைக்கப்பட்ட "சாட்' வசதியும் உள்ளன. இந்த சாட் வசதியிலும், அனுப்பப்படும் ஒவ்வொரு தகவலுக்கும் 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.
நவீன வசதியுடன், "வெப்' வசதியுள்ள மொபைல் போனாக இருந்தால், அதில், "சூடான போஸ்டர்' வேண்டுமா? "ஸ்க்ரீன் சேவர்' வேண்டுமா...எனக் கேட்டு நச்சரித்து எஸ்.எம்.எஸ்., வந்து சேரும்.
இப்படி தொல்லை தரும் எஸ்.எம்.எஸ்.,எதையாவது தவறாக அழுத்தி விட்டால், ரீசார்ஜ் செய்த பணத்தில் கட்டணம் பழுத்து விடும். ஆபாசமாக படம் வந்து விழும். அப்பட்டமாக, இப்படியெல்லாம் பல மொபைல் போன் நிறுவனங்கள், தேவையற்ற சேவையை ஏற்படுத்தி, வர்த்தகத்தை மேற்கொள்கின்றன."
வேல்யூ ஆடேட் சர்வீஸ்' எனக் கூறி, கட்டணத்தை வசூலித்தும் விடுகின்றன. எனவே, மொபைல் போன் பயன்படுத்தும்போது, தேவையான விஷயங்களை மட்டும் தேடுங்கள். குப்பைகளை கிளறினால், பழுத்து விடும் பர்ஸ்...!"இந்த சர்வீஸ் மெசேஜ் வசதி வேண்டாம், நிறுத்துங்கள்' என,கூறினாலும் நிறுத்தப்படுவதில்லை.
தொல்லை தொடர்ந்து கொண்டேஇருக்கும்.இதே போன்று மொபைல் எஸ்.எம்.எஸ்.,களில் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள், பொருட்களை விளம்பர படுத்த தொல்லை எஸ்.எம்.எஸ்.களை அனுப்புவதுண்டு. இவற்றையும் தடுக்க முடியாது.
இவையெல்லாம் தவிர, பண்டிகை காலங்களில் எஸ்.எம்.எஸ்., கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி விடுகின்றன. வாழ்த்து இல்லாமல், அவசரத்திற்காக அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.,கூட இந்த நாளில் அதிகம் தான்.
தகவல் : தினமலர்
No comments:
Post a Comment