30 Jan 2009

500 ரூபாய் கம்ப்யூட்டர் 6 மாதத்தில் கிடைக்கும்

500 ரூபாய் கம்ப்யூட்டர் 6 மாதத்தில் கிடைக்கும் மத்திய அரசு தீவிரம்

மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் ரூ.500 விலையில் கம்ப்யூட்டர் உற்பத்தி செய்து அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்த கம்ப்யூட்டருக்கான தொழில்நுட்பத்தை பெங்களூரைச் சேர்ந்த ஐஐஎஸ்சி, சென்னை ஐஐடி ஆகியவை உருவாக்கியுள்ளன.

இதுபற்றி டெல்லியில் நிருபர்களிடம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் உயர்கல்விப் பிரிவு செயலர் அகர்வால் நேற்று கூறியதாவது:

மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் இருக்கப்போகும் இந்தக் கம்ப்யூட்டர்கள் லேன் நெட்வொர்க்,வைஃபை வசதிகள் கொண்டவை. அதிகரிக்கக் கூடிய மெமரி வசதியும் இருக்கும். இதற்கான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்ட போதிலும்,இன்னும் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது.எனவே, 6 மாதங்களில் இந்த கம்ப்யூட்டர் அறிமுகமாகலாம்.

ரூ.500 விலையில் கிடைக்கக்கூடிய கம்ப்யூட்டருடன் அதன் மூலம் கல்வி கற்பதற்காக அனைத்து பாடங்களிலும் சிடி, சாப்ட்வேர்கள் மாணவர்களுக்கு இலவசமாக அளிக்கப்படும்.

தங்கள் குழந்தைகளுக்கு பரிசளிக்க விரும்பும் பெற்றோர்,இந்தக் கம்ப்யூட்டரை அளிக்கலாம்.
கல்வி நிறுவனங்களுக்கு இதை மானிய விலையில் அளிப்பது பற்றியும் அரசு பரிசீலிக்கும்.
இந்தக் கம்ப்யூட்டரைத் தயாரிப்பதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டு சேர்வது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

இக்கம்ப்யூட்டர் 2 வாட் மின்சாரத்தில் இயங்கும். தேசிய கல்வி வளர்ச்சி இயக்கத்தின் கீழ் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப (ஐசிடி) மூலம் இந்த கம்ப்யூட்டர் தயாரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அகர்வால் தெரிவித்தார்.

No comments: