25 Nov 2009

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?

நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,

விபரங்களுக்கு Click here

http://www.google.com/support/websearch/bin/answer.py?hl=en&answer=35892

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்
பிறகு

பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்தான் அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ......

20 Nov 2009

சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை

இன்று உணவு உண்பதென்பது போதைப் பொருள் போலாகிவிட்டது. இனிப்புகள், பொரித்த உணவுகள், மாமிச வகைகள் போன்றவற்றிற்கு நாக்கு அடிமையாகிவிட்டது. அத்துடன் நவீன சமையல் முறைகள் கண்களைக் கவர்கின்றன.

நாசியைத் துளைத்து வாயில் எச்சில் ஊற வைக்கின்றன. சுவையும் அதிகம். போதாக் குறைக்கு காதும் தனது பங்கிற்கு ஆசையைத் தூண்டுகின்றது.

உதாரணமாக கொத்து ரொட்டி அடிப்பது காதில் விழுந்ததும் சிலருக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை பசியற்ற போதும் எழுகிறது. நாம் ஏன் உணவு உண்கிறோம்?

நமது நாளந்த வேலைகள் மற்றும் செயற்பாடுகளுக்கான சக்தியைப் பெறுவதற்காகவே எமக்கு உணவு தேவைப்படுகிறது. நோய் வாய்ப்படாமல் தடுப்பதற்கும், நோயினால் பழுதடைந்த உடற் கலங்களை சீர்திருத்தம் செய்யவும் உணவு தேவை. அத்துடன் வளரும் இளம் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கும் உணவு அத்தியாவசியமாகும்.

ஆனால் இன்று உணவானது உடற் தேவைக்காக என்றில்லாது ஆசைக்காக என மாறிவிட்டது. தேவைக்கு மீறி உண்பதால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல நோய்களும் ஆரோக்கியக் கேடுகளும் மனிதனை சிமிக்கிடாமல் கொல்லுகின்றன.

ஆரோக்கியமான உணவு முறை இவை வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவு முறை முக்கியமானதாகும். உணவின் அளவு ஆரோக்கியமான உணவின் முதல் அம்சம் உணவின் அளவாகும். எத்தகைய நல்ல உணவானாலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான்.

இதனால்தான் சென்னை இருதய நோய் நிபுணரான சி.சொக்கலிங்கம். அரை வயிற்றிற்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றை நீரினால் நிரப்புங்கள். மிகுதி கால் வயிற்றை காலியாகவே வைத்திருங்கள் என்று சொன்னார்.

வெற்றுக் கலோரி வேண்டாம் இரண்டாவது அம்சம் உணவில் வெற்றுக் கலோரி நிறைந்தவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான போஸாக்குள்ள உணவுகளையே உண்பதாகும்.

எவை ஆரோக்கியமானவை? உங்கள் உணவின் பெரும் பகுதி பழவகைகள், காய்கறிகள், விதைகள் ஆகியவனவாக இருக்க வேண்டும். அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற அனைத்துத் தானிய வகைகளையும் தவிடு நீக்காமல் சாப்பிடுங்கள். கொழுப்பு நீக்கிய அல்லது குறைந்தளவு கொழுப்பு மட்டுமே உள்ள பாலுணவு வகைகளையே உணவில் சேருங்கள்.

ஆரோக்கியமான உணவுமுறை என்பது நல்ல உணவுகளை அதிகம் சேர்ப்பது மட்டுமல்ல தவறான உணவுகளை முற்றாகத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவதும் ஆகும். கோழி போன்ற பறவையின இறைச்சிகளை உண்கொள்வதுடன், ஆடு, மாடு, பன்றி போன்ற கொழுப்புள்ள இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். அல்லது அளவோடு உட்கொள்ள வேண்டும்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், இனிப்பு ஊட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். உணவில் உப்பை மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும். இவ்வாறான உணவு முறையைக் கைக் கொண்டால் மேற் கூறிய நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது பலரும் அறிந்த சேதியாகும்.

புதிய ஆய்வு ஆனால் இப்பபொழுது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வானது சிறுநீரகக் கற்கள் உண்டாவதையும் தடுக்கும் என்கிறது. கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேரை உள்ளடக்கிய மூன்று வெவ்வேறு ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு எட்டப்பட்ட முடிவு இதுவாகும்.

Brigham and Women's Hospital லில் உள்ள

Maine Medical Center சேர்ந்த டொக்டர் எரிக் டைலர் மற்றும் உதவியாளர்களும் செய்த ஆய்வு இதுவாகும். மேலும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கு காரணமாகக் கூடிய ஒருவரின் வயது, எடை, அருந்தும் நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் எடுத்தபோதும் அதற்கு மேலாக ஆரோக்கிய உணவானது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறதாம்.

எமது சூழலில் அதிகம் எனக்கு சிறுநீரகக் கற்கள் இல்லையே நான் ஏன் கவலைப்பட வேண்டும் என எண்ணாதீர்கள். எமது நாட்டு சூழலில் பலருக்கு இது ஏற்படுகிறது. இவை பொதுவாக கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்துவதால் நோயாளர்களை அச்சம் கொள்ள வைக்கிறது.

வலி என்பதற்கு மேலாக உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக வழுவல் போன்ற பல பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் ஆதலால் அதிக கவனத்தில் எடுப்பது அவசியம்.

சிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியில் முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்வதே.

-எம்.கே.முருகானந்தன்.

13 Nov 2009

சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன.

அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.
சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது.

கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

1. கால்கள்:

சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

2. சிறுநீரகம்:

சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

3. வயிறு, குடல்:

அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.

4. மூக்கு:

சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.
5. பல்,ஈறுகள்:

பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.

6. கண்கள்:

கண்களில் கட்ட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.

7. காது:

காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.
இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான் சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.

தொற்றுக்களை தடுக்க:

1. சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

2. ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.

3. ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.

4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி

5. தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.

6. தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.

7. வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.

8. சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.
9. சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

10. வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

11. சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.

12. பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.

13. கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

14. மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.

11 Nov 2009

மாணவர்களை சீரழிக்கும் போதை கும்பல்

சென்னையில் அடையாறு, அண்ணாநகரில் படிக்கும் "பெரிய இடத்து' மாணவர்களிடம், ஒரு கும்பல் நண்பர்களாக பழகி, அவர்களுக்கு இலவசமாக போதை வஸ்துகளை சப்ளை செய்கிறது.

"சிலிப்பரி ஸ்லோப்' என்ற ரகசிய பெயரில் செயல்படும், அக்கும்பலின் பின்னணியில் நக்சலைட்களுக்கு தொடர்பிருப்பதாக, "பகீர்' தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில், "கஞ்சா, அபின், பிரவுன் சுகர், ஓபியம், குட்கா, கேட்டமைன்' என பல்வேறு வகையான போதை வஸ்துகளை விற்பனை செய்யும் கும்பல், திரைமறைவில் செயல்பட்டு வருகிறது.

இதில், கஞ்சா கும்பலின் நடமாட்டத்தை ரயில்வே சுரங்க பாலங்கள், கூவம் ஆற்று கரையோரங்களில் அதிகம் காணலாம். கீழ்ப்பாக்கம் டி.பி.சத்திரத்தில், இரண்டு கும்பல்கள் கஞ்சா வியாபாரத்தில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறக்கிறது.

இக்கும்பலிடம் வேலை பார்க்கும் அடியாட்கள், தொழில் போட்டியில் பழிக்கு பழியாக எதிர் கும்பலை வெட்டி கொலை செய்வது சகஜமாகி விட்டது.ஆந்திராவிலிருந்து ரயிலில் கஞ்சாவை இறக்குமதி செய்யும் கும்பல், அவற்றை பிரித்து அடியாட்களிடம் கொடுத்தனுப்பும்.

அடியாட்களுக்கு குவாட்டர், பிரியாணியுடன் தினமும் 200 ரூபாய் சம்பளம் கொடுக்கின்றனர். இவர்கள், கஞ்சாவை சாக்லெட், ஐஸ்கிரீமில் கலந்து விற்பனை செய்கின்றனர். அண்ணாநகர், திருமங்கலம் பகுதியில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் அருகே இக்கும்பலின் நடமாட்டம் இருந்து வருகிறது.

கீழ்மட்டத்தில் உள்ள கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களை இலக்காக வைத்து கஞ்சா கும்பல் செயல்பட்டு வருகிறது. இதற்கு அடுத்ததாக, பணக்கார இடத்து மாணவர்களை, "சிலிப்பரி ஸ்லோப்' என்ற ரகசிய பெயரில் செயல்படும் கும்பல் லாவகமாக வளைத்து வருகிறது.

அடையாறு, அண்ணாநகர் பகுதிகளில் உள்ள பணக்கார வீட்டு மாணவர்கள் படிக்கும் பள்ளிகளே கும்பலின், "டார்கெட்'டாக இருக்கிறது.
வெளிநாட்டில் உள்ள பயங்கரவாதிகள், ஆயுதங்களை வாங்கிக் குவிக்க அதிகளவில் பணம் தேவைப்படுகிறது. அதனால், பயங்கரவாதிகள் போதை வஸ்துகளை டன் கணக்கில் வாங்கி இருப்பு வைக்கின்றனர்.

காடு, மலைக் குன்றில் பதுங்கி வாழும் பயங்கரவாதிகளுக்கு, மக்களோடு நெருங்கிய தொடர்பு கிடையாது. ஆனால், வட மாநிலங்களில் உள்ள நக்சலைட்களுக்கு மக்களோடு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

இதை அறிந்த பயங்கரவாதிகள், போதை வஸ்துகளை நக்சலைட்கள் மூலமாக உள்ளூர் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். சென்னையில் உள்ள, "ஹைடெக்' போதை கும்பல், வடமாநில நக்சலைட்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

போதை வஸ்துக்களை, ஒரு கிராம் அளவிற்கு பணக்கார வீட்டு மாணவர்களுக்கு வழங்குகின்றனர். ஏதாவது ஒரு மாணவரிடம் நட்பு ரீதியில் பழகும் கும்பல், "நண்பர் ஒருவர் இலவசமாக கொடுத்தார். நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள்' என கொடுக்கிறது.

பல மணி நேரம் உச்சகட்ட போதையில் ஆழ்த்துவதால், அதை பயன்படுத்தும் மாணவர், அவரது நண்பர்களுக்கும் போதை கும்பலின் நண்பரை அறிமுகப்படுத்துகிறார். இந்த, "நெட் வொர்க்கில்' அடையாறு ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகரில் உள்ள பணக்கார வாலிபர்கள் பலர் சிக்கியுள்ளனர். மாணவர்களை போதைக்கு அடிமையாக்கியதும், அதன்பின் இலவசமாக தருவதை நிறுத்தி விடுகின்றனர்.

போதை வஸ்து பழக்கத்தை விட முடியாத மாணவர்கள், அக்கும்பலை அணுகி போதை வஸ்துக்களை வாங்குகின்றனர். போதை வஸ்து அடிமையால், மாணவர்கள் தவறான பாதைகளில் செல்ல நேரிடுகிறது.

மாணவிகளுக்கு போதை வஸ்துகளை இலவசமாக கொடுத்து, பல மணி நேர ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்த்துகின்றனர். சுய நினைவில்லாமல் இருக்கும் மாணவிகளை, "புளூ பிலிம்' எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி காசு பார்க்கும் அதிர்ச்சி தகவலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இப்பிரச்னை குறித்து, தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் கூறியதாவது: போதை கும்பலிடம் சிக்கி, வாழ்க்கையின் எல்லைக்கோடு வரை சென்றவர்கள், மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சை பெற்று பொது வாழ்வுக்கு திரும்புகின்றனர்.

இவர்கள் பற்றிய விவரம் போலீசுக்கு தெரிந்தால் தான், போதை கும்பல் பற்றிய தகவலை சேகரிக்க முடியும். போதைக்கு அடிமையாகிறவர்கள், போலீசில் புகார் கொடுப்பதில்லை.போதை கும்பலின் "ஆணி வேர்' யார் என்பது, கடைசி வரை போலீசுக்கு தெரியாமல் போய் விடுகிறது.

தமிழகத்தில் போலீசார் கைது செய்வதெல்லாம், போதை கும்பலின், "ஏஜென்டு'கள் தான். முக்கிய நபர்கள் யாருமே போலீசில் சிக்குவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

போதை வஸ்துக்கள் விற்கும் நபர்களை பிடிப்பதோடு மட்டுமில்லாமல், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

- Dinamalar

10 Nov 2009

மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும்

உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா.

அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன் ரிங் ஆக இருக்கலாம். இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள்.

ஆர்வத்தில் மிஸ்டு கால் எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டால் முதல் நாளில் எதிர்முனை மவுனமாகி இருக்கும்.

2-வது நாளில் அதே... நேரத்திற்கு மீண்டும் அந்த ஒரு நொடி ரிங் வரும். மீண்டும் ஆர்வத்தில் நீங்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மீண்டும் எதிர்முனை மவுனமாக இருக்கும்.

3-வது நாளும் நீங்கள் அந்த மிஸ்டு கால் எண்ணை தொடர்பு கொண்டால் வலையில் மீன் விழுந்து விட்டது என அந்த செக்ஸ் கொக்கு துள்ளி குதித்து விடும். ஆற்றில் மீனுக்காக கொக்கு தண்ணீருக்குள் தலையை ஆழ்த்தி வைத்து காத்திருந்து மீன் வந்ததும் லபக்கென்று பிடிக்கும் என்பதால் இந்த ஆசாமிகளை செக்ஸ் கொக்குகள் என்று அழைக்கிறார்கள்.

பெயரை மாற்றி ஊரை மாற்றி தொழிலை மாற்றி பேச்சை தொடங்கும் செக்ஸ் கொக்குகள் மெது மெதுவாக அந்தரங்க பேச்சை தொடங்கும். செக்ஸ் கொக்குவின் வலையில் திருமணமாகாத பெண் என்றால்... காதல் வலைவரிக்கும்.

திருமணமான பெண் என்றால் கள்ளக்காதலை தொடங்கும். சில செக்ஸ் கொக்குகள் வெறும் போனிலேயே ஆபாசமாக பேசி இன்பம் அடைந்து கொள்வார்கள். சில செக்ஸ் கொக்குகள் பெண்களை தங்கள் இருப்பிடம் தேடி வரவழைத்து நாசப்படுத்தி விடுவார்கள்.

இப்படி செக்ஸ் கொக்குகளிடம் ஏமாந்து கற்பையும், உயிரையும் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திருச்சி போலீசார் கூறுகின்றனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ஸ்டெல்லாமேரி (வயது30). என்பவரின் கணவர், இறந்து விட்டார். ஒரு மகன், மாமியாருடன் ஸ்டெல்லா மேரி தனியாக வசித்து வந்தார்.

ஒரு நாள் ஸ்டெல்லா மேரியின் செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்டு ஸ்டெல்லா மேரி ஹலோ என்றார் பதில் ஏதும் இல்லை. 2-வது நாள் 3-வது நாள் இதே போன்று மிஸ்டு கால் வருவதும் ஸ்டெல்லா மேரி தொடர்பு கொண்டால் எதிர் முனை அமைதியாக இருப்பதும் தொடர்ந்தது.

அது மீனுக்காக செக்ஸ் வெறியில் காத்திருக்கும் கொக்குவின் வலை என்று தெரியாமல் ஸ்டெல்லா மேரி ஒரு முறை போன் செய்து பேசினார். அப்போதுதான் செக்ஸ் கொக்கு தன்னை செல்வராஜ், நாகை என அறிமுகம் செய்து கொண்டது தான் ஒரு பாதிரியார் என கூறிக்கொண்டது.

இந்த நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் பாதிரியார் செல்வராஜ் தலையில் அடிபட்ட நிலையில் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசார் அவரது செல்போனில் பதிவாகியிருந்த ஒரு நம்பருடன் பாதிரியார் இரவில் அதிக நேரம் பேசியிருப்பதை கண்டுபிடித்தனர். அதை விசாரித்த போது திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டெல்லா மேரியின் நெம்பர் என தெரிய வந்தது.

ஸ்டெல்லா மேரியை பிடித்து விசாரித்தனர். அவர் பாதிரியாரை கொன்றதை ஒப்புக்கொண்டார். மிஸ்டு கால் மூலம் அறிமுகமான பாதிரியார் செல்வராஜ், ஸ்டெல்லா மேரியை அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து ஜாலியாக இருந்து உள்ளார். கணவனை இழந்த ஸ்டெல்லா மேரி தன்னை பாதிரியார் திருமணம் செய்வார் என நம்பி உடலை ஒப்படைத்து உள்ளார்.

ஆனால் செக்ஸ் கொக்கான பாதிரியார் செல்வராஜுக்கு ஸ்டெல்லா மேரியின் உடல் மேல் மட்டும் ஆசை. சம்பவத்தன்று போதையில் ஸ்டெல்லா மேரியை மீண்டும் மீண்டும் உறவுக்கு அழைத்து சித்ரவதை செய்தார். ஆத்திரத்தில் செல்வராஜை ஸ்டெல்லா மேரி தள்ளிவிட.. போதையில் கீழே விழுந்த செல்வராஜ் இறந்து விட்டார்.

இப்போது செக்ஸ் கொக்குவிடம் மாட்டிய ஸ்டெல்லா மேரி... இப்போது சிறைக்கும் கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.

பீம நகரை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் அவர். அவருக்கும் இரவில் ஒரு செக்ஸ் கொக்குவிடம் இருந்து அடிக்கடி மிஸ்டு கால் வந்தது. அவரும் பேசினார். நாளடைவில் அந்த பெண்ணை செக்ஸ் கொக்கு உறவுக்கு அழைத்து டார்ச்சர் செய்ய கணவரிடம் தைரியமாக அவள் கூறி விட்டாள்.

பீமநகரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த செக்ஸ் கொக்குவை கண்டுபிடித்து நாலு சாத்து சாத்தினார் கணவர். ஒரு முறை அந்த கணவர் ஈ.சி.ரீ சார்ஜ் முறையில் பீமநகர் கடையில் தனது மனைவியின் செல்போனுக்கு சார்ஜ் செய்து உள்ளார்.

அப்போது அந்த நம்பரை குறித்து வைத்துக் கொண்டு செக்ஸ் கொக்கு இரவில் அடிக்கடி மனைவியிடம் பேசி வலையில் வீழ்த்த துடித்தது தெரிய வந்தது. நல்ல வேளையாக அந்த முஸ்லீம் பெண் செக்ஸ் கொக்குவிடம் இருந்து தப்பி விட்டார்.

இதுபோன்ற செக்ஸ் கொக்குவிடம் சமீபத்தில் சிக்கி பிணமானவர் அன்பரசி. 21 வயதான லால்குடி அன்பரசி, திருமணமான 3 மாதத்தில் தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு காலை தொடர்பு கொண்டு உள்ளார். எதிர்முனையில் முத்தரசநல்லூரில் இருந்து அங்கமுத்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டது அந்த செக்ஸ் கொக்கு.

ஏற்கனவே நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்த செக்ஸ் கொக்கு அங்கமுத்து நண்பர்கள் மூலம் கிடைத்த அன்பரசியின் செல்போனுக்கு பேசி அவளை வலையில் வீழ்த்தியது.

கடைசியில் புதுக்கணவரை விட செக்ஸ் கொக்கு அங்கமுத்து கொடுத்த சுகம் பிடித்து விட... கணவரை உதறிவிட்டு அங்கமுத்து வீட்டிற்கே வந்தாள் அன்பரசி. காதலி நந்தினியை உதறி விட்டு என்னை திருமணம் செய் என்று அங்கமுத்துவை அன்பரசி வற்புறுத்தினாள். எரிச்சலில் அன்பரசியை கொன்று புதைத்தான் அங்கமுத்து.

இப்படி மிஸ்டு காலால் செக்ஸ் கொக்குகளிடம் சிக்கி சில பெண்கள் உயிரை இழந்து உள்ளனர். பல பெண்கள் கற்பை இழந்து உள்ளனர். சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியம் பிடித்தவர் போல உள்ளனர்.

ஸ்டெல்லமேரி, அன்பரசி வாழ்க்கையை பாடமாக கொண்டு செக்ஸ் கொக்குகளிடம் சிக்காமல் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றனர் போலீசார்..

எனவே மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்.

- Hussainghani

7 Nov 2009

புதிதாக சார்ஜா  திருச்சி இடையே விமான சேவை

ஏர் அரேபியா நிறுவன அதிகாரிகள் திருச்சி விமான நிலைய வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அரபு நாடுகளை மையமாக வைத்து இயக்கப்படும் விமான நிறுவனம் ஏர் அரேபியா. இந்த விமான நிறுவனம் இந்தியாவில் டில்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கோவை, ஹைதரபாத் உட்பட பல்வேறு நகரங்களில் விமானங்களை இயக்கி வருகிறது.

புதிதாக சார்ஜா திருச்சி இடையே விமானங்களை இயக்க முடிவு செய்து இந்திய விமான நிலைய ஆணைய குழுமத்திடம் அனுமதி கோரியுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இம்மாத இறுதிக்குள் விமான சேவையை துவக்கவுள்ளனர்.

இந்நிலையில், ஏர் அரேபியா விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கொண்ட குழுவினர் திருச்சி விமான நிலையத்திலுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

குறிப்பாக, விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், அதிகாரிகள் பயணிகளை கையாளும் விதம், அடிப்படை வசதிகள், ஓடுதளத்தின் தன்மை, விமான நிறுத்துமிடம் போன்றவை குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் ஆய்வு செய்துவிட்டு சார்ஜா புறப்பட்டு சென்றனர்.

22 Oct 2009

அன்புடன் எச்சரிக்கை....

19-10-09 அன்று மாலை சுமார் 6.00 மணியளவில் முத்துப்பேட்டையை சேர்ந்த இரு இளைஞர்கள் அதிரை- முத்துப்பேட்டை ரோட்டில் பல்சர் என்னும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இரு இளைஞர்களும் இறந்தார்கள்.

முத்துப்பேட்டை குண்டான் குளத்தெரு புரோஸ்கான் (28), ஆஸாத்நகர் மரைக்கான் (22). இரு சக்கர வாகனத்தில் சென்றால் இளைஞர்கள் அதிவேகமாக செல்கின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

அன்பான நண்பர்களே.. நமது குடும்பத்தில் உள்ள சகோதரர்கள், பிள்ளைகள், நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தயவுசெய்து மெதுவாக செல்ல சொல்லி அன்புடன் எச்சரிக்கை செய்யுங்கள். ஏனென்றால் இன்றைய விபத்தில் ஒரு சகோதரரின் உடல் ஊறுப்புகள் தனித்தனியாக அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்தது.

http://saharatamil.blogspot.com/2009/10/blog-post_20.html

உலகின் இளம் தலைமையாசிரியர்!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவருக்கு "உலகின் இளம் தலைமையாசிரியர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறது பி.பி.சி.

பி.பி.சி. செய்தி நிறுவனம் "கற்றுக்கொள்ளும் வேட்கை' என்ற பெயரில் புதிய செய்தித் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளது. உலகெங்கும் மிக மோசமான சூழல்களுக்கு இடையிலேயும் கற்றுக்கொள்ளும் வேட்கையோடு செயல்படுபவர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் நோக்கோடு இத்தொடரை பி.பி.சி. வெளியிடுகிறது.

இத் தொடரின் முதல் செய்தியாக மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பள்ளிக்கூடத்தைப் பற்றி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. உலகெங்கும் இன்னமும் கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வி ஒரு பெருங்கனவாகத்தான் இருக்கிறது.

பள்ளிக்கூடங்கள், மதிய உணவு, சீருடைகள், கல்வி உதவித்தொகை என்று பல்வேறு சலுகைகளை அரசுகள் அளித்தாலும்கூட மோசமான வறுமை கோடிக்கணக்கான குழந்தைகளை இன்னமும் இளம் தொழிலாளர்களாகவே வைத்திருக்கிறது.

இப்படிப்பட்ட மோசமான ஒரு சூழலிலிருந்து வெளிவந்திருப்பவர்தான் பாபர் அலி (16). குடும்பத்தின் முதல் மாணவரான பாபர் அலி தன்னுடைய வீட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள ராஜ் கோவிந்தா பள்ளியில் படித்துவருகிறார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதால், பாபர் அலிக்குப் பெரிய அளவில் செலவுகள் ஏதுமில்லை.

ஆனால், பிறரைப்போல குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ளாததோடு, குடும்பத்தினருக்கு மேலும் ஒரு சுமையைத் தரும் வகையில், தான் படிக்க வந்திருப்பதே ஒரு பெரிய காரியம்தான் என்கிறார் பாபர் அலி. அவர் சொல்வது உண்மைதான்.

பாபர் அலி பகுதியைச் சேர்ந்த - அவர் வயதை ஒத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கிடைக்கும் வேலையைச் செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கும் துர்பாக்கியமான நிலையிலேயே இருக்கின்றனர்.

ஆகையால், தனக்கு தன் குடும்பம் அளித்த மிகப் பெரிய கொடையாக பள்ளிக்கூட வாய்ப்பைக் கருதிய பாபர் அலி கல்வியில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்கிறார்.

ஆனால், பாபர் அலிக்கு பி.பி.சி. புகழாரம் சூட்ட காரணம் ராஜ் கோவிந்தா பள்ளியின் சிறந்த மாணவராக அவர் திகழ்வதற்காக அல்ல. பாபர் அலி விளையாட்டாகத் தொடங்கிய இன்னொரு காரியத்துக்காக.

அதாவது, அவர் விளையாட்டாகத் தொடங்கிய பள்ளிக்கூடத்துக்காக. அப்போது பாபர் அலிக்கு வயது 9. நம் வீட்டுப் பிள்ளைகள் விடுமுறை நாள்களில் "டீச்சர் விளையாட்டு' விளையாடுவதுபோல தன் வீட்டில் ஒரு நாள் "டீச்சர் விளையா'ட்டைத் தொடங்கினார் பாபர் அலி.

டீச்சர் - பாபர் அலி. மாணவர்கள் யார் என்றால், அங்குள்ள பிள்ளைகள். அதாவது, முன்னெப்போதும் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத ஏழைப் பிள்ளைகள். விளையாட்டு எல்லோருக்கும் பிடித்துப்போனது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளையாடத் தொடங்கினார்கள்.

விளையாட்டு ஒரு கட்டத்தைத் தாண்டியபோதுதான் தெரிந்தது பாபர் அலிக்கு, தன் சக நண்பர்களின் ஆர்வம் விளையாட்டின் மீதானது மட்டுமல்ல, கல்வியின் மீதானதும் என்று. பாபர் அலி தன்னுடைய விளையாட்டுப் பள்ளிக்கூடத்தை உண்மையான பள்ளிக்கூடமாக மாற்றினார்.

ஒரு புதிய வரலாறு அங்கு உருவாகத் தொடங்கியது. சொன்னால், பிரமித்துப்போவீர்கள். இப்போது பாபர் அலியின் பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் தெரியுமா? 800 பேர்! பாபர் அலி நடத்தும் இந்தப் பள்ளிக்கூடம் முற்றிலும் வித்தியாசமானது.

பாபர் அலியின் வீட்டு முற்றம், வீட்டைச் சுற்றியுள்ள கொட்டகைகள், மரத்தடிகளே இந்தப் பள்ளிக்கூடம். களிமண்ணில், கட்டாந்தரையில் என்று கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பாடம் கற்கிறார்கள் மாணவர்கள்.

ஆசிரியர்கள் பாபர் அலியும் அவருடன் படிக்கும் சில நண்பர்களும்தான். ஒவ்வொரு நாளும் தான் பள்ளிக்கூடம் சென்று வந்த பின்னர், இந்தப் பள்ளிக்கூடத்துக்கு மணியடிக்கிறார் பாபர் அலி. மணியோசை கேட்டதும் ஓடி வருகின்றனர் பிள்ளைகள்.

பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையிலுள்ள மூர்ஷிதாபாத் பகுதியில் மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது பாபர் அலியின் இந்தப் பள்ளிக்கூடம். மாற்றங்களுக்கு ஓர் உதாரணம் சம்கி ஹஜ்ரா (14). இந்தச் சிறுமி தன் தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார்.

சம்கியின் தந்தை ஊனமுற்றவர். எந்த வேலைக்கும் செல்ல இயலாத நிலையில் இருக்கிறார். பாட்டியும் அப்படியே. சம்கி அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து ஈட்டும் சொற்பத் தொகையிலேயே இந்தக் குடும்பம் வாழ்கிறது. பள்ளிக்கூடத்தை ஒருபோதும் அறிந்திராத சம்கி ஒரு நாள் விளையாட்டாக பாபர் அலியின் பள்ளிக்கூடத்துக்குச் சென்றார்.

இன்றோ முறையான பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கே சவால் விடும் வகையில் இவர் படித்து வருகிறார். பாபர் அலி தனக்கு கல்வி கொடுத்த கடவுள் என்று குறிப்பிடுகிறார் சம்கி. சரி. பாபர் அலி அப்படி என்னதான் பாடம் நடத்துகிறார்?

""நான் என் ஆசிரியர்களிடம் கேட்பதை இவர்களுக்கு அப்படியே சொல்கிறேன்; அவ்வளவுதான்'' என்கிறார் பாபர் அலி. தான் விரும்பும் சமூக மாற்றத்தை தன்னிலிருந்து தொடங்கிய பாபர் அலி மகத்தான மனிதன் என்று கொண்டாடுகிறது பி.பி.சி. உலகின் இளம் தலைமையாசிரியர் இவரே என்றும் பிரகடனப்படுத்துகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மூர்ஷிதாபாத்தின் இந்த இளம் தலைமையாசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பொருத்தமானதுதானே!

19 Oct 2009

பணம் சுரன்டும் செல்போன் கம்பேனிகள்

பணம் சுரண்டும் 'ப்ரீபெய்டு சிம்' ...உஷார்

மொபைல் போன் நிறுவனங்கள் பல, எப்படி எல்லாம் வருவாய் ஈட்ட முடியுமோ, அத்தனை வழிகளையும் கடைபிடிக்கின்றன. "வேல்யூ ஆடேட் சர்வீஸ்' எனக் கூறி, அதற்கும் கட்டணத்தை பிடுங்கி விடுகின்றன. இதிலும், "சபலிஸ்ட்'டுகளாக இருந்து விட்டால், மொபைல் போனில் நொடிக்கணக்கில் பணம் போவதே தெரியாது.

நாடு முழுவதும் பல மொபைல் நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மொபைல் நிறுவனங்கள், அழைப்புக்கான கட்டணங்களை குறைக்கவும் கட்டணம் வசூலிக்கின்றன.

சீரற்ற கட்டண முறையால் மக்கள் எந்த நெட்வொர்க்கை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். உண்மையான கட்டணத்திற்கும், சலுகை கட்டணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

பிறர் அழைக்கும்போது, அவர்களுக்கு "ரிங்' ஒலிக்கு பதிலாக, ஒரு பாட்டு கேட்கும். அதே போன்று, பிறர் அழைக்கும்போது, "ரிங்' டோனுக்கு பதிலாக, பாட்டு பாட வைத்துக் கொள்ளலாம்.

இப்படி தேவையான திரைப்பட பாடல்களை "ரிங்டோனாக' பயன்படுத்திக் கொள்ள தனிக் கட்டணம். வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள கட்டணம் இருந்தாலும், சில மொபைல் போன்களில் பல யுக்திகளை பயன்படுத்தி பணத்தை கறந்து விடுகின்றனர்.

குறிப்பாக, இது, "ப்ரீ பெய்ட்' சிம்கார்டுகளை பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பற்ற நிலையே உள்ளது."ப்ரீ பேய்ட்' வாடிக்கையாளர்களின் போனுக்கு, "சர்வீஸ் மெசேஜ்' என அனுப்புகின்றனர். இந்த தகவலை படிக்க, முறையான பொத்தனை அழுத்தாமல், எப்போதும் பயன்படுத்தும் பட்டனை அழுத்திவிட்டால்போதும்.

அவ்வளவு தான்... உடனடியாக பணம் "ஸ்வாக' ஆகிவிடும். 30, 40, 50 ரூபாய் எவ்வளவாக இருந்தாலும், 'நீங்கள் சிறப்பு சேவையை பெற்றுள்ளீர்கள், அதற்கான மாதாந்திர கட்டணம் இது' என தகவல் வரும்.

ஜோதிடம், தினப்பலன், விட், "ஏ ஜோக்' சினிமா பாடல், வெப் பிரவுசிங், என எவ்வளவோ "எக்ஸ்ட்ரா' விஷயங்களை மொபைல் போன்கள் அளிக்கின்றன. இவற்றிற்கு தனி கட்டணம் வசூலித்து விடுகின்றனர்.

பெண் "சபலிஸ்ட்' ஆகவோ, விளையாட்டில் ஆர்வம் உள்ளவராகவோ, இருந்து விட்டால், அவ்வளவு தான் காசு போவதே தெரியாது. உங்களுக்கு பெண் நண்பர்கள் வேண்டுமா?...இந்த எண்ணை தொடர்பு கொண்டு எங்களிடம் "சப்ஸ்கிரைப்' செய்யுங்கள்.

உங்கள் நகரிலேயே, உங்களுடன்பேச சிநேகிதிகள் கிடைப்பர்' என்ற "நட்பு' விஷயத்தையும் ஏற்படுத்தி கொடுக்கின்றன மொபைல் போன் நெட்வொர்க்குகள்.

உண்மையிலேயே, அப்படி எந்த நட்பும் கிடைப்பதில்லை. பெண்களின் நட்பிற்காக வேண்டி, அனுப்பப்படும் மெசேஜ் ஒவ்வொன்றிற்கும் இரண்டு ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். சாதாரண எஸ்.எம்.எஸ்.,சிற்கு 25 பைசாவாக இருந்தால், இந்த எஸ்.எம்.எஸ்., சிற்கு பல மடங்கு அதிக கட்டணம்.

இதேபோன்று, மறைக்கப்பட்ட எண் கொடுக்கப்பட்டு, பெண்ணுடன் பேச நினைத்தால், குறைந்தபட்சம் நிமிடத்திற்கு மூன்று ரூபாய் முதல் கட்டணம் துவங்கி, ஆறு ரூபாய் வரை இருக்கும்.

ஐந்து நிமிடம் பேசி முடிப்பதற்குள்,"ப்ரீ பெய்டு' சிம்மில் போடப்பட்ட பணம் கரைந்து விடும். பெண்ணோடு பேச ஆசைப்பட்டால், நிச்சயம் அது நட்பாக இருக்காது. எதிர்முனையில் ஏதோ கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட குரலாக வந்து விழும். இந்த குரல் பதிவு முடிவதற்கு முன் பணம் காணாமல் போய்விடும்.

இது, இப்படி இருக்க, இன்னும் சில நிறுவனங்கள், யாகூ, ரீடிப் போன்ற நிறுவனங்களின் மெசஞ்சர் சர்வீஸ் உடன் இணைக்கப்பட்ட "சாட்' வசதியும் உள்ளன. இந்த சாட் வசதியிலும், அனுப்பப்படும் ஒவ்வொரு தகவலுக்கும் 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.

நவீன வசதியுடன், "வெப்' வசதியுள்ள மொபைல் போனாக இருந்தால், அதில், "சூடான போஸ்டர்' வேண்டுமா? "ஸ்க்ரீன் சேவர்' வேண்டுமா...எனக் கேட்டு நச்சரித்து எஸ்.எம்.எஸ்., வந்து சேரும்.

இப்படி தொல்லை தரும் எஸ்.எம்.எஸ்.,எதையாவது தவறாக அழுத்தி விட்டால், ரீசார்ஜ் செய்த பணத்தில் கட்டணம் பழுத்து விடும். ஆபாசமாக படம் வந்து விழும். அப்பட்டமாக, இப்படியெல்லாம் பல மொபைல் போன் நிறுவனங்கள், தேவையற்ற சேவையை ஏற்படுத்தி, வர்த்தகத்தை மேற்கொள்கின்றன."

வேல்யூ ஆடேட் சர்வீஸ்' எனக் கூறி, கட்டணத்தை வசூலித்தும் விடுகின்றன. எனவே, மொபைல் போன் பயன்படுத்தும்போது, தேவையான விஷயங்களை மட்டும் தேடுங்கள். குப்பைகளை கிளறினால், பழுத்து விடும் பர்ஸ்...!"இந்த சர்வீஸ் மெசேஜ் வசதி வேண்டாம், நிறுத்துங்கள்' என,கூறினாலும் நிறுத்தப்படுவதில்லை.

தொல்லை தொடர்ந்து கொண்டேஇருக்கும்.இதே போன்று மொபைல் எஸ்.எம்.எஸ்.,களில் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள், பொருட்களை விளம்பர படுத்த தொல்லை எஸ்.எம்.எஸ்.களை அனுப்புவதுண்டு. இவற்றையும் தடுக்க முடியாது.

இவையெல்லாம் தவிர, பண்டிகை காலங்களில் எஸ்.எம்.எஸ்., கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி விடுகின்றன. வாழ்த்து இல்லாமல், அவசரத்திற்காக அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.,கூட இந்த நாளில் அதிகம் தான்.

தகவல் : தினமலர்

8 Oct 2009

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது.

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

-Dr.M.Sathick