21 Jul 2008

மனைவிக்கவிதைகள்

காதலியைப்பற்றி எழுத ஆயிரக்கணக்கான கவிஞர்களும் அவர்கள் எழுதிய கோடிக்கணக்கான கவிதைகளும் இருக்கின்றன.

"வீட்டுல அதைப் பாடுங்க - பொண்டாட்டிய லவ் பண்ணுங்க"என்ற இளையராஜா நீங்கலாக, மனைவியைப்பற்றி கவிதை மழை பொழிந்த யாரும் என் கண்ணில் படவில்லை.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டிவிட்ட முதுகலை இல்லறத்தியல் பட்டதாரியான நானும் எழுதாவிட்டால் மெல்லத் தமிழினிச் சாகுமோ என்ற பயம் வந்துவிட்டது. மேலும்

"மேட்டர் இல்லாதவனுக்கு கவிதையே கைகண்ட மருந்து" என்ற என் கவிமடத் தலைவன் பொன்மொழியும் நினைவில் ஆட, எடுத்துவிட்டேன் கலப்பையை.

கவிப்பேரரசுவின் லிஸ்ட் கவிதைகளையும், பாரதியின் கண்ணன் / கண்ணம்மா சீரீஸ் கவிதைகளையும் என் முன்னோடியாகக் கொண்டு ஆரம்பிக்கிறேன்!

மனைவி ஒரு எலக்ட்ரானிக் விந்தை

மனைவி ஒரு டெலிவிஷன் இன்னும் யாரும் அதற்குரிமோட் கண்டுபிடிக்கவில்லை.

மனைவி ஒரு ரெப்ரிஜரேட்டர் பழைய சண்டை நினைவுகளையும் கெடாமல் காப்பவள் -தேவையான நேரத்தில் கொடுப்பவள்.

மனைவி ஒரு வாட்ச் காலையில் எழுப்ப, கண் போகும் பாதையை கவனிக்க, எல்லா அர்த்தத்திலேயும்.

மனைவி ஒரு குக்கர் வேலை செய்வதைவிட செய்ததைக்காட்ட விசில் அடிப்பதில்தான் ஆர்வம் அதிகம்!

மனைவி ஒரு வாஷிங்மெஷின் துவைப்பதில், பிழிவதில் வெளுத்துக்கட்டுவதில்!

மனைவி ஒரு தொழில்நுட்பப்புரட்சி

மனைவி ஒரு செல்போன் இன்கமிங்கில் வசதிகள் இருந்தாலும் அவுட் கோயிங் எப்போதும் செலவுதான்.

மனைவி ஒரு ரீசார்ஜ் கார்டு. பழிவாங்குதலை உடனே செய்யும் பூத் கார்டு கொஞ்சநாள் தாங்கும் ப்ரீபெய்டு சேர்த்து வைத்துத் தாக்கும் போஸ்ட் பெய்டு. விடாது ஆப்பு!

மனைவி ஒரு கணினி உதவி போல் உள்ளே வந்து எல்லா நேரத்தையும் ஆக்கிரமிக்கும் அதன் கீபோர்டில் கண்ட்ரோல் ஆல்ட் டெலீட் மட்டும் கிடையாது!

மனைவி ஒரு இ-மெயில் அட்டாச்மெண்டுகள் அதிகமானால் வேகம் குறையும்।

மனைவி ஒரு இலக்கியம்

மனைவி ஒரு சிறுகதை எப்போதுமே எதிர்பாராத முடிவுதான்।

மனைவி ஒரு நாவல் முரண் படும் பல பாத்திரங்களை முழுதாக உள்ளே கொண்டவள்

மனைவி ஒரு கவிதை படைத்தவனையும் சேர்த்து யாருக்கும் புரியாத கவிதை।

மனைவி ஒரு நாடகம் காட்சி அமைப்பில் இன்னும் சிலர் இருப்பினும் ஓரங்கம் மட்டுமே பேசும்।

இப்போதைக்கு இவ்வளவுதான்

முக்கியமான பின்குறிப்பு: இக்கவிதைகளைப் படித்துவிட்டு பின்னூட்டமிடாமல் செல்பவர்கள், நெகடிவ் குத்து விடுபவர்கள் ஆகியோருக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கும் என்ற "வாழ்த்து" வழங்கப்படும்.

முக்கியமோ முக்கியமான பின்குறிப்பு: இப்படி ஒரு பதிவு வந்ததாக என் மனைவியிடம் சொல்பவர்களுக்கு சைபர்ஸ்பேஸ் மற்றும் இல்லறத்தியல் சட்டப்படி 100 கசையடிகள் வழங்கப்படும்।

பட்டைய கிளப்புனது பினாத்தல் சுரேஷ்

2 comments:

மங்களூர் சிவா said...

நல்லா சிரிக்க வெச்சுட்டீங்க.

இன்னும் பெண்ணிய வா(வியா)திகள் யாரும் இதை பாக்கலை, பாத்திருந்தா தொலைச்சு எடுத்திருப்பாங்க.

//இக்கவிதைகளைப் படித்துவிட்டு பின்னூட்டமிடாமல் செல்பவர்கள், நெகடிவ் குத்து விடுபவர்கள் ஆகியோருக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கும் என்ற "வாழ்த்து" வழங்கப்படும்।முக்கியமோ முக்கியமான
பின்குறிப்பு: இப்படி ஒரு பதிவு வந்ததாக என் மனைவியிடம் சொல்பவர்களுக்கு சைபர்ஸ்பேஸ் மற்றும் இல்லறத்தியல் சட்டப்படி 100 கசையடிகள் வழங்கப்படும்।//

வாழ்த்துன்னு சொல்லி பயமுருத்தறீங்க.

நம்ம பெனாத்தல் அன்னாச்சி கவுஜயா. அங்கபோய் வெச்சுகிறேன் அவருக்கு ஆப்பு.

மங்களூர் சிவா

Anonymous said...

திரு.மாலிக்!மனுசிய இயந்திரமாகவும்,புத்தகம்,இலக்கியம்,சிறுகதை,கவிதை, நாடகமாகவும் சொல்லியுள்ளீர்.சிரிக்க படைத்திருப்பின் சுகம்,அதுவன்று,வேறு அர்த்தம் கற்பிதல் ஆகதன்றொ!மனைவி நம்மின் மறுப்பகுதி(மறுப்பாதி அல்ல) நம்முடன் நிழலாய் தொடரும் நிசம்.இன்னும் சொல்லலாம்,அறுக்க விரும்பவில்லை.மொத்தத்தில் நல்ல யோசிக்கிறீங்க!.