9 Jan 2008

கணித்தமிழுக்கு ஒரு கலக்கல் மென்பொருள்

தமிழ்ச்செயலிகள் என்ற அளவில் பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றின் செயல்பாடுகள் தன்னளவில் நிறைவுள்ளதாகவும் இருக்கின்றன. ஆனால் எந்தச் செயலியும் இதுவரை செய்யாத சாதனையைகளைச் செய்து கொண்டு ஒரு புதிய மென்பொருள் வந்திருக்கிறது.
விண்டோஸ் இயங்குதளத்தில் எந்த மென்பொருளை பயன்படுத்தினாலும் யூனிகோடில் தமிழ் போன்ற மொழிகளுக்கான வெளிப்பாட்டுக்கு பிராந்திய மொழிகளை (Regional Language Support) எனேபிள் செய்ய வேண்டும். விண்டோஸ் சிடி மூலம் சில செட்டிங்குகள் செய்ய வேண்டி இருக்கிறது... இது தவிர ஆபீஸ் செயலியிலும் தமிழ் தெரிய சில பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அதற்கும் சில மாற்றங்களை நாமாக செய்ய வேண்டி இருந்தது
இதற்கான தேவை இன்றி தானாகவே இந்திய மொழிகளை எனேபிள் செய்து தமிழை எழுதவும் வாசிக்கவும் வகை செய்கிறது இந்த மென்பொருள்... எழுதுகருவி!
நியூ ஹொரைசான் மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ள NHM Writer என்ற எழுதுகருவி தான் இந்த புதிய மென்பொருள்.
இதை நிறுவியதும் தமிழ்ரெடி! (தமிழ்ரெடி பிராஜக்டில் நண்பர்கள் இதையும் இணைத்துக் கொள்ளலாம்.)
பிற மென்பொருள்களைப் போல அல்லாமல் எகலப்பை போன்று எழுதுகருவியாகவே அனைத்துச் செயலிகளிலும் தமிழை எழுத வகை செய்கிறது....
யூனிகோடு மட்டுமல்லாமல் தமிழில் மேலும் பல எழுத்துருக்களையும் இந்த கருவி மூலம் எழுத முடியும். யூனிகோடு தவிர மேலும் முக்கியமான எட்டு எழுத்துருக்களில் எழுத இதில் வகை செய்யப் பட்டிருக்கிறது... கூடுதல் தேவைக்காக வேறு எந்த எழுத்துரு பயன்படுத்தவும் நாமாகவே XML வடிவத்தில் கோப்பை உருவாக்கி இணைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்99, அஞ்சல்(பொனடிக்), தமிழ் தட்டச்சு, பாமினி ஆகிய தட்டச்சு முறைகளில் யூனிகோடு தவிர மேலும் எட்டு எழுத்துருக்களை (Bamini, Diacritic, Shreelipi, Softview, Tab, Tam, TSCII, Vanavil and Unicode) தட்டச்சு செய்ய முடியும். இந்த வகையில் மொத்தம் 36 விதமாக (4 type layouts x 9 font encoding) இதில் தட்டச்சு செய்ய முடிகிறது.
Key Preview என்னும் வசதி மூலம் உயிர்மெய் எழுத்துக்களை எழுதுவதற்கு அடுத்து எந்த விசையை அழுத்த வேண்டும் என்பது சொல்லித் தருகிறது. பலருக்கும் இந்த வசதி மிகவும் அவசியமானது. விசைப்பலகை ஆன்ஸ்கிரீன் திரைவடிவமும் எழுத்துக்களை உணர்ந்து கொள்ள வசதியாக அமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த மென்பொருளை நிறுவியதும் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்யும் படி அமைக்கப் பட்டிருக்கிறது... alt+1 தமிழ்99, alt+2 பொனடிக், alt+3 தட்டச்சு, alt+4 பாமினி.
பிற என்கோடிங்களை எளிதாக shortcut key அமைத்துக் கொள்ளலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, 2003 போன்ற பதிப்புகளில் செயல்படக் கூடியது.
சிறப்பாக வடிவமைக்கப் பட்ட ஆன்லைன் உதவிக்குறிப்பு இங்கே...
விரைவில் இதை தமிழிலும் தருவார்கள் என நம்புகிறேன்.
இத்தனை வசதிகளையும் வெறும் 850 kb அளவுக்குள்ளான சிறிய மென்பொருள் தருவது வியப்பான விஷயம்தான்.
இந்த மென்பொருள் இங்கே இலவசமாக பதிவிறக்க கிடைக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் வேறு சில மென்பொருட்களுடன் இது சிடியாக கிடைக்கும் என்று தெரிகிறது.
நண்பர்கள் பத்ரி, நாகராஜன் என் வாழ்த்துக்களும் நன்றியும்.
http://www.nhm.in/software/
http://valai.blogspirit.com/archive/2007/12/31/writer.html

No comments: