8 Jun 2008

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.2.12

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.2.12

இந்தியாவில் அல்ல, வெனிசுலாவில் தான்

உலகிலேயே துருக்கியில் தான் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.113.

ஆனால் வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2 ரூபாய் 12 பைசா மட்டும்தான்.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை எகிறிக் கொண்டே இருக்க உலகம் முழுவதும் பாதிப்புகள் தெரியத் தொடங்கிவிட்டன.

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 130 டாலரை தாண்டிவிட்டது. இந்நிலையில் அதற்கு சமமான விலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்க முடியாதால் பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

அதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, டீலர்களுக்கு சப்ளை குறைப்பு என ஏகப்பட்ட விளைவுகள்.

சரி... மற்ற நாடுகளில் நிலவரம் எப்படி?

உலகிலேயே துருக்கியில்தான் பெட்ரோல் விலை அதிகம். அங்கு ஒரு லிட்டர் ரூ.113.30 க்கு விற்கப்படுகிறது.

நார்வேயில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.112.

ஆனால் இதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத விலை வெனிசூலா, சவூதி அரேபியா, ஐக்கி அரபு எமிரேட்சில் உள்ளது.

வெனிசுலாவில் பெட்ரோல் விலை 2 ரூபாய் 12 பைசா மட்டும்தான்.

அந்நாட்டு அரசு கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு, மானியம் தருவதால்தான் இவ்வளவு குறைவாக விலை உள்ளது.

உலகிலேயே இந்த விலைக்கு வேறெங்கும் பெட்ரோல் விற்கப்படுவது இல்லை.

சவூதி அரேபியாவில் ஒரு லிட்டர் விலை 5 ரூபாய்தான். இந்தியாவில் விற்பதில் இது 10ல் ஒரு பங்குதான். ஐக்கிய அரபு எமிரேட்சில் லிட்டர் விலை ரூ.15.65.

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.55.76.

இந்த விலையில் 52 சதவீதம் வரிகளாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் : தமிழ் முரசு

No comments: