29 Jan 2008

20 ஆண்டுகளில் எவ்வளவு மாற்றங்கள்

20 ஆண்டுகளில் எவ்வளவு மாற்றங்கள்

* புரோகிராம் என்பது ஒரு டெலிவிஷன் ஷோ. இன்று கம்ப்யூட்டரில் இயங்கும் ஒரு கட்டளைத் தொகுப்பு

* அப்ளிகேஷன் என்பது வேலை தேடுவதற்கான விண்ணப்பம். இன்று கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயங்கும் புரோகிராம்.

* விண்டோஸ் என்பது நாம் சுத்தம் செய்ய அலுத்துக் கொள்ளும் வீட்டின் ஒரு பகுதி. இன்று உலகை இணைக்கும் ஒரு பாலம்.

* கர்சர் என்பது புனிதமல்லாத தெய்வ நிந்தனை கொண்ட ஒரு சமாச்சாரம். இன்று கம்ப்யூட்டரில் நம் கட்டளைக்குக் கண் சிமிட்டும் ஒரு கோல் போஸ்ட்.

* கீ போர்ட் என்பது அன்று பியானோ. இன்று நம் விரல்களுடன் பாட்டுப் பாடும் ஒரு சாதனம்.

* மெமரி என்பது வயதாகும் போது நம்மிடம் தேயும் ஒரு ஆற்றல். இன்று கம்ப்யூட்டரின் இயக்கங்களுக்கு ஒரு தளம்.

* சி.டி. அன்று ஒரு பேங்க் அக்கவுண்ட். இன்று பயன்படுத்தப்பட்ட பிறகு வீணாகிப் போனால் ஆட்டோக்களிலும் சைக்கிள்களிலும் அழகுக்கு மாட்டப்படும் ஒரு தட்டு.

* பொது இடத்தில் அன்ஸிப் செய்தால் அன்று உதைப்பார்கள். இன்று அன்ஸிப் செய்வதனை எல்லாரும் பார்க்கலாம்.

* அன்று குப்பைகளைத் தான் கம்ப்ரஸ் செய்வார்கள். இன்று எளிதாகத் தகவல்களைத் தூக்கிச் செல்ல கம்ப்ரஸ் செய்கிறோம்.

* ஹார்ட் டிரைவ் என்றால் முன்பு வெகு தூரம் களைப்பு தரும் பிரயாணம. இன்று அனைவரும் பேனா பென்சில் இல்லாமலே எழுதும் ஒரு கம்ப்யூட்டர் பலகை.

* லாக் ஆன் என்றால் அன்று எரியும் நெருப்பிற்கு இடும் விறகு. இன்று தங்கள் பணி தொடங்கிட அனைவரும் கம்ப்யூட்டரில் செய்திடும் முதல் செயலை இப்படித்தான் சொல்கிறோம்.

* எலி வாழும் இடம் தான் அன்று மவுஸ் பேட். இன்று நம் கரங்களில் தவழும் கம்ப்யூட்டர் குழந்தைக்கான படுக்கை.

* கத்தரிக்கோல் வைத்துத் தான் அன்று கட் செய்தோம். இன்று இரண்டு கிளிக் செய்தே வெட்டுகிறோம்.

* பல் தேய்க்கத்தான் அன்று பேஸ்ட். இன்று கையில் தொடாமலேயே நிறைய கம்ப்யூட்டரில் ஒட்டுகிறோம்.

* எட்டுக்கால் பூச்சியின் மாளிகை தான் அன்று வெப். இன்று உலகைச் சுற்றி பின்னப்பட்ட டிஜிட்டல் வலையே வெப்.

* காய்ச்சல் வந்தால் காரணம் வைரஸ். இன்று அடுத்தவனைக் கெடுக்கும் புரோகிராமே வைரஸ்.

VANJOOR

No comments: