25 Nov 2007

சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது

சென்னை, நவ.23- கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடி கிறது என்று ஆராய்ச்சியாளர் கள் கண்டு பிடித்துள்ளனர்.

முதல் ரக சர்க்கரைநோய் இளம் வயதிலும் வரலாம் முதிய வயதிலும் வரலாம். தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் கட்டாயமுள்ளது. இரண்டாம் ரக நோயாளி கள் மாத்திரை சாப்பிட்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும். இது இளம் வயதில் வராது. உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளால் இதைக் கட்டுப் படுத்த முடியும்.
சர்க்கரை நோய் கட்டுப் பாட்டுக்குள் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாவிட்டால் அதைப் போன்ற ஆபத்தான நோய் வேறு எதுவுமில்லை. இப்படிப்பட்ட சர்க்கரை நோயாளிகள் பாகற்காய், வேப் பிலைச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிக்கடி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறைந்துவிடுகிறது என்று சாப்பிட்ட பலர் கூறு கிறார்கள். இந்த நிலையில் கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகிறது என்று ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள் ளனர். பெங்களூரைச் சேர்ந்த பொது மக்கள் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வுக் குழு மருத்துவர்கள் கோவக்காயை பொடியாக்கி சாப்பிடும் முன் சர்க்கரை அளவு 200-க்கும் குறைவாக உள்ள 30 புதிய சர்க்கரை நோயாளிகளுக்கு தினமும் ஒரு கிராம் கொடுத்து வந்தனர். அந்த ஒரு கிராம் பொடி, கோவக்காய் பச்சையாக 15 கிராம் சாப்பிடுவதற்கு சமம். இவ்வாறு 3 மாதம் நோயாளிகள் சாப்பிட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவக் காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.

No comments: