புதுடெல்லி, ஜூன் 16:
திருமணமானபின் மகள் இறந்தால் அவரது சொத்தில் பெற்றோருக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்று சட்டக் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
மத்திய சட்ட அமைச்சகர் பரத்வாஜிடம் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமையிலான சட்டக்கமிஷன் அளித்துள்ள 207வது அறிக்கையில் இது பற்றி கூறியிருப்பதாவது:
இப்போது, பெண்கள் நன்கு படித்து உயர் பதவியில் அமருகின்றனர். நன்கு சம்பாதித்து சுயமாக வாழ அவர்களால் முடிகிறது. இந்து வாரிசு சட்டம் வடிவமைக்கப்பட்ட காலத்தில் ஆண்களை நம்பிதான் பெண்கள் வாழும் நிலை இருந்தது.
ஆனால், இன்று அப்படியில்லை. ஆண்களை விட பெண்கள் பலர் அதிகம் சம்பாதிக்கின்றனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அவர்கள் நல்ல சம்பளத்தில் பணியாற்றுகின்றனர்.
இந்து வாரிசு சட்டப்படி, திருமணமான பெண் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டால், அவரது சொத்து முழுவதையும் கணவனோ அல்லது அவரது மாமியார், மாமனாரோதான் அனுபவிக்க உரிமை உள்ளது. அவர்களும் உயிருடன் இல்லை என்றால், கணவனின் உடன் பிறந்தவர்களுக்குதான் சொத்து முழுவதும் சொந்தம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் பெற்றோருக்கோ, உடன் பிறந்தவர்களுக்கோ சொத்தில் எந்த உரிமையும் வழங்கப்படவில்லை.
பெற்றோர் சொத்தில் மகளுக்கு உரிமை உண்டு என்று சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளபோது, மகளின் சொத்தில் பெற்றோருக்கு உரிமை உள்ளது என்று சட்ட திருத்தம் கொண்டு வருவதுதான் நியாயம்.
திருமணத்துக்கு பின், குழந்தை இல்லாமல் மகள் இறந்தால் அவரது சுயசம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் எல்லாவற்றிலும் பெண்ணின் பெற்றோருக்கு கணவர் பங்கு கொடுக்க வேண்டும். இதற்கு ஏற்றார்போல், இந்து வாரிசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு சட்டக்கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
1400 வருடங்களுக்கு முன் திருக்குர்ஆன்
4:11 உங்கள் மக்களில ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும். இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிரைவேற்றிய பின்னர்தான். உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள். ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
17 Jun 2008
திருமணமானபின் இறந்த மகளின் சொத்தில் பெற்றோருக்கு பங்கு
Posted by Abdul Malik at 11:29 am
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment