21 Jan 2009

தினமும் முட்டை சாப்பிடுபவரா நீங்கள்?

அன்றாடம் ஒரு முட்டையை சாப்பிடுவோர் பலர் உண்டு. தினமும் ஒரு முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு 2 முட்டை சாப்பிட்டால் கூட அது அவர்களின் சர்க்கரை நோய் பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தினமும் ஒரு முட்டை உண்பது சர்க்கரை நோயாளிகளின் உடல்நலத்திற்கு சிறந்தது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வைப் பின்பற்றி ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் டைப் 2 டயபடிஸ் நோய் ஏற்படும் வாய்ப்பும், இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை பராமரிப்பதிலும் முட்டையின் பங்கு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 60 விழுக்காடு அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் பெண்கள் தினமும் ஒரு முட்டை அல்லது வாரத்திற்கு 7-க்கும் அதிகமான அளவு முட்டைகளைச் சாப்பிட்டால், சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் 77 விழுக்காடு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் வாரத்திற்கு ஒரு முட்டை சாப்பிடலாம் என்றும், இதனால் பெரிய அளவில் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படாது என்றும் ஆய்வை மேற்கொண்ட டாக்டர் மைக்கேல் தெரிவித்துள்ளார். ஆண்கள் மற்றும் பெண்கள் 57 ஆயிரம் பேரிடம் முட்டை சாப்பிடும் பழக்கம் குறித்து சுமார் 20 ஆண்டுகள் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

No comments: