ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் திருச்சி, அபுதாபி, திருச்சி சர்வீஸ்
திருச்சியிலிருந்து அபுதாபிக்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி முதல் வாரம் இரு முறை விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் துவக்குகிறது. இது குறித்து அந்நிறுவன நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருச்சி-அபுதாபிக்கு 30ம் தேதி முதல் விமான சேவை துவக்கப்படுகிறது. வாரத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும். திருச்சியில் பகல் 2.30 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5 மணிக்கு அபுதாபி சென்றடையும். அபுதாபியிலிருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.55க்கு திருச்சியை வந்தடைகின்றது. திருச்சி-அபுதாபிக்கான விமானக் கட்டணம் ரூ.6,439. இந்நிறுவனம் சார்பில் திருச்சியிலிருந்து துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு தினசரி இரு விமானங்களையும், கோலாலம்பூர் மற்றும் இலங்கைக்கு சென்னை வழியாக விமானங்களையும் இயக்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
28 Apr 2009
திருச்சி to அபுதாபி புதிய விமான சேவை
Posted by
Abdul Malik
at
5:32 pm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment