9 Sept 2007

துபாயில் கணினி கண்காட்சி

துபாயில் ஜிடெக்ஸ் எனப்படும் கணினி கண்காட்சி தொடங்கியுள்ளது. வருகிற 12ம் தேதி வரை இது நடக்கிறது.வளைகுடா நாடுகளின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் ஜிடெக்ஸ் ( GITEX ) எனப்படும் கணினி கண்காட்சி துபாயில் கடந்த 6ம் தேதி தொடங்கியது. வருகிற 12ம் தேதி வரை நடைபெறுகிறது.இவ்வாண்டு நடைபெற்று வரும் கண்காட்சியில் எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3300 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.இக் கண்காட்சி பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள பெரிதும் உதவிகரமாய் இருந்து வருகிறது.கண்காட்சியில் பங்கேற்க வசதியாக துபாய் நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து இலவச போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் லேப்டாப், கணினி, மொபைல் போன், கேமரா உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களும் கிடைக்கின்றன.இக்கண்காட்சி 17 வது ஆண்டாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சி குறித்த மேலும் விவரங்களை www.shopper.gitex.com எனும் இணையதளத்தில் காணலாம்।

thatstamil.oneindia.in

No comments: