7 Nov 2009

புதிதாக சார்ஜா  திருச்சி இடையே விமான சேவை

ஏர் அரேபியா நிறுவன அதிகாரிகள் திருச்சி விமான நிலைய வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அரபு நாடுகளை மையமாக வைத்து இயக்கப்படும் விமான நிறுவனம் ஏர் அரேபியா. இந்த விமான நிறுவனம் இந்தியாவில் டில்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கோவை, ஹைதரபாத் உட்பட பல்வேறு நகரங்களில் விமானங்களை இயக்கி வருகிறது.

புதிதாக சார்ஜா திருச்சி இடையே விமானங்களை இயக்க முடிவு செய்து இந்திய விமான நிலைய ஆணைய குழுமத்திடம் அனுமதி கோரியுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இம்மாத இறுதிக்குள் விமான சேவையை துவக்கவுள்ளனர்.

இந்நிலையில், ஏர் அரேபியா விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கொண்ட குழுவினர் திருச்சி விமான நிலையத்திலுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

குறிப்பாக, விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், அதிகாரிகள் பயணிகளை கையாளும் விதம், அடிப்படை வசதிகள், ஓடுதளத்தின் தன்மை, விமான நிறுத்துமிடம் போன்றவை குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் ஆய்வு செய்துவிட்டு சார்ஜா புறப்பட்டு சென்றனர்.

No comments: