31 Oct 2007

01.11.2007 முதல் அறிமுகம்: இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை பி.எஸ்.என்.எல். செல்போனில் பேச பாதி கட்டணம்

சென்னை, அக். 31-
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சலுகைகள் வழங்க தவறியதில்லை. இந்த ஆண்டு தீபாவளி பண் டிகையை யொட்டி ஒரு அதிரடி சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
செல்போன் சந்தாரர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அளிக்கிறது. செல்போனில் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை பேச பாதிக் கட்டணம் நிர்ணயித்துள்ளது.
பி.எஸ்.என்.எல். ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு சந்தாதாரர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடையலாம். `அனந்த்' திட் டத்தில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. ஒரு வருடம் இன்கம்மிங் கால் வசதி கொண்ட `சுமோ' திட்டத்தில் உள்ளவர்களுக்கு இந்த சலுகை வழங்குவது குறித்து பரிசீலிக் கப்படுகிறது.
இந்த இரு திட்டங்களில் உள்ள சந்தாதாரர்கள் தவிர ஏனைய பி.எஸ்.என்.எல். சந்தா ரர்களுக்கு பாதி கட்டணம் திட்டம் பொருந்தும் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.
`நைட் காலிங்' என்று அழைக்க கூடிய இந்த சலுகை நாளை 1-ந் தேதி (நவம்பர்) முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இரவு 11 மணிக்கு மேல் செல் போனில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பேசினால் பாதிக்கட்டணம் மட்டுமே கணக்கிடப்படும்.

30 Oct 2007

நோக்கியா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்


உலகின் நம்பர் ஒன் செல்போன் தயாரிப்பாளர் நோக்கியா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே.இன்றைக்கும் செல்போன் தயாரிப்பில் உலகின் நம்பர் ஒன் நோக்கியாவே.உலகின் 36 சதவீத செல்போன்கள் அவர்களுடையது.இவர்களின் முதல் செல்போன் மாடல் Mobira Senator.1982-ல் வெளியானது.(மேலே படம்)

நோக்கியாவின் 1 பில்லியனான செல்போன் மாடல் Nokia 1100.இது நைஜீரியாவில் விற்க்கப்பட்டதாம். இதுவரை ஏறக்குறைய 400 மாடல்கள் வெளியிட்டுள்ளனர். முதல் ஹிட் 1994-ல் வெளியான 2100 மாடல்.20 மில்லியன்கள் விற்றன. உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன Nokia 3310 / 3330 மாடல் 126 மில்லியன்கள் விற்று சாதனை படைத்தன.இந்த 126 மில்லியன் போன்களையும் வரிசைப்படுத்தி அடுக்கினால் 13,500 கிலோமீட்டர் நீளம் போகுமாம்.2004-ல் நோக்கியாவால் 207.7 மில்லியன் போன்கள் தயாரிக்கப்பட்டது. அதாவது 6.5 நொடிகளுக்கு ஒரு போன். நோக்கியா போனில் SMS வந்தால் ஒலிக்கும் விஷேச ஒலி உண்மையில் SMS என்ற வார்த்தையின் மோர்ஸ்கோடாம்.(Morse code) .கேமரா கொண்ட போன்களின் ஆதிக்கம் இப்போது அதிகமாதலால் உலகளவில் இப்போதைக்கு அதிக டிஜிட்டல் கேமரா தயாரிப்பாளரும் இவர்களே. அதிக அளவில் திருடு போகும் செல்போன்களும் நோக்கியா செல்போன்களே."நோக்கியா ரிங்டோன்" என அறியப்படும் அந்த புகழ் பெற்ற ரிங்டோன் 19ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு ஸ்பானிய கிடார் இசைகலைஞரின் (Francisco Tárrega.) இசையை அடிப்படையாக கொண்டது.உலகின் முதல் GSM காலை பண்ணியவர் முன்னாள் பின்லாந்து பிரதமர் Harri Holkeri. இந்த அழைப்பு 1991-ல் ஹெல்சிங்கியில் ஒரு நோக்கியா போனை பயன்படுத்தி உண்டாக்கப்பட்டது.நோக்கியா கம்பனி போன்கள் தவிர பிற Digital Televisions, ADSL Modems, Wireless LAN interfaces, Telephone switches, GPS devices, Terrestrial trunked radios, இன்னும் Security Solutions தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. தலைமையகம் Nokianvirta ஆற்றின் கரையோரம் Keilaniemi, Espoo, Finland-ல் உள்ளது.சென்னை ஸ்ரீபெரும்புதூரிலுள்ள நோக்கியா தொழிலகம் நோக்கியாவின் 15 ஆவது உற்பத்திசாலை ஆகும்.

சில பெயர்களும் அதின் விளக்கங்களும்

ICICI-ன் விரிவாக்கம் ரொம்ப பேருக்கு தெரிவதில்லை.
What about YAHOO?
கீழே சில பெயர்களும் அதின் விளக்கங்களும்.
சில சுவாரஸ்யமானவை.
Nissan-ன் விரிவாக்கம் Nippon Sangyo. Nissan ஒரு யூத மாதத்தின் பெயரும் கூட.
Yahoo-வின் விரிவாக்கம் Yet Another Hierarchy of Officious Oracle.
ADIDAS-ன் விரிவாக்கம் All Day I Dream About Sports (உண்மையில் அது அதன் நிறுவனர் பெயரில் உண்டான பெயர் Adolf (Adi) Dasler).
STAR TV- ன் விரிவாக்கம் Satellite Television Asian Region TV.
ICICI-ன் விரிவாக்கம் Industrial credit and Investments Corporation of India.
Oracle-என்றால் ஜோதிடம் கூறல் எனப் பொருள்.
COMPUTER- ன் விரிவாக்கம் Commonly Operated Machine Particularly Used for Trade Education and Research.
VIRUS- ன் விரிவாக்கம் Vital Information Resource Under Siege.
Wipro- ன் விரிவாக்கம் Western India Products.
googolplex-யிலிருந்து உருவாக்கப்பட்ட googol என்ற ஒரிஜினல் பெயரை,டொமைன் ரெஜிஸ்டர் பண்ணும் போது ஸ்பெல்லிங் தவறுதலாக இட்டப்படியால் இன்றைய google உருவானது.
MICROcomputer SOFTware தான் MicroSoft.முதலில் Micro-Soft என்று அழைக்கப்பட்டு பின் - நீக்கப்பட்டு வெறும் MicroSoft ஆனது.
IBM-ன் விரிவாக்கம் International Business Machines.
Pepsi-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1937. ஆனால்Coca-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1893.
HSBC-ன் விரிவாக்கம் Hongkong and Shanghai Bank Of Commerce.
HDFC-ன் விரிவாக்கம் Housing Development Finance Corporation Limited.
MRF-ன் விரிவாக்கம் Madras Rubber Factory.
TVS-ன் விரிவாக்கம் TV Sundram Iyengar and Sons Limited.
Java என்பது ஜாவா தீவில் உற்பத்தியாகும் ஒரு காபியின் பெயர்.
Linux செயலி Linus Torvalds உருவாக்கியதால் அப்பெயர் பெற்றது.
Cisco அதன் பிறப்பிடம் San Francisco -வை பெயராக கொண்டது.
KPMG என்பது நான்கு கம்பனிகளின் இணைப்பு.அதாவது K stands for Klynveld ,P is for Peat, M stands for Marwick,G is for Goerdeler.
Nokia-தனது பிறப்பிடமான பின்லாந்தின் ஒரு கிராமத்தின் பெயரை தன் பெயராக கொண்டுள்ளது.
இரு நிறுவனங்கள் Tokyo Denki யும் Shibaura Seisakusho யும் இணந்து புது நிறுவனம் Tokyo Shibaura Denki உருவான்து.அது தான் இன்றைய Toshiba.
நிறுவனர்கள் Bill Hewlett மற்றும் Dave Packard-ன் பெயரைக் கொண்டது HP.
Dell அதன் நிறுவனர் Michael Dell-ன் பெயரைக் கொண்டுள்ளது.

கூகுளில் தமிழ் மொழிமாற்றி வந்துள்ளது.

கூகுளில் தமிழ் மொழிமாற்றி வந்துள்ளது.கீழ்காணும் சுட்டியைச் சொடுக்குங்கள்.
http://www.google. com/transliterat e/indic/Tamil
நாம் ஆங்கிலத்தில் தட்டச்சுவதை இ.கலப்பை போலதமிழில் தருகிறது.ஒரு தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் அடித்து முடிந்ததும் ஸ்பேஸ் பாரை அழுத்தினால் அது தமிழ் வார்த்தையாக மாறிவிடுகிறது. இந்த வசதியை உபயோகிக்க ஆன்லைனில் இருப்பது அவசியம். மேலும் இது பற்றிய விவரங்கள் அறிய அந்த transliterate பக்கத்தின் கீழேயுள்ள "More" என்ற சுட்டியைச் சொடுக்குங்கள்.
http://www.google.com/transliterate/indic/Tamil

28 Oct 2007

தொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவருக்கு உதவித் தொகை

தொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவருக்கு உதவித் தொகை சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னை, அக்.24: தொழில் மற்றும் தொழில்நுட்ப படிப்பில் பட்டப்படிப்பு,பட்ட மேற்படிப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்விஉதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து,சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.ஜெயா விடுத்துள்ள அறிக்கை:தொழில் மற்றும் தொழில் நுட்ப படிப்பில் பட்டப்படிப்பு படிக்கும்மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு உதவி தொகை வழங்கி வருகிறது.இந்த திட்டத்தின் கீழ், 366 முஸ்லிம்கள், 399 கிறிஸ்தவர்கள், 1 சீக்கியர், 1 புத்தமதத்தினர் ஆகியோருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.பெற்றோர் அல்லது பாதுகாவலர் எல்லா வழிகளிலும் ஆண்டுக்கு ரூ.2.50லட்சத்துக்கு மிகாமல் வருவாய் ஈட்ட வேண்டும். தொழில் படிப்புக்காகநுழைவுத் தேர்வில் தேர்ச்சி அல்லது பிளஸ் 2 படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வி உதவித் தொகை வழங்குவதில் 30 சதவீதம்மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.சென்னை ஐ.ஐ.டி, திருச்சி என்.ஐ.டி, காஞ்சிபுரம் ஐ.ஐ.ஐ.டி, ஆகிய கல்விநிறுவனங்களில் தொழில் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு செலுத்தியகல்விக் கட்டணத் தொகை முழுமையாக திரும்ப வழங்கப்படும். மேலும்,விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு ஒன்றுக்குபராமரிப்பு படியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேற்கண்ட 3 கல்வி நிறுவனங்களில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு கல்விஉதவித் தொகை விண்ணப்பங்கள் முதலில் வழங்கப்படும். பின்னர், மற்ற தொழில்கல்வி நிறுவனங்களில் இருந்து வரப்பெறும் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள்பரிசீலிக்கப்படும். மற்ற தொழில் கல்வி நிறுவனங்களில் படிக்கும்சிறுபான்மையின மாணவ, மாணவிகள் சிறுபான்மையினர் விடுதியில் தங்கிபடித்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மற்ற மாணவ,மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். சிறுபான்மை மாணவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வருவாய் சான்றைநீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் வழங்க வேண்டும். பெற்றோர் வேலையில்இருந்தால் அந்த நிறுவனத்தில் இருந்து வருவாய் சான்று வாங்கித்தரவேண்டும். உதவித் தொகை பெற தகுதி உள்ள மாணவர்கள் குறிப்பிட்ட சான்றுகளுடன், தங்கள் கல்வி நிறுவனம் மூலம் சிறுபான்மை நல ஆணையம் மற்றும்மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், 807, அண்ணா சாலை, 5வது தளம், சென்னை 2 என்ற முகவரிக்கு நாளைக்குள்(25ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை www.minorityaffairs .gov.in/newsite என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு ஆட்சியர் ஜெயாதெரிவித்துள்ளார்.

23 Oct 2007

ஏஜெண்டுகள் மூலம் ஆளெடுக்க யு.ஏ.இ. தடை

துபாய்:
23.10.2007

வேலைவாய்ப்பு ஏஜென்டுகள் மூலம் வளைகுடா நாடுகளில் வேலைக்கு ஆள் எடுக்க தடை விதிக்கப்படவுள்ளது. இதுதொடர்பான புதிய கட்டுப்பாடுகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுக்கவுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் அலி பின் அப்துல்லா அல் காபிகூறியுள்ளார்.இதுகுறித்து காபி கூறுகையில், பல்வேறு நாடுகளிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் ஏஜென்டுகளால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள், மோசடி செய்யப்படுகிறார்கள், துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.இதைத்த தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானதாக, ஏஜென்டுகள் மூலம் வேலைக்கு ஆள் எடுப்பதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஏஜென்டுகளின் பொய்யான வாக்குறுதிகள், உறுதிகளை நம்பி ஏமாறும் தொழிலாளர்கள் நிலை மொத்தமாக மாறும்.அனைத்து வளைகுடா நாடுகளின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் இதுகுறித்து விரிவாகப் பேசி விரைவில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றார் காபி.

22 Oct 2007

ஊழியர்களின் சம்பளம் வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்

ஊழியர்களின் சம்பளம் வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்ஐக்கியஅரபு எமிரேட்ஸ் நடவடிக்கை

துபாய், அக்.22-
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, வருகிற ஜனவரி மாதம் முதல் ஊழியர்களின் சம்பளங்களை வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யப்படவேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. அதோடு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளது.
சட்டத்துக்கு புறம்பான ஊழியர்களை கம்பெனிகள் வேலைக்கு வைத்துக்கொள்ளக்கூடாது. அப்படி வைத்துக்கொணடால் அந்த கம்பெனிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். மற்றும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டத்துக்கு புறம்பான ஊழியர்களை கண்டுபிடித்து வெளியேற்றுவதற்காக அதிகாரிகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்க இருக்கிறோம். வருகிற 2-ந்தேதி முதல் சட்டத்துக்கு புறம்பான ஊழியர்களின் வேட்டை அதிக அளவில் நடத்தப்படும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

21 Oct 2007

புத்தகத்தில் ரகசிய அறை அமைத்து செல்போன் கொண்டு வந்த மாணவி


நாகர்கோவில், அக்.19-
புத்தகத்துக்குள் ரகசிய அறை அமைத்து செல்போனை பள்ளிக்கு கொண்டு வந்த மாணவி எஸ்.எம்.எஸ். அனுப்பியபோது பிடிபட்டார்.
சுற்றறிக்கை
நவீன தகவல் தொடர்பு சாதனங்களில் ஒன்றான செல்போன்கள் பள்ளிக்கூட மாணவர்களின் படிப்பிற்கு பெரும் இடைïறாக இருக்கின்றன.
இதனால், தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வர தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் ஜெகநாதன், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் இது குறித்து ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளிக் கூடத்துக்கு மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வராமலிருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும், மீறி கொண்டு வருபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதன் அவசியம் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வருகிறார்களா? என்பதை பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
நேற்று நாகர்கோவிலில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வந்திருக்கிறார்களா? என்று ஆசிரியர்கள் தீவிரசோதனை நடத்தினார்கள். அப்போது சில மாணவர்கள் அரசு உத்தரவை மீறி செல்போன் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் அழைத்து பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக் கூடாது என எச்சரித்து அனுப்பினார்கள்.
மாணவியின் திருவிளையாடல்
ஒரு பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது எல்லா மாணவிகளும் ஆசிரியர் பாடம் நடத்துவதையே கவனித்துக் கொண்டிருக்க ஒரேயொரு மாணவி மட்டும் தலையைக் குனிந்தவாறு என்னவோ செய்து கொண்டு இருந்தார். வெகு நேரமாக அந்த மாணவி அதே நிலையில் இருந்ததால் ஆசிரியர் சந்தேகமடைந்து அந்த மாணவியின் அருகில் சென்றார். ஆசிரியர் அருகில் வந்தபோதும் கூட அது தெரியாமல், மாணவி தொடர்ந்து தலையைக் குனிந்தபடியே இருந்தார். அந்த மாணவி தனது மடியில் ஒரு புத்தகத்தை வைத்தபடி படிப்பதுபோல பாவனை செய்து கொண்டிருந்தார். இதனால் அருகில் வந்த ஆசிரியரும் முதலில் அந்த மாணவியின் மீது சந்தேகம் கொள்ளவில்லை. அந்த மாணவியை ஆசிரியர் தொடர்ந்து கண்காணித்தார். அப்போதுதான், அவர் அந்தப் புத்தகத்திற்குள், செல்போனை வைத்தும் கொள்ளும் அளவிற்கு பக்கங்களை கச்சிதமாக வெட்டியெடுத்து அதற்குள் ரகசிய அறை ஒன்றை அமைத்திருப்பதையும், அதற்குள் ஒரு செல்போனை மறைத்து வைத்து அதில் எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது. இதைத் பார்த்ததும் அந்த ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அரசின் உத்தரவிற்கு இப்படியும் கூட ஒருவர் டிமிக்கி கொடுப்பாரா? என வேதனையடைந்தார்.
அந்த மாணவியை கையும் களவுமாக பிடித்த ஆசிரியர், அவரை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார். அப்போது மாணவி `இனிமேல் செல்போனை பள்ளிக்கு கொண்டு வரமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்' என்று அழுதபடியே கேட்டுக் கொண்டார். தலைமை ஆசிரியரும், மாணவி முதல் முறையாக தவறு செய்திருக்கிறார் என்பதால் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் அந்தப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

18 Oct 2007

தத்துவம்

Busலநீ ஏறினாலும் Bus உன் மேலஏறினாலும் Ticket வாங்க போறதுநீதான்.

Chair ஒடைஞ்சா உட்காரமுடியாது கட்டில் ஒடைஞ்சாபடுக்க முடியாது ஆனாமுட்டை ஒடைஞ்சா தான் Omlet போடமுடியும்.

காக்கா என்ன தான்கறுப்பா இருந்தாலும் அதுபோடுற முட்டை வெள்ளைமுட்டை என்ன தான் வெள்ளையாஇருந்தாலும் அதுக்குள்ளஇருக்குற காக்கா கறுப்புதான்

எழுதியது மகேஸ்

16 Oct 2007

நீங்க கல்ஃப்லெ வேலெ செய்யறீங்களா?

ஆண்: "டாக்டர் நான் ஒரு மாச லீவில் வந்திருக்கேன். எனக்கு ஒரு முழு செக்கப் செய்யணும்."
டாக்டர்: "நீங்க எதிர்லெ இருக்கற டாக்டர்கிட்டே போயிருக்கணும்.அந்த போர்டெ பாருங்க"
ஆண்: "இல்லெ டாக்டர், நான் உங்களெத்தான் பார்க்கவந்தேன்"
டாக்டர்: "பாருங்க சார், நான் வெட்ரினரி டாக்டர். விலங்குகளுக்கு மட்டும் தான் மருத்துவம் பார்க்கிறேன். மனுசங்களுக்கல்ல."
ஆண்: "எனக்கு அது நல்லா தெரியும் டாக்டர். அதனால் தான் நான் உங்களிடம் வந்திருக்கேன்"
டாக்டர்: "என்னங்க சார் புரியாத ஆளா இருக்கீங்க. நீங்கள் என்னை போல மனிதர். பேசுகிறீர்கள், சிந்திக்கிறீர்கள், நீங்கள் மிருகமல்ல. என்னால் முடியாது."
ஆண்: "எனக்கு தெரியும் டாக்டர், நான் மனிதன் தான். ஆனா மொதல்லெ நீங்க என்னுடைய பிரச்சினைகளை கொஞ்சம் தயவுசெய்து கேளுங்களேன்"
டாக்டர்: "சரி சரி சொல்லுங்க"
ஆண்: "நான் தூங்கும்போது நாயெ போல எச்சரிக்கையா தூங்கிகிட்டே என்னுடைய ஆபீஸ் வேலெ பத்தியே யோசிச்சிகிட்டிருப்பேன். ""காலையில் குதிரையெ போல எழுந்திருப்பேன்.""காக்கா குளியல் குளிப்பேன்""மான் போல ஆபீசுக்கு ஓடுவேன்""முழுநாளும் கழுதையெ போல வேலை செய்வேன்""இடைவிடாமெ பதினோரு மாசம் எருது போல வேலை வேலைன்னு சுத்திகிட்டே இருப்பேன்""எனக்கு மேலெ இருக்கறவங்களுக்கு முன்னாலெ வாலெ ஆட்டிகிட்டே இருப்பேன்""என்னிக்காவது நேரம் கிடெச்சா என் குழந்தைங்க கூட குரங்கு போல சேட்டை செஞ்சி விளையாடுவேன்""என் பொண்டாட்டிக்கு முன்னாலெ முயல் மாதிரி ஒடுங்குவேன்"
டாக்டர்: "நீங்க கல்ஃப்லெ வேலெ செய்யறீங்களா?"
ஆண்: "ஆமாம் டாக்டர்!. "எப்படி கண்டுபிடிச்சீங்க?"
டாக்டர்: "இவ்வளவு பெருசா சொல்றதுக்கு பதிலா மொதல்லெயே கல்ஃப்லெ வேலெ செய்யறேன்னு சொல்லியிருக்கலாமில்லெ." "வாங்க, நீங்க சரியான இடத்துக்கு தான் வந்திருக்கீங்க!" "வேறெ யாரும் என்னெ விட நல்லா உங்களுக்கு சிகிச்சை தர முடியாது"
நன்றி: அனுசுயா ஆங்கிலத்திலிருந்து