12 Jun 2010

இதய நோய், ரத்த அழுத்தத்தை தடுக்கும் கைக்குத்தல் அரிசி

இதய நோய்கள்,உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்தை கைக்குத்தல் அரிசி
எனப்படும் பாலீஷ் செய்யப்படாத அரிசி உணவுகள் தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வு
தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் பிலெடல்பியாவில் உள்ளது டெம்பிள் பல்கலைக்கழகம்.அதன் மருத்துவ பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, பாலீஷ் செய்யப்படாத அரிசியால் உடல்நலனுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டது.

ஆன்டியோடென்சின் என்ற புரோட்டீன்தான் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.
அதன் காரணமாக இதய நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது. பாலீஷ் செய்யப்படாத அரிசியின்
மேல் உள்ள மெல்லிய சிகப்புத் தோல் அதைக் கட்டுப்படுத்துவது ஆய்வில் தெரிய வந்தது.

அரிசியின் மேலே படிந்திருக்கும் மெல்லிய தோல் சுபாலெரோன் எனப்படுகிறது.இது உமி
எனப்படும் மேல் பகுதிக்கும் வெள்ளை நிற அரிசிக்கும் இடையே உள்ளது.அதில் விரைவான
ஜீரண சக்திக்குத் தேவையான நாரிழை,உடல் நலனுக்கு முக்கியமான ஆலிகோசாச்ரைட் என்ற
பொருள் உள்ளது.

அந்த தோல் பகுதிதான் அரிசி உணவில் சத்தை அதிகரிக்கிறது. அரிசியை பாலீஷ்
செய்வதால் இந்த மெல்லிய தோல் நீக்கப்படுகிறது.அதில் செறிந்துள்ள சுபாலெரோன்
இல்லாமல் போய் விடுவதால் அரிசி உணவின் முக்கிய சத்துக்கள் கிடைக்காமல்
போகின்றன.

எனவே, நெல்லில் இருந்து அரிசியைப் பிரிக்கும்போது பாதி பாலீஷ் போடுவது நல்லது. அது உடலுக்கு நன்மை தரும்.

இதுபற்றி ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த எகுசி கூறுகையில்,

‘‘அரிசியின் மேல் உள்ள ஆன்டியோடென்சினை தனியாகப் பிரித்தெடுத்தோம்.அதனுடன் எத்தனால்,மெத்தனால்,எதில் அசேடட் ஆகிய ரசாயனங்களைச் சேர்த்து அதன் விளைவுகளை ஆராய்ந்தோம்.அது இதயப் பகுதியின் செல்களை மென்மையாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குவதை கண்டுபிடித்தோம். எனவே,பாலீஷ் செய்யப்படாத அல்லது பாதி பாலீஷ் செய்த அரிசி உணவுகளைச் சாப்பிடுவதால் இதய நோய், ரத்த அழுத்தத்தை தடுக்க முடியும்’’ன்றார்.


*மாரடைப்புக்கு மருந்தாகும் **“**ஸ்டெம்**” **செல்கள்** ***

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் இருந்து
ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்படுகின்றன.இந்த செல்கள் அதற்கென உள்ள வங்கிகளில் 0 டிகிரிக்கும் குறைவான தட்ப வெப்ப நிலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட நபருக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்படும்போது,இந்த “ஸ்டெம்” செல்கள் மூலம் குணப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையின் தற்போது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களையும் “ஸ்டெம்” செல்கள்
குணப்படுத் துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.லண்டனில் உள்ள பிரிஷ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இது பற்றிய ஆய்வை மேற் கொண்டனர்.

“ஸ்டெம்” செல்களை இதய நோயாளியின் உடலில் செலுத்திய ஒரு நாளில் அவை ரத்தக்குழாயில் உள்ள கோளாறுகளை சரி செய்து குணப்படுத்துவதுதெரிய வந்துள்ளது.

மேலும் இருதய அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கும் இது பெருமளவில் உதவிகரமாக
இருந்தது.இந்த ஆய்வின் மூலம் உலகில் உள்ள லட்சக்கணக்கான இருதய நோயாளிகள் குணமடைந்து நீண்ட நாள் வாழ்வார்கள்

1 comment:

Baggash said...

Assalamu Alaikkum.
Where can I get this "Hand Cleaned Rice" (Kaikkutthal Arisi?)
- Irfan.