கடந்த ஒரு மாசமா இது பத்தி எழுதனும்னு நெனச்சுட்டுருந்தேன். அதுக்குள்ள சரி பண்ணிடுவாங்கன்னு ஒரு நப்பாசை!
இந்த ரெண்டு விளம்பரங்களுக்கும் கொஞ்சம் எதிரே (ஒரு 50 - 100 அடிகள் இருக்கும்) ஒரு போக்குவரத்து சந்திப்பு இருக்கு. இது ஒரு முக்கியமான சந்திப்பு. கோயம்பேடு நிலையத்துக்கு வரும் பேருந்துகள் இது வழியாகத்தான் புயலெனப் பாயும்.
ஒவ்வொரு நாளும் உச்சகட்ட போக்குவரத்து நேரங்களில், இங்கு நடக்கும் போக்குவரத்துக் கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமில்லை. சிக்னல் இருக்கா இல்லையான்னு தெரியாம, பேருந்து வராத நேரத்துல, சடாருன்னு போறாங்க. திடீர்ன்னு பேருந்துகள் உள்ளே போகும், வெளியே வரும். அன்னைகளுக்கு வார்த்தை அபிஷேகம்தான்.
லட்சக்கணக்குல கொட்டி சுய விளம்பரம் செய்து கொள்ளும் அரசர்களுக்கும், அரசிகளுக்கும் அந்த செலவில் பத்தில் ஒரு பங்கு கூட ஆகாத மூன்று விளக்குகள் போட நேரமில்லை அல்லது அக்கறையில்லை.
ஆள்பவர்களுக்கு விளம்பரம் கொடுத்து காவடி தூக்கும் அதிகாரிகளுக்கும் இதப் பத்திக் கவலையுமில்லை. ஆக, நமது ஜனநாயகம் பல்லிளிக்கும் பல இடங்களில் இதுவும் ஒன்று.
-தஞ்சாவூரான்
No comments:
Post a Comment