நீங்கள் தின்பண்டங்களுக்கு அடிமையானவரா? உங்களின் உடல் எடை அதிகரித்தால் ஆயுளும் 10 ஆண்டுகளுக்கு மேல் குறையும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அதிக உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தினர்.
அதில், உடல் பருமன் என்பது புகைபிடித்தலை விட அதிக பாதிப்பைத் தருகிறது. அதாவது ஆயுளில் சுமார் 13 ஆண்டுகளைக் குறைத்து விடுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். ''நமது சோம்பேறித் தனத்தினாலும், அவசரத்தினாலும் துரித உணவுகளைத் தேடுகிறோம். பற்றாக்குறைக்கு தின்பண்டங்களைச் சாப்பிடுகிறாம்.
நம்மைச் சுற்றியுள்ள நுகர்வோர் சமூகம், நம்மைச் சாப்பிடத் தூண்டுகிறது. அதையே நமது வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்கிறோம்'' என்று ஆய்வுக் குழுவின் தலைமைப் பேராசிரியர் டேவிட் கிங் கூறியுள்ளார்.
இவர் பிரிட்டிஷ் அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆவார். இவரின் குழுவில் உள்ள 250 இளம் அறிவியலாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். உடலின் உயரத்திற்குத் தகுந்த எடை உள்ளதா என அறியப் பயன்படும் BMI (body mass index) அட்டவணைப்படி 30 கிலோ அதிகமாக இருந்தால் ஆயுளில் 10 ஆண்டு குறையும். 40 கிலோ அதிகமாக இருந்தால் ஆயுளில் 13 ஆண்டுகளுக்கு மேல் குறையும். மேலும், இதய நோய்கள், நீரிழிவு மட்டுமல்லாமல் புற்றுநோய்க்குகூட உடல் பருமன் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. நிறைய நகரங்களில் கார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அவற்றைப் பயன்படுத்துபவர்கள் சிறிது யோசிக்க வேண்டும். நடக்க முடிந்த இடங்களுக்கு நடந்து செல்வதே நல்லது. ஏனெனில் அது ஒரு நல்ல உடல்பயிற்சியாகும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
''இது மிகப்பெரிய கலாச்சார மாற்றத் தேவைக்கு இட்டுச் சென்றுள்ளது. உடல் பருமன் சிக்கல் ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நாம் உடனடியாகச் செயல்பட வேண்டும்'' என்று பேராசிரியர் கிங் தெரிவித்துள்ளார்.
இனிப்பைக் குறைத்தாலே உடல் பருமன் குறையும்
நமது உடலிற்குத் தேவையான சத்துக்களை குறைந்த அளவிற்கே அளிக்கும் உணவு வகைகளையும், பானங்களையும் சாப்பிடுவதன் மூலம் உடல் பருமனைக் குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெல்ஸ்லி, ஆதம் ட்ரூவோன்ஸ்கி ஆகியோர் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் குறைந்த கலோரி அளவு கொண்ட இனிப்புச் சத்துகள், சக்தியின் அடர்த்தி தன்மை, திருப்தித் தன்மை ஆகியவைத் தொடர்பாக நடத்திய ஆய்வில் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இனிப்பு அளவைக் குறைத்துக் கொண்டாலே உடல் பருமனைக் கட்டுப்படுத்துவது எளிது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
குறைந்த கலோரி கொண்ட இனிப்பு உணவுகள் பெரும்பாலான பானங்களின் கலோரி அளவை பூஜ்யம் அளவுக்கு குறைத்து விடும். அதேப்போன்று நாம் சாப்பிடும் உணவின் கலோரி சத்தின் அடர்த்தியின் அளவையம் குறைக்கின்றன. வேதிப் பொருள் கலந்த பானங்களையும், குறைந்த கலோரி சத்து உள்ள உணவு வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும் என்று தற்போதைய உணவு சாப்பிடும் நெறிமுறையாக இப்போது உள்ளது எனவும் ஆதம் ட்ரூவோன்ஸ்கி கூறியுள்ளார். இதற்கு முந்தைய ஆய்வுகளிலும் குறைந்த இனிப்பு சத்துக்கொண்ட உணவு வகைகள் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும் முக்கியமான வழியாக கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர் ஜார்ஜ் ப்ளாக்பேன் நடத்திய சோதனையில், குறைந்த கலோரி கொண்ட ஆஸ்பர்டேம் என்ற இனிப்புச் சத்தை உணவில் கலந்து சாப்பிட்டவர்களின் உடல் எடையை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் தெரிந்ததாகவும், குண்டான பெண்களின் உடல் எடையைக் நீண்ட கால அடிப்படையில் கட்டுப்படுத்தவும் ஆஸ்பர்டேம் உதவியது தெரிய வந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வில் 20 முதல் 60 வயது நிரம்பிய 168 குண்டுப் பெண்கள் இரண்டு ஆண்டு காலம் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இந்த 168 பெண்களுமே குறைந்த கலோரி ஆஸ்பர்டேம் இனிப்புச் சத்துப் பொருள் கலந்த உணவு, பானங்கள் தங்கள் உடல் எடை குறைப்பிலும், நீண்ட கால அளவில் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவவுதாக தெரிவித்துள்ளனர். மற்றொரு ஆய்வில் சக்ராலோஸ் என்ற குறைந்த கலோரி சத்து இனிப்பூட்டும் பொருட்கள் கலந்த உணவை சாப்பிட்ட குழுந்தைகளின் நடவடிக்கைகள் போதுமான அளவிற்கு அதிகரிக்க உதவியதுடன், குழந்தைகளின் உடல் எடை குறியீடு குறைவதற்கும் காரணமாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.அதிகரித்து வரும் குண்டானவர்களின் விகிதத்திற்கும், தற்போது உணவில் இடம் பெற்றுள்ள இனிப்புத் தன்மைக்கும், உணவில் நீக்கப்பட வேண்டிய அளவு இனிப்புச் சத்தின் அளவுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தள்ளார். வாடிக்கையாளர்களுக்கு யார் சொல்வதை நம்புவது என்பதில் சிக்கல் ஏற்படுகின்றது. சாப்பிடும் அளவில் கலோரி கத்தை குறைப்பது, நாம் தேர்ந்தெடுக்கும் உணவு வகைகளில் கலோரி சத்து குறைவானவற்றைத் தேர்வு செய்வது, உடற் பயிற்சியை அதிகரிப்பது ஆகிய மூன்றும் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
Webdunia
10 Feb 2008
ஆயுளைக் குறைக்கும் உடல் பருமன் !
Posted by Abdul Malik at 7:40 pm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment