உலகின் மிகப்பெரிய செல்வந்தர் யார் என்று கேட்டால் இப்போது கூட புரூனே சுல்தான் என்றுதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூறுவார்கள். அவர் எவ்வாறு தன் பணத்தை செலவழிப்பார் என்று இது வரை யாருக்கும் தெரியாது. ஆனால் சமீபத்தில் அவர் மீது நடந்து வரும் ஒரு நீதிமன்ற வழக்கின் தொடர்ச்சியாக அந்த நீதிமன்றம் அவரது செலவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆடம்பரங்கள் தற்போதைய உலக பணக்காரர்களும் யோசிக்க முடியாதது என்றால் மிகையாகாது.உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள திரைப்படத் துறையைச் சார்ந்த நடிகைகளை வரவழைத்து அவர்களைப் "பாராட்டி" மனம் குளிர நனைத்து அனுப்புவது சுல்தானின் பொழுதுபோக்கு திருவிளையாடுகளில் ஒன்று. இந்த பட்டியலில் பிரபல பாப் பாடகிகள் மற்றும் முன்னணி மாடல் அழகிகளும் அடங்குவார்கள் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
பணக்காரரின் செலவு என்றால் நமக்கு நினைவுக்கு வருவது ஒரு 5- 6 மாளிகைகள், 2- 3 தோட்டங்கள், ஒரு அதி ஆடம்பர கார் ஓரிரு கப்பல் அல்லது விமானம் இவ்வளவே...ஆனால் புருனே சுல்தான் ஹாஜி ஹஸன் அல் போல்கியா இதனையெல்லாம் விஞ்சிவிட்டார். செலவு செய்வதில் பணக்காரர்களையே பொறாமை பட வைத்துவிட்டார் என்றால் மிகையாகாது.61 வயதாகும் புருனே சுல்தான் தனது பேட்மின்டன் பயிற்சியாளருக்கு 1.26 மில்லியன் பவுண்டுகளை சம்பளமாக கொடுத்துள்ளார். தனது அக்குபங்க்சர் மற்றும் உடல் மசாஜிற்கு 1.25 மில்லியன் பவுண்டுகள்.அரிய பறவைகளை விலைக்கு வாங்குவதை பொழுதுபோக்காக கொண்ட சுல்தான் அதனை பாதுகாத்து பராமரித்து வரும் காவலர்களுக்கு மட்டும் 50,000 பவுண்டுகள் செலவு செய்துள்ளார்.அவருடைய பொது உறவுகளை கவனித்து வரும் குழுவிற்கு சுமார் 30 மில்லியன் பவுண்டுகள், வீட்டு நிர்வாகத்தை கவனித்து வரும் பணியாளர்கள் இருவருக்கு 7 மில்லியன் பவுண்டுகள்.இந்த விவரங்கள் வெளிவந்த காரணம் அவருக்கும் அவரது ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த அவரது சகோதரர் இளவரசர் ஜெஃப்ரிக்கும் இடையே நடந்து வரும் உலகப் பிரசித்திபெற்ற குடும்ப வழக்கு என்றால் மிகையாகாது. வழக்கை விசாரித்து வரும் லண்டன் நீதிமன்றம் வெளியிட்டுள்ள 50 பக்க அறிக்கையில் 19.5 பில்லியன் பவுண்டுகள் செலவழித்ததற்கான ரசீதுகள் உள்ளனவாம்.நாட்டின் கஜானாவிலிருந்து கடைசி 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் 4 பில்லியன் பவுண்டுகள் சுல்தானின் ஆடம்பர செலவுகளுக்காக அவரது சொந்த கணக்கில் சென்றுள்ள அதிர்ச்சி தகவலையும் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.இவரிடம் உள்ள சொகுசு கார்களின் எண்ணிக்கை மட்டும் 5000. 115 மில்லியன் பவுண்டுகள் செலவில் ஒரு தனி போயிங் விமானமும் உள்ளதாம்.1788 ஆடம்பர அறைகள் கொண்ட மிகப்பெரிய மாளிகை தவிர, இவரது குடும்பத்தினர்கள் லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் பாரீஸ் நகரங்களில் பல மாளிகளைகளை வைத்திருக்கின்றனராம்.புருனேயை 40 ஆண்டுகள் ஆட்சி செய்த இவருக்கும், இவரது சகோதரருக்குமான குடும்ப சொத்து வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர்களுக்கான தொகை மட்டும் 200 மில்லியன் பவுண்டுகளாம்.1984ஆம் ஆண்டு புருனே விடுதலை அடைவதற்கு முன் பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்தது. இன்னமும் லண்டனில் உள்ள பிரவி கவுன்சில்தான் அதற்கு உச்ச நீதிமன்றம்
.புருனே சுல்தானின் சொத்து மற்றும் செலவு விவரம்:
1. 1788 அறையுடன் மாளிகை, 6- நட்சத்திர விடுதி, ஒரு கேளிக்கை பூங்கா, 5000 கார்கள் மற்றும் விமானங்களை நிறுத்த மிகப்பெரிய ஆடம்பரக் கொட்டகை.
2. உடம்பைத் தேய்த்து விடும் மசாஜ் அழகிகள் மற்றும் அக்குபங்க்ச்சர் மருத்துவர்களுகாகாக 1.25 மில்லியன் பவுண்டுகள்.
3. வீட்டு பரமரிப்பு பணியாளர்களுக்கு 13.9 மில்லியன் பவுண்டுகள்.
4. 1.26 மில்லியன் பவுண்டுகள் பேட்மின்டன் பயிற்சிக்கு.
5. பி.ஆர் அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் 5.86 மில்லியன் பவுண்டுகள்.
6. தனது அரிய பறவைகளை பராமரித்து பாதுகாக்கும் காவலருக்கு 48,859 பவுண்டுகள்.
கார்கள் வகையும் எண்ணிக்கையும்...
மெர்சிடஸ்- 531-ஃபெர்ராரி- 367 பென்ட்லீ- 362 பி.எம்.டபிள்யூ- 185 ஜாகுவார்- 177 போர்ஷெ- 160 ரோல்ஸ் ராய்ஸ்- 130 லம்போர்கினி- 20.
மற்றவை: 747 - 400 ரக ஜம்போ ஜெட்டுகள் உட்பட போயிங் விமானங்கள் 2; ஒரு ஏர்பஸ், 6 சிறு விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள்.
"வெப் தூனியா"
1 Nov 2007
சுகபோகத்தில் திளைக்கும் புருனே சுல்தான்...
Posted by Abdul Malik at 8:47 pm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment