U.A.E அபுதாபியில் வெளிநாடு இந்தியர் நல அமைச்சகத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு உதவிடும் நோக்கில் இலவச தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு இந்தியர் நலத்துறை அமைச்சகம் இந்த சேவையை வழங்குகிறது. வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் ஏஜெண்டுகளின் கவர்ச்சியான வாக்குறுதிகளைக் கேட்டு ஏமாந்து விடுகின்றனர்.
இதன் காரணமாக மனைவியின் நகைகள், சொத்து உள்ளிட்டவற்றை விற்று பிழைப்பு தேடி வரும் இவர்களில் பலர் தங்களது அறியாமையின் காரணமாக ஏமாற்றப்படுகின்றனர். இத்தகையவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திம் வகையில் இலவச தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த சேவையின் மூலம் ஏமாற்றும் ஏஜண்டுகள் குறித்தும் புகார் தரலாம். தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகம், குவைத்,சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் 800 091 202 53 என்ற இலவச தொலைபேசி எண்ணில் வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்
25 Jul 2009
இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இலவச தொலைபேசி
Posted by Abdul Malik at 12:22 pm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment