16 Oct 2007

மிகச் சிறந்த வலி நிவாரணியாகும் மிளகு!

லண்டன்: காரத்திற்கு மாற்றாக வும், சுவை சேர்க்கவும் நாம் அன்றாடம் மிளகை ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்தி வருகிறோம். சளி, இருமலைக் குணப்படுத்தவும் இது கைவைத்தியமாகப் பயன் படுத்தப்படுகிறது. ஆனால், இது மிகச்சிறந்த உடல்வலி நிவாரணி என்று அண்மை யில் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி யில் நடத்தப்பட்ட ஓரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
மிளகில் உள்ள கேப்சசின் என்ற வேதிப்பொருளிலிருந்து க்யூ எக்ஸ்-314 என்ற மருந்து தயார் செய்யப்பட்டுள்ளது. பிள்ளைப்பேறு காலத்திலும், மருத்துவத் தொழிலிலும் வலியைப் போக்குவதற்கு இது மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. இதுபற்றி ஹார்வர்டு மருத்துவப் பள்ளி ஆய்வாளர் ஊல்ப் கூறியதாவது: வலியுள்ளவர்களின் உடலில் உள்ள எந்த ஒரு நரம்புக்குக் கெடுதல் ஏற்பட்டாலும் அதை மிளகைக் கொண்டு தயாரிக்கப் பட்ட மருந்து முழுமையாகத் தீர்க்கிறது. பொதுவாக மக்கள் பயன்படுத்தும் வலி நிவாரண மாத்திரைகள் பல பக்க விளைவு களை ஏற்படுத்தும். ஆனால் இந்த மிளகு மருந்து வெகு விரைவிலேயே மக்களின் வலியைப் போக்குவது மட்டு மல்லாமல், நோயாளிக்கு முன்பு இருந்த நோய்களும் குணமடைகின்றது.

No comments: