10 Mar 2009

எஸ்எம்எஸ்சில் பாஸ்போர்ட் விவரம் அறியும் சேவை

எஸ்எம்எஸ்சில் பாஸ்போர்ட் விவரம் அறியும் சேவை
திருச்சி மண்டலத்தில் அறிமுகம் மண்டல அதிகாரி தகவல்
திருச்சி பாஸ்போர்ட் நிலவரம் குறித்த விவரங்களை இனி எஸ்.எம்.எஸ். மூலம் பெறும் முறை திருச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலசந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியது:
விண்ணப்பித்த பின் தாமதமாகும் பாஸ் போர்ட் பற்றிய விவரங்களைப் பெறுவதில் கடும் சிரமம் இருந்து வந்தது. நேரடியாக வந்து விவரங்களை பெறும் முறையில் சில மாறுதல்களைச் செய்து இண்டர்நெட் மூலம் தகவல் அறிய வழி வகை செய்யப்பட்டது. இதிலும் சில பிரச்னைகள் ஏற்பட்டதால் மாற்று வழி ஆராயப்பட்டது.
இதையடுத்து திருச்சியில் விண்ணப்பிப்போர், இங்குள்ள நிலவரத்தை உடனுக்குடன் அறியும் வகையில் அதில் மாற்றம் செய்து திருச்சிக்கென தனி இணையதள முகவரியுடன் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
என்ற முகவரியை தொடர்புகொண்டு விவரங்களை எளிதில் பெறலாம்.
இந்த முறையில் பலரும் தொடர்பு கொள்வது சற்று சிரமம் என்பதால் செல்போன் மற்றும் எஸ்.எம்.எஸ் வசதியுடைய அனைத்து வகை (வீட்டு போன் உள்பட) போன்களிலும் எஸ்.எம்.எஸ். மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்கள் தங்களின் பாஸ்போர்ட் நிலவரம் குறித்து அறியும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக 5 இலக்கம் கொண்ட கட்டணத்துடன் கூடிய தனி தொடர்பு எண் விரைவில் அறிவிக்கப்படும். இதற்காக பிரத்யேகமாக 80 வகை பதில்களுடன் புதிய மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்பட்டுள்ளது.
இம்முறையில் மற்ற பாஸ்போர்ட் அலுவலகங்களில் பிஎஸ்என்எல் போன்களில் மட்டுமே தகவல் பெறமுடியும். திருச்சியிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த முறையை திருச்சி அலுவலகத்தில் அறிமுகம் செய்தாலும், எல்லா நிறுவனங்களின் போன்கள் மூலமும் தகவல்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பதிவு செய்யப்பட்ட குரல் வழியான தகவல்களைப் பெறும் முறை புதிய மாற்றங்களுடன் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முன்பு இந்த முறையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் அதில் 4 வகை பதில்கள் மட்டுமே கிடைக்கும். தற்போது இதிலும் 80 வகையான பதில்கள் பெறும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

No comments: