சில சமயம் நமக்கு வந்த குறுந்தகவலை(SMS) நாம் தெரியாமல் அழித்துவிடுவோம். அதை மறுபடியும் மீட்பது எப்படி என்பது பற்றிய பதிவு இது. இது சிம்பியன் இயங்குதளம்(Symbian OS) பயன்படுத்தும் போன்களில் மட்டுமே சாத்தியம். முதலில் நமக்கு தேவை எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர்(Xplore) இவற்றை இங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர்(Xplore) நிறுவிய(Install) பின் C நீங்கள் அல்லது D டிரைவுக்கு(Drive) செல்ல வேண்டும். நீங்கள் எஸ் எம் எஸ்களை போன் மெமரியில்(Memory) சேமிப்பவராக இருந்தால் C டிரைவ், இல்லையெனில் D டிரைவ். டிரைவ்வில் நுழைந்த பின் சிஸ்டம்(System) போல்டருக்குள் சென்று பார்த்தால் மெயில்(mail) என்ற போல்டர் இருக்கும். அதனுள் 0010001_s,00100011_ s என்று பல கோப்புகள் இருக்கும். இவை எல்லாம் நீங்கள் அழித்த குறுந்தகவல்கள்(SMSes). இவற்றை டெக்ஸ்ட் வியுவர்(Text Viewer) உதவியுடன் பார்க்கலாம். டிஸ்கி:என்னதான் இதுக்கு நமக்கு உதவியாக இருந்தாலும் சிலர் இதனை தவறாக பயன்படுத்தலாம்.அதனால் உங்கள் அலைபேசிகளை நீங்கள் விற்கும் பொழுது பார்மட்(Format) செய்து விடுங்கள். |
27 Mar 2010
தொலைந்த எஸ் எம் எஸ் - மீட்பது எப்படி
Posted by Abdul Malik at 4:51 pm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment