28 Oct 2007

தொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவருக்கு உதவித் தொகை

தொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவருக்கு உதவித் தொகை சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னை, அக்.24: தொழில் மற்றும் தொழில்நுட்ப படிப்பில் பட்டப்படிப்பு,பட்ட மேற்படிப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்விஉதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து,சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.ஜெயா விடுத்துள்ள அறிக்கை:தொழில் மற்றும் தொழில் நுட்ப படிப்பில் பட்டப்படிப்பு படிக்கும்மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு உதவி தொகை வழங்கி வருகிறது.இந்த திட்டத்தின் கீழ், 366 முஸ்லிம்கள், 399 கிறிஸ்தவர்கள், 1 சீக்கியர், 1 புத்தமதத்தினர் ஆகியோருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.பெற்றோர் அல்லது பாதுகாவலர் எல்லா வழிகளிலும் ஆண்டுக்கு ரூ.2.50லட்சத்துக்கு மிகாமல் வருவாய் ஈட்ட வேண்டும். தொழில் படிப்புக்காகநுழைவுத் தேர்வில் தேர்ச்சி அல்லது பிளஸ் 2 படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வி உதவித் தொகை வழங்குவதில் 30 சதவீதம்மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.சென்னை ஐ.ஐ.டி, திருச்சி என்.ஐ.டி, காஞ்சிபுரம் ஐ.ஐ.ஐ.டி, ஆகிய கல்விநிறுவனங்களில் தொழில் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு செலுத்தியகல்விக் கட்டணத் தொகை முழுமையாக திரும்ப வழங்கப்படும். மேலும்,விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு ஒன்றுக்குபராமரிப்பு படியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேற்கண்ட 3 கல்வி நிறுவனங்களில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு கல்விஉதவித் தொகை விண்ணப்பங்கள் முதலில் வழங்கப்படும். பின்னர், மற்ற தொழில்கல்வி நிறுவனங்களில் இருந்து வரப்பெறும் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள்பரிசீலிக்கப்படும். மற்ற தொழில் கல்வி நிறுவனங்களில் படிக்கும்சிறுபான்மையின மாணவ, மாணவிகள் சிறுபான்மையினர் விடுதியில் தங்கிபடித்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மற்ற மாணவ,மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். சிறுபான்மை மாணவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வருவாய் சான்றைநீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் வழங்க வேண்டும். பெற்றோர் வேலையில்இருந்தால் அந்த நிறுவனத்தில் இருந்து வருவாய் சான்று வாங்கித்தரவேண்டும். உதவித் தொகை பெற தகுதி உள்ள மாணவர்கள் குறிப்பிட்ட சான்றுகளுடன், தங்கள் கல்வி நிறுவனம் மூலம் சிறுபான்மை நல ஆணையம் மற்றும்மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், 807, அண்ணா சாலை, 5வது தளம், சென்னை 2 என்ற முகவரிக்கு நாளைக்குள்(25ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை www.minorityaffairs .gov.in/newsite என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு ஆட்சியர் ஜெயாதெரிவித்துள்ளார்.

No comments: