ஊரு விட்டு ஊரு வந்து (நாடு விட்டு நாடு வந்து), ஊரை தொலைச்சிட்டோம்னு வருத்தப்படும் மக்களே... இதோ நமக்காக இப்போ சூரியன் எஃப்.எம் (இன்னும் நிறைய இருக்கு) வின்ஆம்போட (Winamp) இணைந்து வருது...
பழைய Win Amp வெர்ஷனில் வருதானு எனக்கு தெரியல...
புது வெர்ஷன் 5.32ல வருது...
நீங்க செய்ய வேண்டியது இதுதான்...
Winamp download செய்ய கிழே இருக்கும் லிங்க்கை கிளிக்கவும்
காசு வெச்சிட்டு செலவு பண்றது எப்படினு தெரியாதவங்க காசு கொடுத்து டவுண்லோட் செய்து கொள்ளவும்... நம்மல மாதிரி ஓசில கிடைச்சா போதும்னு நினைக்கறவங்க அப்படியே Free வெர்ஷன் டவுன்லோட் செய்து கொள்ளவும்...
இன்ஸ்டால் செய்த பிறகு, படத்தில் உள்ளது போல்
இன்ஸ்டால் செய்த பிறகு, படத்தில் உள்ளது போல்
இடது பக்கம் உள்ள மெனுவில் ஆன்லைன் சர்வீஸசில் shoutcast radioவை செலக்ட் செய்யவும். பிறகு Genre "T" தேர்ந்துடுத்து அதில் Tamilஐ கிளிக் செய்யவும்... உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்துடுத்து பாட்டு கேட்டு ரசிக்கலாம்...


No comments:
Post a Comment