14 Mar 2009

இன்டர்நெட்டில் பாஸ்போர்ட் ஏஜென்டுகளின் பட்டியல்

இன்டர்நெட்டில் ஏஜெண்டுகள் பட்டியல்

போலிநபர்களிடம் ஏமாறாதீர்கள் பாஸ்போர்ட் அதிகாரி எச்சரிக்கை

பாஸ்போர்ட் பெற்றுத்தருவதற்கான அங்கீகரிக்கப்பட்ட டிராவல்ஸ் ஏஜென்டுகளின் பட்டியல் இண்டர்நெட்டில் வெளியிடப்பட உள்ளது. எனவே போலி ஏஜென்டுகளை நம்பி ஏமாற வேண்டும் என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர், நிருபர்களிடம் கூறியது:

பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி பாஸ்போர்ட் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக புரோக்கர்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டமாக போலி ஏஜென்டுகளை களையெடுக்கும் பணியாகும். திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலக கட்டுப்பாட்டில் மொத்தம் 34 அங்கீகரிக்கப்பட்ட டிராவல்ஸ் ஏஜென்டுகள் மட்டுமே உள்ளனர். ஆனால் அனைத்து பகுதிகளிலும் அமைந்துள்ள டிராவல்ஸ் ஏஜென்டுகள் அனைவருமே “அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள்“ என்ற வாசகங்கள் கொண்டுள்ளனர்.இதற்காகவே திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகளின் பட்டியலை எழுதிவைத்துள்ளோம்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட டிராவல்ஸ் ஏஜென்டுகளை முறைப்படுத்த திட்டமிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட் நிறுவன உரிமையாளர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. திருச்சி பாஸ்போர்ட் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 34 அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகளில் 3 பேரைத்தவிர மற்ற அனைவருமே திருச்சியில் அலுவலகத்தை வைத்துக்கொண்டு பினாமி பெயர்களில் செயல்பட்டு வந்த விபரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவன உரிமையாளர்களும்தங்க ளின் புகைப்படம், தொட ர்பு முகவரி, தொலைபேசி எண்கள், உள்ளிட்ட பல விபரங்களுடன் (100 ரூபாய்) பத்திரத்தில பதிவு செய்து தங்களின் நிறுவனம் சார்பில் பாஸ்போ ர்ட் அலுவலகத்துக்கு நேரில் வரும் நபர்கள் குறித்த விபரங்களும் (போட்டோவுடன்) குறிப்பிட்டு அதனை பதிவு செய்யவேண்டும் என முறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி முறையாக இயங்கிவரும் உண்மை யான ஏஜென்டுகள் பெரு ம்பாலான பேர் பதிவு செய்துவிட்டனர். ஏஜென்டுகளின் பதிவு செய்த விபரங்கள் அனைத்தும் இணைய தளத்தில் இடம்பெறச் செய்துள்ளோம். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யும் நபர்கள் மட்டுமே தங்களின் அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். மற்றவர்களின் அங்கீகாரம் ரத்து செய்வதுடன் அங்கீகாரம் பெற்ற ஏஜென்டுகள் பட்டியலிலிருந்து அவர்கள் நீக்கப்படுவர்.

போலி புரோக்கர்கள் போல் போலி ஏஜென்டுகளையும் கட்டுக்குள் கொண்டு வருவதற்கே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments: