skip to main |
skip to sidebar
உணவே உண்ணாமல் நாம் சில நாட்கள் வாழ்ந்து விடலாம். நீர் அருந்தாமலே ஒரு சில மணி நேரம் நம்மால் இருந்து விட முடியும். ஆனால் காற்றைச் சுவாசிக்காமல் ஒரு நிமிடம் கூட எந்த ஒரு உயிரினமும் வாழ முடியாது.
காற்றின் மூலம் நம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் பெறப்படுவதும், தேவையற்ற கார்பன்டை-ஆக்ஸைடு வெறுவேறுவதும் சுவாசித்தல் மூலம் தான். சக்தியைத் தோற்றுவிப்பதும் சுவாசித்தல் தான்.சுவாசித்தல் சிறப்பாக நடைபெற சுத்தமான சுவாசப் பாதையும், ஆரோக்கிய-மான நுரையீரலும் அவசியம் தேவை.
மனிதன் நுரையீரல் கூம்பு வடிவ-முடையது. பஞ்சு போன்று மிருதுவானது. நுரையீரல் புளூரா என்ற சவ்வினால் மூடப்பட்டுள்ளது. இதயமும், உணவுக் குழாயும் நுரையீரலுக்கு நடுவில் தான் அமைந்துள்ளன. நுரையீரலின் மொத்த கொள்ளளவு 4450-5000 மிலி. ஆகும். நாம் சுவாசிக்கும்போது 500 மிலி காற்று நம் மூக்கு துவாரத்தின் வழியாகச் செல்கிறது. ஆனால் 350 மிலி காற்றே நுரையீரலை அடையும் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளில் தான் வாயுப் பரிமாற்றம் நிகழ்கிறது.
காற்றுப் பைகளின் எண்ணிக்கை சுமார் 300 மில்லியன்கள் ஆகும். இவற்றின் விட்டம் 0.2 இஇ ஆகும்.நாசித் துவாரத்தின் வழியாக நம் சுவாசப் பாதைக்குள் நுழையும் காற்றை வெப்பப் படுத்தியோ அல்லது குளிர்வித்தோ நம் உடலின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாற்றுவது நாசிப்பள்ளம் எனப்படும்.மேலும் இங்குள்ள உரோமங்கள், கோழைச் சுரப்பிகள் ஆகியவை தூசிகளை நீக்குகிறது.
ஆக்சிஜன் மிகுந்த காற்று நுரையீரலுக்கு வருவது உட்சுவாசம் என்றும் கார்பன்-டை-ஆக்சைடு மிகுந்த காற்று நுரையீரலை விட்டு வெளியேறுவது வெளிச் சுவாசம் எனவும் அழைக்கப்படுகிறது. நுரையீரலு க்குச் செல்லும் காற்றில் 21 சதவீதமும் வெளிச் செல்லும் காற்றில் 16 சதவீதமும் இருக்கும் அதேபோல் உட்செல்லும் காற்றில் 0.04 சதவீதமும், வெளியேறும் காற்றில் 5.6 சதவீதமும் கார்பன்டை ஆக்ஸைடும் இருக்கும்.
சுவாசிக்கும் போத நாம் உட்கொண்ட உணவு ஆக்சிஜனேற்றம் அடைந்து சக்தி வெளிப்படும். மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முதல் 18 முறை சுவாசிக்கறின். குழந்தைகள் நிமிடத்திற்கு 26 முறை சுவாசிக்கின்றன.ஒரு செல் உயிரிகள் முதல் உருளைப் புழுக்கள் தொகுதி வரையிலான சிறு உயிரிகள் உடலின் மேற்பரப்பு அல்லது தோல் மூலம்சுவாசிக்கின்றன. சுவாசிக்க தனியாக ஒரு உறுப்பு கிடையாது.
மண்புழுக்கள் காற்றற்ற முறையில் சுவாசிக்கும் தேள், சிலந்தி ஆகியவை நுரையீரல் புத்தகத்தினாலும் (க்ஷடிடிம டுரபேள) நட்சத்திர மீன் குழல் கால்களாலும், கடல் வெள்ளரிகள் மரம் போனற் சுவாச உறுப்பாலும் மீன்கள் 4 அல்லது 5 சோடி செவுள்கள் மூலம் சுவாசிக்கின்றன.
நம் மூளையில் உள்ள முகுளமே சுவாசக் கட்டுப்பாட்டு மையமாகத் திகழ்கிறது. வேகஸ், மற்றும் பிரினிக் ஆகிய நரம்புகள் இதற்கு உதவுகின்றன.வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் நிமோனியா, காசநோய் நுரையீரல் அழற்சி நோய் மற்றும் மார்புச் சளி ஆகியன உண்டாகின்றன.
இவற்றில் சுரீரென்ற மார்பு வலி ஏற்பட்டு அது தோள்பட்டைக்கும் பரவுவதே நுரையீரல் அழற்சி நோயாகும். மார்புச் சளி என்பது மூச்சுக் கிளைக் குழல்களில் தோன்றும் வீக்கமாகும். புகை பிடிப்பதாலும் மாசுள்ள காற்று அதிகம் உள்ள இடங்களிலும் இருப்பவர்களுக்கு இந்நோய் அதிகம் வருகிறது.
நாம் ஒரு நிமிடத்தில் 0.3 லிட்டர், ஒரு நாளில் 15,000 லிட்டர் காற்றையும் சுவாசிக்கிறோம். சுவாசிக்கும் காற்று சுத்தமாக, புகை பிடிக்காமல், காற்றை மாசுபடுத்தாமல் நலமாக வாழ்வோம்.
No comments:
Post a Comment