நாம் உண்ணும் உணவு வகைகளில் இன்று 1700 க்கும் குறையாதவை செயற்கையான சுவைக்கூட்டுப் பொருள்களால் உருவானவை. பானங்களிலும் பிஸ்கட்டுகளிலும் 100 க்கும் குறையாத இரசாயனங்களையே பயன்படுத்துகின்றனர்.
கேக் மிக்ஸ், சாக்லெட், பிஸ்கட், மார்ஜரின், திடீர் உணவுவகைகள், குலோப் ஜாமூன் மிக்ஸ் என அனைத்திலும் நம்முடைய சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய மோசமான இரசாயனங்கள் இருக்கின்றன உண்ணத் தயாராக இருப்பதாலும் கவர்ச்சிகரமான வண்ணங்களில் இருப்பதாலும், நாம் இவற்றைக் கணக்கில் கொள்வது இல்லை.
எனவே நமது உடலுக்கு பாதுகாப்பானவையா என்று எவரும் அக்கறை கொள்வதில்லை. சுவைகூட்டுப் பொருள் என்பது தேவையில்லாத ஒன்றாகும். சுவை கூட்டுப் பொருளுக்கும் ஊட்டச் சத்துப் பொருளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. ‘ஊட்டச் சத்துக்கள் சேர்க்கப்பட்டவை’ என்று கூறப்படுவது இயற்கையான சத்துக்கள் அகற்றப்பட்டு, அவை இரசாயனங்களால் நிரப்பப்ட்டிருக்கின்றன என்று பொருளாகும்.
ஆனால் பெரும்பாலும் அகற்றப்படும் சத்துக்கள் நிரப்பப்படுவது கிடையாது. ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட வெள்ளை ரொட்டியில் (பிரட்) 290 விதமான இயற்கையான வைட்டமின், புரதம், தாதுப்பொருள்கள் அழிக்கப்படுகின்றன. 4 அல்லது 5 செயற்கைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
பழபானங்களில் தண்ணீரில் வண்ணம் சேர்க்கப்படுகிறது. தயாரிப்பின் போது இயற்கையான சுவை அழிந்து போய் விடுகிறது. எனவே, சுவை கூட்டுப் பொருட்களும் சுவையூட்டுகளும் உணவுத் தயாரிப்பின் போது அழிந்து போகும் சுவையை மீண்டும் கொண்டுவந்து விடுகின்றன. சாக்லெட் சேர்க்கப்பட்டுள்ள பிஸ்கட்டுகளில் அதிகமான சாக்லெட் சுவை இருப்பது அதில் சேர்க்கப்படும் சுவையூட்டுகளால் தானே தவிர கொக்கோ பழத்தால் அல்ல. இதே போலத்தான் ஜாம் வகைகளும்.
பேன்களைக் கொல்ல பயன்படுத்தப்படும் பைப்பர் ஹோல் என்ற இராசயனப் பொருள் வெனிலா கலக்கப்படும் உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, வாழைப்பழம் முதலியவற்றில் (டப்பாக்கள்) துணிகளையும் தோல்களையும் கழுவப் பயன்படுத்தப்படும் பென்சி அஸிடெட், எதில் அசிடெட், அமில் அசிடெட் முதலியன சேர்க்கப்படுகின்றன. இவற்றைச் சாப்பிடுவதால் கெடுதல்களே அதிகம்!!
28 Apr 2009
அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
Posted by Abdul Malik at 1:46 pm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment