8 Apr 2010

கற்பை சூரையாடும் முன் விழித்துக்கொள்ளுங்கள்!

மனித இனம் இத்தனை யுகங்களாக திருமணம் என்ற அமைப்பில்தான் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடைபிடித்து வரும் ஒழுக்கம் மாறி மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் மிருகங்கள் வைத்துக் கொள்வதை போல திருமணத்துக்கு முன்பே உறவு கொள்வதை சரி என்று உயர்ந்த கலாச்சாரத்துக்கு பெயர் போன இந்தியாவின் உச்ச நீதி மன்றமே தீர்ப்பு சொல்லி இருப்பது துரதிர்ஷ்ட வசமானது.

இனி நாய்கள் போன்ற பிராணிகள் தங்களைப் போலவே மனிதர்களும் திருமணம் என்ற ஒன்று இல்லாமல் சேருவதை பார்த்து சந்தோசம் அடையும்.இவ்வாறு திருமணத்துக்கு முன்பே உறவு கொள்வதை தடை செய்யும் சட்டம் நம் நாட்டில் இல்லை என்பது வேதனைக்குரியது. திருமணமின்றி உறவு கொள்ளும் செயல் சட்டப் படி சரியானதாக இருக்கலாம். நாகரீக சமுதாயத்தில் இழிவான செயல்.

சமூக அமப்பில் ஒழுக்கங்கெட்ட செயல். சட்டப்படி தண்டிக்கப் படுவோம் என்ற பயம் இல்லாததால் இளம் பெண்களும் ஆண்களும் திருமணத்துக்கு முன்பே உற்வு கொள்ளும் பழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

இதனால் சமூக ஒழுக்கம் கெடும். விபச்சாரம் பெருகி விடும்.எதிர்காலத்தில் திருமணம் என்ற ஒன்று இல்லாமல் போய் விடும். இதனால் பெண்களின் சமூக பாதுகாப்பு கேள்விகுறி ஆகி விடும். தங்கள் சொந்த சகோதரிகள் அல்லது மகள் திருமணம் இல்லாமலேயே உறவு கொள்ளுவதை இதை தவறு இல்லை என்று சொல்பவர்களின் மனம் ஏற்றுக் கொள்ளுமா?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று இருப்பதால் குஷ்புவை முன் வரிசை இருக்கையில் அமர வைத்ததை போலவே ஒரு சாதாரண பெண்ணையும் அமர வைத்துக் கொள்வார்களா?

No comments: