17 Mar 2009

“டிவி’ பார்ப்பதை குறைத்தால் வீட்டில் குஷியோ குஷிதானாம்

டிவி’ பார்ப்பதை குறைத்தால் வீட்டில் குஷியோ குஷிதானாம்

டிவி பார்ப்பதை குறைத்தால், சந்தோஷமான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம். இதை பரிசோதனை மூலம் நிரூபித்துள்ளனர் தென்கொரியர்கள்.

தென்கொரியாவின் தெற்கு கடலோர பகுதியில் உள்ளது தாரங் தீவு. இங்கு 28 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களால் “டிவி’ பார்க்க முடியாமல் இருக்க முடிகிறதா, அப்படி பார்க்காமல் இருக்கும் போது, வீட்டில் நிகழும் மாற்றங்கள் என்ன என்பது பற்றி, உள்ளூர் நிறுவனம் ஆய்வை மேற்கொண்டது.

தீவில் உள்ள கிராமத் தலைவர் உட்பட அனைவரும் இதில் பங்கேற்றனர். ஒவ்வொரு வீட்டிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. மூன்று வாரத்திற்கு மேலாக “டிவி’யை மூட்டை கட்டி வைத்து விட்டு, பலர் குடும்ப விஷயங்களிலும், மற்ற விஷயங்களிலும் அக்கறை காட்டினர்.

இந்த கால கட்டத்தில், தங்களின் “டிவி’ பார்க்கும் பழக்கத்தை மறக்க, பலர் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதன்பின், கிராமத்தினர் கூறுகையில், “டிவி’ பார்ப்பதை விட்டதன் மூலம் எங்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகி விட்டது.

புத்தகங்கள் படிப்பதிலும், கணவர் அல்லது மனைவியுடன் பேசுவதிலும், மத ரீதியான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலும் அதிக நேரத்தைச் செலவிட்டோம்’ என்றனர். “என்னால் “டிவி’ பார்க்காமல் இருக்க முடியாது. வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தவுடன் பார்க்க ஆரம்பித்து விடுவேன். ஆனால், தற்போது எனது மனைவியை கவனிக்க முடிகிறது. அவர் முன்பை விட இப்போது, ரொம்ப அழகாக தெரிகிறார்’ என, கிராமத் தலைவர் சோய் கூறினார்.

No comments: