13 Jan 2008

சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவி தொகை

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ, முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த 2,876 மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது.
சென்னை, ஜன.13-
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ, முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த 2,876 மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை
சிறுபான்மையினரின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், சிறுபான்மை வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் (2007-08) இருந்து செயல்படுத்தப்படும்.
இதன்படி, பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கியர், பவுத்தர் ஆகிய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 2,876 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதில் முஸ்லீம்களில் 1,372 பேருக்கும், கிறிஸ்தவர்களில் 1,496 பேருக்கும், சீக்கியர்களில் 4 பேருக்கும், புத்த மதத்தில் 4 பேருக்கும் இந்த உதவித்தொகை கிடைக்கும். 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்.டி.) வரை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

11-ம் வகுப்பு முதல் பிஎச்.டி. வரை
11 மற்றும் 12-ம் வகுப்பு படிப்போருக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வரையும், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு படித்தால் ரூ.3 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படும். இது தவிர பராமரிப்பு உதவித்தொகையாக 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.140-ம், பட்டப் படிப்பு படிப்போருக்கு ரூ.185-ம் எம்.பில்., மற்றும் பி.எச்டி. படித்தால் ரூ.330-ம் தனியே பெறலாம். விடுதியில் தங்கி படித்தால் இந்த உதவித்தொகை சற்று கூடுதலாக கிடைக்கும்.
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் 2 பேர் வரை உதவித்தொகை பெறலாம். இதற்கான விண்ணப்ப படிவ மாதிரி மறறும் கூடுதல் விவரங்கள்
http://www.minority affairs.gov. in/
என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
31-ந் தேதி கடைசி நாள்
அந்த விண்ணப்பத்தை கம்ப்ïட்டரில் டவுண்லோடு செய்து விண்ணப்பமாக பயன்படுத்தலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கல்வி நிறுவன முதல்வரிடம் தேவையான ஆவணங்களுடன் வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை கல்வி நிறுவன பொறுப்பாளர்கள் சரிபார்த்து சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபானëமையினர் நல அதிகாரிக்கு பிப்ரவரி மாதம் 10-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
குறைந்த வருமானம் உடையவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 2007-08-ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.