பிளஸ் 1 பிளஸ்2 வகுப்பில் சேரப்போகிறீர்களா?
இலவச வகுப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு!
மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 சேரும் 50 மாணவ, மாணவிகளுக்கு, இலவச விடுதி வசதியுடன் கல்வி அளிக்கப்படும் என்று, மனிதநேய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் சைதை துரைசாமி நடத்திவரும் மனிதநேய அறக்கட்ளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற அகில இந்திய அளவிலான தேர்வுகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அண்ணா பல்கலைக் கழகம், அரசு மருத்துவக் கல்லூரிகள் போன்ற புகழ் மிக்க கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும் வகையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கிலும், இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க 25 மாணவர்கள், 25 மாணவிகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் கல்வி அளிக்கவும், அவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கவும் சைதை துரைசாமி முன்வந்துள்ளார்.
இதில் சேர விரும்பும் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்.
அவர்களுக்கு புத்தகம் முதல் படிக்க தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள்,
பி.வி. கந்தசாமி, தாளாளர்,
சைதை சா. துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
71, பைபாஸ் ரோடு, மேலூர், மதுரை மாவட்டம் 625 106.
(போன் 0452-3204545, செல் போன் 94430 49599)
என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-நீதியின் குரல்
No comments:
Post a Comment