26 Mar 2008

துபாயில் நடந்த சில சிரிப்பான நகைச்சுவைகள்

ஒரு மலையாளி தமிழ் நண்பரிடம் வழி கேட்க்கிறார் அண்ணா மச்சி மார்க்கெட் எவிட இண்டு? ( மீன் அங்காடி எங்கே உள்ளது? )
தமிழ் நண்பர்: மச்சி மார்க்கெட்டா? நேரா போயி... மனசிலாயா? சோத்துக்கை பக்கம் திரும்பு... மனசிலாயா? அங்க ஒரு ஈரானி கடை இருக்கும்... மனசிலாயா? அங்கேர்ந்து பீச்சாங்கை பக்கம் திரும்பு... மனசிலாயா? ஒரு பிரிட்ஜ் வரும்... மனசிலாயா? அந்த பிரிட்ஜ் தாண்டுணா மச்சி மார்க்கெட்தான்..! மனசிலாயா ?
மலையாளி: எல்லாம் மனசிலாயி. இந்த மனசிலாயியையும் தமிழ்லயே சொல்லி இருக்கலாம்.(மலையாளத்தில் மனசிலாயா என்பதற்கு தமிழில் புரிகிறதா என்பது பொருள்).

துபாயில் குறைந்த சம்பளத்தில் இருப்பவர்கள் உணவகங்களில் உணவருந்த கட்டுப்படியாவதில்லை. மற்றும் மலையாளிகளின் உணவகத்தில் உணவிலுள்ள கூடுதல் காரமும், எல்லா குழம்பிழும் நிறைய தேங்காய் போடுவதலும் நம்ம தமிழ் நாட்டு நண்பர்களுக்கு பிடிப்பதில்லை. அதனால் தனி மெஸ்தான் ஊரிலுள்ள சாப்பாடு போலவே கிடைக்கும். அப்படி துபாயில் ஒரு ருமில் உள்ள மெஸ்ஸில் நடந்த ஒரு நகைச்சுவை.
சமைப்பவர்: (எதையோ தேடிக் கொண்டே) சட்டியில சாப்பாடு இருக்கு! அவங்கவங்க தேவையான அளவு வீணாக்கம வச்சுக்கங்கப்பா.
சாப்பிட வந்தவர்கள்: சோறு வச்சுக்குறோம். தொட்டுக்க என்ன இருக்கு?சமைப்பவர்: கோழி வருத்திருக்கு. ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக்குங்கப்பா!சாப்பிட வந்தவர்கள்: அண்ணே! சாப்பாட்டுல பீடி ஒரு கட்டு கிடக்கு. ஆளுக்கு எத்தனை பீடி எடுத்துக்கனும்.
சமைப்பவர்: அட அதத்தாம்பா தேடிக்கிட்டிருக்கேன். சாப்பாடு செய்யும்போது உள்ளே விழுந்திருச்சு போலிருக்கு! (அசடு வழிகிறார்)
Posted by சுல்தான் குலாம்

No comments: