துபாய்:
23.10.2007
வேலைவாய்ப்பு ஏஜென்டுகள் மூலம் வளைகுடா நாடுகளில் வேலைக்கு ஆள் எடுக்க தடை விதிக்கப்படவுள்ளது. இதுதொடர்பான புதிய கட்டுப்பாடுகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுக்கவுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் அலி பின் அப்துல்லா அல் காபிகூறியுள்ளார்.இதுகுறித்து காபி கூறுகையில், பல்வேறு நாடுகளிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் ஏஜென்டுகளால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள், மோசடி செய்யப்படுகிறார்கள், துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.இதைத்த தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானதாக, ஏஜென்டுகள் மூலம் வேலைக்கு ஆள் எடுப்பதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஏஜென்டுகளின் பொய்யான வாக்குறுதிகள், உறுதிகளை நம்பி ஏமாறும் தொழிலாளர்கள் நிலை மொத்தமாக மாறும்.அனைத்து வளைகுடா நாடுகளின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் இதுகுறித்து விரிவாகப் பேசி விரைவில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றார் காபி.
23 Oct 2007
ஏஜெண்டுகள் மூலம் ஆளெடுக்க யு.ஏ.இ. தடை
Posted by Abdul Malik at 11:15 am
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment